90ஜிபி ஆப்பிள் டேட்டாவை ஹேக் செய்து வேலை வாய்ப்பு கேட்ட 16 வயது சிறுவன்.!

உலகிலேயே மிகச் சக்தி வாய்ந்த செக்யூரிட்டி சிஸ்டம் ஆப்பிள் நிறுவனத்தினுடையது என்று ஆப்பிள் நிறுவனம் மீசையை முறுக்கிக்கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும்.

By Sharath
|
Apple 'unhackable' hacked by a school boy and asked for job offer.!

செக்யூரிட்டி என்ற வார்த்தை கேட்டவுடன், நமக்கு என்ன நினைவுக்கு வரும்? பாதுகாப்புதானே.! அந்த பாதுகாப்பு என்ற வார்த்தைக்கே பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிட்டது இன்று. நமது மொபைல் போன்களில் நாம் சேமித்து வைக்கும் அணைத்து தனிப்பட்ட டேட்டாகளும் சூப்பர் ஸ்ட்ராங் செக்யூரிட்டி பாதுகாப்புடனே பாதுகாக்கப்படுகிறது.

<strong>நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1.!</strong>நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1.!

உலகிலேயே மிகச் சக்தி வாய்ந்த செக்யூரிட்டி சிஸ்டம் ஆப்பிள் நிறுவனத்தினுடையது என்று ஆப்பிள் நிறுவனம் மீசையை முறுக்கிக்கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும். ஆப்பிள் நிறுவனத்தின் மீசையை, மீசை இல்லாத ஒரு சிறுவன் ஆணிவேர் வரை சென்று அசைத்துவிட்டான்.

16 வயது பள்ளி சிறுவன்

16 வயது பள்ளி சிறுவன்

ஆப்பிள் நிறுவனத்தின் பயனர் டேட்டாக்களை ஹேக் செய்யவே முடியாதென்று ஆப்பிள் நிறுவனம் உறுதியாக இன்று வரை தெரிவித்து வந்தது. ஆனால் ஆப்பிள் செக்யூரிட்டி சிஸ்டம் எல்லாம் எனக்கு ஜுஜுபி என்று ஆஸ்திரேலியா வை சேர்ந்த 16 வயது பள்ளி சிறுவன் ஆப்பிள் இன் மெயின்ஃபிரேம் சிஸ்டத்தை ஹேக் செய்துள்ளான்.

திருடப்பட்ட 90ஜிபி டேட்டா

திருடப்பட்ட 90ஜிபி டேட்டா

இந்தப் பள்ளி சிறுவன் ஹேக் செய்தது மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் 90ஜிபி தனிப்பட்ட டேட்டா மற்றும் சில ஆப்பிள் பயனர்களின் தனிப்பட்ட டேட்டாக்களையும் ஹேக் செய்து தனிப்படை சேமித்து வைத்துள்ளான். இதில் அவன் செய்த உச்ச சேட்டை என்னவென்றால்? அவனுடைய தனிப்பட்ட ஹார்டு டிரைவ் இல் "ஹேக்கி ஹேக் ஹேக்" என்ற போல்டர் இல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட 90ஜிபி டேட்டாவை சேமித்து வைத்திருக்கிறான்.

ஹேக்கிங் ட்ரிக்ஸ்

ஹேக்கிங் ட்ரிக்ஸ்

இந்தச் சிறுவன் ஆப்பிள் மெயின்ஃபிரேம் சிஸ்டத்தை பல ஹேக்கிங் ட்ரிக்ஸ் பயன்படுத்தி ஹேக் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு 16 வயது சிறுவன் ஆன்லைன் பைபாஸ் சிஸ்டம் முறை மற்றும் விபிஎன்(VPN) கம்ப்யூட்டர் டனெல்(TUNNEL) ஹேக்கிங் முறையெல்லாம் பயன்படுத்தி ஆப்பிள் சிஸ்டம் ஐ ஹேக் செய்துள்ளான்.

ஆப்பிள் இன் அக்சஸ் கோடு எண்

ஆப்பிள் இன் அக்சஸ் கோடு எண்

இதை விட இன்னொரு சூப்பர் ஷாக்கிங் மேட்டர் சொல்றேன் கேளுங்கள். ஆப்பிள் இன் அக்சஸ் கோடு எண்களைப் பயன்படுத்தி, அவன் ஹேக் செய்து ஆப்பிள் பயனர்களின் டேட்டாகளை அக்சஸ் செய்துள்ளான் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கே ஷாக் கொடுத்துள்ளது. என்ன மாதிரியான பயனர்களின் டேட்டாகளை இவன் ஹேக் செய்துள்ளான் என்பது இன்னும் நமக்குத் தகவல் கிடைக்கவிலை.

ஆஸ்திரேலியா போலீஸ்

ஆஸ்திரேலியா போலீஸ்

என்னதான் பல சூப்பர் ஹேக்கிங் முறைகளை அவன் பயன்படுத்தி இருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் அவன் ஹேக்கிங் செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர் இன் சீரியல் எண்களைக் கண்டுபிடித்து, ஆஸ்திரேலியா போலீஸ்ஸின் உதவியுடன் அவனைக் கைது செய்துவிட்டது.

"ஹேக்கி ஹேக் ஹேக்"

அந்தச் சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 2 ஆப்பிள் லேப்டாப், 1 ஆப்பிள் போன் மற்றும் 1 ஹார்டுடிஸ்க் ஐ பறிமுதல் செய்துள்ளது. அந்த தனிப்பட்ட ஹார்டு டிஸ்க் இல் தான் "ஹேக்கி ஹேக் ஹேக்" என்ற போல்டெர் இல் ஆப்பிள் நிறுவனத்தின் திருடப்பட்ட 90ஜிபி டேட்டாவை சேமித்து வைத்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப் சேட்டை

வாட்ஸ் ஆப் சேட்டை

இத்துடன் அவன் சேட்டை குறையவில்லை, வாட்ஸ் ஆப் மூலம் அவன் நம்பர்களுக்கும் ஆப்பிள் மெயின்ஃபிரேம் சிஸ்டத்தை எப்படி ஹேக் செய்தான் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறான்.

வாழ்க டிஜிட்டல் ஆஸ்திரேலியா.!

வாழ்க டிஜிட்டல் ஆஸ்திரேலியா.!

சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனின் தரப்பு வக்கீல் கூறியது நீதிபதியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது தான் அந்தச் சிறுவனின் கனவாம், அதற்காகத்தான் இப்படி ஒரு வேலை செய்ததாக சிறுவனின் சார்பாக அவன் தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை, தீர்ப்பை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

வாழ்க டிஜிட்டல் ஆஸ்திரேலியா.!

Best Mobiles in India

English summary
Australian boy who hacked into Apple network admired the group, court told : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X