ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ATM கட்டணம்.. அளவை மீறினால் இந்த சேவைகளுக்கும் கட்டணம் உண்டு - RBI அறிவிப்பு..

|

ATM இயந்திரங்களில் இருந்து மக்கள் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கியால் உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது மீண்டும் இந்த கட்டணம் அதிகரிக்கப்படுவது மக்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ATM கட்டணம்.. அளவை மீறினால் இனி கட்டணம்..

ATM இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் பரிவர்த்தனை கட்டணம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாகப் பணம் எடுத்துக் கொள்ளும் சேவை போன்ற பரிவர்தனைகளுக்கான கட்டணங்கள் சில ஆண்டுக்கு முன்னர் திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ரிசர்வ் வங்கி இந்த கட்டணத்தில் மாற்றங்களை மேற்கொண்டு புதிய கட்டண முறைகளைத் திருத்தி அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ATM பரிவர்த்தனை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு இனி இந்த புதிய கட்டண முறை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட மொத்தம் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போது வரை கட்டணம் ரூ. 15 ஆக இருக்கிறது. இனி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்த குறிப்பிட்ட கட்டணம் ரூ. 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை அல்லாத பிற சேவை பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்திலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த சேவைக்கான கட்டணம் ரூ. 5 ஆக இருந்தது, தற்பொழுது வெளியான அறிவிப்பின் படி இது இனி வரும் 1 ஆம் தேதி முதல் ரூ. 6 ஆக வசூலிக்கப்படும்.

அதேபோல், இதர வங்கிகளின் ATM இயந்திரத்தில் மாதத்துக்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்க பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால் நடைபெறும் பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 என்று வசூலிக்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1, 2022 முதல் ரூ.21 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
ATM Withdrawal Charges Debit and Credit Card Fee Set to Increase From August 1st : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X