பாக்கெட் சைஸில் ப்ரொஜெக்டர்.. உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் போர்ட்டபிள் Projector இதான்.. விலை என்ன தெரியுமா?
ஆர்சன் (Aurzen) நிறுவனம் உலகத்தின் முதல் ட்ரை-ஃபோல்ட் ட்ரூலி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (The World's First Tri-Fold Truly Portable Projector) சாதனமான ஆர்சன் ஜிப் (Aurzen ZIP) ப்ரொஜெக்டரை CES 2025 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. பாக்கெட் சைஸில் இப்படி இப்படியொரு அதிநவீன ப்ரொஜெக்டர் சாதனத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. சரி, CES 2025 நிகழ்வில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த ஆர்சன் ஜிப் ட்ரை-ஃபோல்ட் ட்ரூலி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (Aurzen ZIP Tri-Fold Truly Portable Projector) பற்றி முழுமையான தகவலை பார்க்கலாமா? வாங்க நேர விபரத்திற்கு செல்லலாம்.
எண்டெர்டைன்மெண்ட் டெக்நாலாஜி ஆகிய இரண்டையும் கலந்து ஒரே தயாரிப்பில் வழங்கி மக்களை கவர்ந்து வரும் நிறுவனம் தான் ஆர்சன் (Aurzen). இந்த பிராண்டின் பெயரில் இருக்கும் Z என்ற எழுத்து போல, மூன்று மடிப்புகளாக மடித்து விரியக்கூடிய ஒரு புதுமையான கையடக்க ப்ரொஜெக்டர் சாதனத்தை Aurzen நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. CES 2025 நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் பார்வையையும் இந்த டிவைஸ் வென்றது என்பதில் சந்தேகம் இல்லை.

பாக்கெட் சைஸில் ப்ரொஜெக்டர்.. உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் போர்ட்டபிள் Projector இதான் (The World's First Tri-Fold Truly Portable Projector):
ப்ரொஜெக்டர் சாதனம் என்று சொன்னாலே, உங்கள் நினைவில் என்ன மாதிரியான ஒரு பின்பம் காட்சியளிக்கிறது சொல்லுங்கள். கட்டாயமாக ஒரு பெரிய வெள்ளை பெட்டி போன்ற வடிவத்தில், கனமான எடையுடன், ஒரு பெரிய லென்ஸ் அந்த பெட்டியின் மையப்பகுதியிலோ அல்லது ஏதேனும் ஒரு ஓரமாகவோ இருப்பது போன்ற ஒரு சாதனம் தான் உங்கள் கண்களுக்குள் வந்து சென்றிருக்கும்.
ஆனால், இனிமேல் உங்களிடம் ப்ரொஜெக்டர் என்று சொன்னால் Aurzen ZIP மாடல் தான் கண்ணிற்குள் வந்து செல்லும். ப்ரொஜெக்டரின் உருவத்தையே மாற்றி, ஒரு கையடக்க சாதனமாக மாற்றியது மட்டுமின்றி, ப்ரொஜெக்டர் ஸ்டாண்ட் என்று எதுவும் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் நிற்க வைத்து ப்ராஜெக்ட் செய்யும் சாதனமாக இந்த டிவைஸை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் மூன்றாக மடித்து நீட்ட அனுமதிக்கும் ட்ரை-ஃபோல்ட் ப்ரொஜெக்டர் சாதனமாக வெளிவந்துள்ளது.
ஆர்சன் ஜிப் ட்ரை-ஃபோல்ட் ட்ரூலி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (Aurzen ZIP Tri-Fold Truly Portable Projector):
இந்த ஆர்சன் ஜிப் ப்ரொஜெக்டரை நீங்கள் அன்ஃபோல்டு செய்தலே இது தானாக ON ஆகிவிடுகிறது. நீங்கள் எந்த இடத்தில் ப்ராஜெக்ட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த இடத்தில் சில நொடிகளில் ப்ராஜெக்ட் செய்கிறது. இதில் ஜீரோ லேக் ஆட்டோ போக்கஸ் அம்சமும் இடம்பெறுகிறது. இதனால், எந்தவித தாமதமும் இல்லாமல், ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய படம் உடனுக்குடன் ஆட்டோ போக்கஸ் செய்யப்படுகிறது.
உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop), டேப்லெட் (Tablet), கம்ப்யூட்டர் (Computer) என்று சாதனமாக இருந்தாலும், அந்த சாதனத்தில் உள்ள தகவல்களை சிங்கிள் கிளிக்கில் உடனே மிர்ரரிங் (single click mirroring feature) செய்ய இந்த Aurzen ZIP Projector அனுமதிக்கிறது. இது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS ஆகிய இரண்டு தளங்களில் உள்ள சாதனங்களுடன் இணக்கமாக இயங்குகிறது.
Aurzen ZIP ப்ரொஜெக்டர் விலை (Aurzen ZIP Projector Price):
PD பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இன்னும் ஏராளமான அம்சங்களை இந்த மினி ப்ரொஜெக்டர் சாதனம் ஆதரிக்கிறது. இதன் அளவு பற்றி பேசுகையில், இந்த Aurzen ZIP ப்ரொஜெக்டர் டிவைஸ் 84 x 78 x 26 mm என்ற அளவுடன், வெறும் 280g எடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 100 ANSI லுமென்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது.
இந்த ஆர்சன் ஜிப் ட்ரை-ஃபோல்ட் ட்ரூலி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (Aurzen ZIP Tri-Fold Truly Portable Projector) சாதனம் $249 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 21,386 மட்டுமே. மார்ச் மாதம் முதல் இந்த சாதனம் உலக சந்தையில் ஷிப்பிங் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








