Home
News

கரண்ட் பில்லை கம்மி செய்யும் புது Atomberg ஸ்மார்ட் சீலிங் ஃபேன்! விலை என்ன தெரியுமா?

இந்த நவீனமயமான காலத்தில், எல்லாமே ஸ்மார்ட் ஆகிவிட்டது. கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் முதல் ஏசி, பிரிட்ஜ் என்று எல்லாமே இப்போது அதிநவீனமான ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. மக்களின் பயன்பாட்டை எளிதாக்கவும், மின்சார தேவையை குறைக்கவும் இந்த ஸ்மார்ட் சாதனங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன.

இதை மிக சரியாக செய்வதில் ஆட்டோம்பெர்க் (Atomberg) நிறுவனமும் ஒரு பங்கை கொண்டுள்ளது. சீலிங் ஃபேன் இல்லாத வீடே இருக்க முடியாது. பெரும்பாலான வீடுகளில் இந்த சாதனம் இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது தான் உங்கள் EB பில்லின் பாதி தொகையை உட்கொள்கிறது. இத்தகைய சாதனத்தை ஸ்மார்ட் அம்சத்துடன் வழங்கி, மிசார தேவையை குறைப்பதில் ஆட்டோம்பெர்க் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

கரண்ட் பில்லை கம்மி செய்யும் புது Atomberg ஸ்மார்ட் சீலிங் ஃபேன்!

ஆட்டோம்பெர்க் நிறுவனம் சமீபத்தில் ஆட்டோம்பெர்க் ஸ்மார்ட் 2.0 (Atomberg Smart 2.0) சீரிஸ் வரிசையில் 4 புதிய ஸ்மார்ட் சீலிங் ஃபேன் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை, ஸ்மார்ட் அம்சத்துடன் செயல்படுகிறது. இந்த புதிய சீலிங் ஃபேன்கள் வாய்ஸ் கண்ட்ரோல், IOT மற்றும் ரிமோட் அம்சத்துடன் வருகிறது. மின்சார தேவையை குறைக்க இதில் பிரத்தியேக அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஃபேன்கள் அலெக்ஸா மற்றும் வாய்ஸ் கமாண்ட் மூலம் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேன் BLDC தொழில்நுட்பத்துடன் இயங்கும் மோட்டார்களை கொண்டுள்ளது. உங்கள் வாழ்கை முறைக்கு ஏற்ற படி, இந்த ஸ்மார்ட் ஃபேனின் செட்டிங்கை நீங்கள் மாற்றம் செய்துகொள்ளலாம். ஸ்லீப் மோட், டைமர் மோட் என்று பல விதமான ஸ்மார்ட் மோட் அம்சத்தையும் இந்த ஸ்மார்ட் சீலிங் ஃபேன்கள் வழங்குகின்றன.

இந்த ஆட்டோம்பெர்க் ஸ்மார்ட் 2.0 (Atomberg Smart 2.0) ஸ்மார்ட் ஃபேன்களின் மற்றொரு அட்டகாசமான அம்சம் என்னவென்றால், இது உங்கள் அறைக்கு தேவையான வெளிச்சத்தை வழங்கும் ஸ்மார்ட் லைட் உடன் வருகிறது. ஆம், இதில் 3 விதமான லைட்டிங்கை வழங்கும் LED லைட்களும் உள்ளது. இது ஸ்மார்ட் ஃபேனாக மட்டுமில்லாமல், ஸ்மார்ட் லைட் ஆகவும் செயல்படுகிறது.

இதில் ஆட்டோம்பெர்க் அரிஸ் ஸ்டார்லைட் (Atomberg Aris Starlight) ஃபேன் ABS பிளேட் உடன் வருகிறது. இது சத்தமில்லாத ஃபேன் அனுபவத்தை வழங்கியுள்ளது. இன்று முதல் Atomberg வலைத்தளம் மூலம் இந்த ஸ்மார்ட் ஃபேன்கள் விற்பனைக்கு வாங்க கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் ஃபேன்களின் விலை பற்றி பேசுகையில், இதன் ஆட்டோம்பெர்க் ரெனீசா ஸ்மார்ட் + சீலிங் ஃபேன் (Atomberg Renesa Smart + Ceiling Fan) ரூ.4,990 என்ற விலையில் கிடைக்கிறது.

ஆட்டோம்பெர்க் ஸ்டூடியோ ஸ்மார்ட் சீலிங் ஃபேன் (Atomberg Studio Smart + Ceiling Fan) விலை ரூ. 5,790 மட்டுமே. அதேபோல், ஆட்டோம்பெர்க் அரிஸ் சீலிங் ஃபேன் (Atomberg Aris Ceiling Fan) விலை ரூ. 7,999 மட்டுமே. இறுதியாக ஆட்டோம்பெர்க் அரிஸ் ஸ்டார்லைட் சீலிங் ஃபேன் (Atomberg Aris Starlight Ceiling Fan) ரூ. 8,350 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Atomberg Smart 2.0 Ceiling Fan with IoT and remote launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X