உஷாரா ஓட்டுங்க! உயர்த்தப்பட்ட அபராத தொகை.. ஆன்லைனில் Traffic Fine செலுத்துவது எப்படி?

|

அக்டோபர் 26 ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிமுறை மீறல் அபாரதம் உயர்வு அமலுக்கு வருகிறது. எந்த விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம், ஆன்லைனில் அபராதம் எப்படி செலுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

மோட்டார் வாகனச் சட்ட திருத்தம்

மோட்டார் வாகனச் சட்ட திருத்தம்

முந்தைய நிலையை விட தற்போது பல மடங்கு போக்குவரத்து அபரதாம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் 2019ஐ அமல்படுத்துவதில் தாமத நிலை நீடித்தது. இந்த நிலையில் மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

போக்குவரத்து விதிமுறை மீறல்

முன்பைவிட பல மடங்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதோடு போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் போக்குவரத்துத் துறை, போக்குவரத்து போலீஸார் மட்டுமின்றி இனி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகை

அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகை

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500க்கு பதிலாக ரூ.5000 அபராதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி ஹெல்மட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல் சிக்னலை மீறினால் ரூ.500 அபராதமும் அதிக சுமையுடன் வாகனம் இயக்கினால் ரூ.20000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கணினி சேவையகத்தில் அப்டேட்

கணினி சேவையகத்தில் அப்டேட்

இந்த முறையானது சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் அமலுக்கு வந்திருக்கிறது. புதிய மேம்படுத்தப்பட்ட அபராதத் தொகை சென்னை பெருநகர காவல்துறையின் கணினி சேவையகத்தில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷாராக நடந்துக் கொள்வது அவசியம்

உஷாராக நடந்துக் கொள்வது அவசியம்

தமிழகத்தில் இனி வாகனம் ஓட்டுபவர்கள் கவனமுடன் அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். விபத்துக்கள் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது ஒவ்வொரு வாகன ஓட்டிகளின் கடமையாகும். ஒருவேளை அபராதத்திற்கு உள்ளானால் அதை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். எப்படி அபராதத் தொகையை ஆன்லைனில் செலுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்

விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்

போக்குவரத்து விதிகளை பராமரிக்க அரசு, சாலைகளில் கேமராக்கள் மற்றும் பிற சென்சார்களை நிறுவி இருக்கிறது. விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க இந்த சாதனங்கள் வழிவகுக்கிறது. டிஜிட்டல் இந்தியா அறிவிப்பு பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓட்டுனர்களுக்கான அபராதம் மற்றும் சலான் செலுத்தும் முறை ஆன்லைனில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

டிராஃபிக் சலான் நிலையை எப்படி சரிபார்ப்பது?

டிராஃபிக் சலான் நிலையை எப்படி சரிபார்ப்பது?

Step 1. https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்துக்குள் உள்நுழைய வேண்டும்

Step 2. அதில் 'Get Challan Details' என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

Step 3. தற்போது வாகன எண்ணை உள்ளிட்டு, திரையில் காட்டப்டும் Captcha குறியீட்டை உள்ளிட வேண்டும்.

Step 4. பின் Get Details என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

இப்படி செய்தால் உங்கள் வாகனத்தின் மீது டிராஃபிக் சலான் இருக்கும் பட்சத்தில், அதன் நிலை என்ன என்பது காட்டப்படும்.

ஆன்லைனில் டிராஃபிக் சலானுக்கு பணம் செலுத்துவது எப்படி?

ஆன்லைனில் டிராஃபிக் சலானுக்கு பணம் செலுத்துவது எப்படி?

சலான் விவரங்களை பார்த்த உடன், டிராஃபிக் சலானை ஆன்லைனில் எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Step 1. மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை முழுமையாக மேற்கொண்ட உடன் டிராஃபிக் சலான் இருக்கும் பட்சத்தில் அதில் Pay Now என்ற விருப்பம் காட்டப்படும்.

Step 2. சலான்கள் இருக்கும் பட்சத்தில் Pay Now என்ற விருப்பம் காட்டப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

Step 3. பரிவர்த்தனையை தொடங்க உங்கள் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

Step 4. இந்த செயல்பாடு அனைத்தும் முடிந்த பிறகு அபராதம் விதிக்கப்பட்ட மாநில மின்-சலான் கட்டண இணைய தளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

Step 5. இதில் உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்ட்டை பயன்படுத்தி சலான் செலுத்தலாம். இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவும் தொகையை செலுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Attention Drivers! Traffic Fine Increased: Just know How to Pay fine through online?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X