இவ்ளோ அவசரமா? Jio மற்றும் Airtel பயனர்கள் கவனத்திற்கு.. எப்போனாலும் இது நடக்கும் ரெடியா இருங்க!

|

Jio 5G மற்றும் Airtel 5G சேவை வழங்கும் பகுதிகளை விரிவுப்படுத்தி வருகின்றன. நினைத்ததை விட வேகமாக 5ஜி சேவை பல்வேறு நகரங்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. எனவே 5ஜி சேவைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் ரெடியாக இருப்பது நல்ல விஷயமாகும்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வேகமாக தங்களது 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. அதாவது 5ஜி சேவைக் கிடைக்கும் இந்திய நகரங்களின் எண்ணிக்கை நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. அதன்படி ஏர்டெல் 5ஜி சேவை தற்போது குருகிராமிலும் ஜியோ 5ஜி சேவை டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுவதும் கிடைக்க இருக்கிறது. ஏர்டெல் 5ஜி சேவை தற்போது 10 நகரங்களில் கிடைக்கிறது.

Vodafone Idea (Vi)

Vodafone Idea (Vi)

Vodafone Idea (Vi)-ஐப் பொறுத்தவரை, நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவைகளை எப்போது வழங்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மார்ச் 2024க்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை கிடைக்கச் செய்வதாக விஐ உறுதி அளித்து இருக்கிறது.

Jio Vs Airtel

Jio Vs Airtel

அதிக வாடிக்கையாளர்கள் உடன் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிகழ்ந்து வருகிறது. முன்னதாக வாடிக்கையாளர்களை இழந்த நிலையில் இருந்த ஏர்டெல் சமீப காலமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர் நடவடிக்கை எடுத்து வருகிறது ஏர்டெல்.

ஜியோ 5ஜி விவரம்

ஜியோ 5ஜி விவரம்

அதன்படி சமீபத்தில் அறிமுகமான 5ஜி சேவையிலும் இந்த போட்டி தொடர்கிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ 5ஜி சேவையை கூடுதல் நகரங்களில் விரிவுப்படுத்துவதாக வியாழக்கிழமை அறிவித்தது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரணாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் ஜியோ 5ஜி கிடைக்கிறது. விரைவில் மேற்கு வங்கம் முழுவதும் கிடைக்க இருக்கிறது.

பாரதி ஏர்டெல் 5ஜி விவரம்

பாரதி ஏர்டெல் 5ஜி விவரம்

அதேபோல் பாரதி ஏர்டெல் தனது 5ஜி சேவையை கூடுதல் நகரங்களில் விரிவுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் தனது 5ஜி சேவையை பானிபட்டில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் குருகிராமிலும் தனது 5ஜி சேவையை வழங்கத் தொடங்கி இருக்கிறது.

ஏர்டெல் 5ஜி சேவை

ஏர்டெல் 5ஜி சேவை

இலக்கு நிர்ணயித்ததை விட முன்னதாகவே ஏர்டெல் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 மார்ச் இறுதிக்குள் ஏர்டெல் 5ஜி சேவை நாட்டின் அனைத்து மூலைகளிலும் சென்றடையும் என தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தினார். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை நாடு முழுவதும் டிசம்பர் 2023 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

4ஜி சிம் மூலமாகவே 5ஜி அணுகல்

4ஜி சிம் மூலமாகவே 5ஜி அணுகல்

ஏர்டெல் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம்கார்ட் எதுவும் தேவையில்லை. அதாவது பயனர்கள் தற்போதுள்ள 4ஜி சிம் மூலமாகவே 5ஜி அணுகலை பெறலாம். எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சேவையின் விலை குறித்து விவரங்களை வெளியிடவில்லை. தற்போதுள்ள 4ஜி ரீசார்ஜ் திட்டத்தில் 5ஜி சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.239க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுத்தாலே 5ஜி இணைய வேகத்தை பெறலாம்.

5ஜி வேகம்

5ஜி வேகம்

ஏர்டெல் 5ஜி சேவையை பொறுத்தவரை சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்டெல் பயனர்கள் 5ஜி சேவையை எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தலாம் அனுபவிக்கலாம். ஏர்டெல் 5ஜி சேவை 5ஜி பிளஸ் என அழைக்கப்படுகிறது. ஏர்டெல் 5ஜி சேவையின் வேகம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏர்டெல் 5ஜி சேவையின் வேகம் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதன்படி பயனர்கள் 700Mbpsக்கும் மேல் பதிவிறக்க வேகத்தை எட்ட முடிந்ததாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Attention Jio and Airtel users.. Be ready for this! 5G service could be launched in your area anytime soon!.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X