ATM மையங்களில் Mobile போன் பயன்படுத்த தடை.. குறிப்பாக இந்த வயதுடையவர்கள் யூஸ் பண்ணவே கூடாது.. ஏன் தெரியுமா?
ஏடிஎம் (ATM) மையங்களில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் நேரங்களில், உள்ளே இருக்கும் நபர் மொபைல் போன் மூலம் அழைப்பில் இருப்பதும், போனில் மற்றவருடன் பேசிக்கொண்டிருப்பதும் இனி தடை செய்யப்படுவதாக (no phone calls inside ATM) கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் விதிமுறை நடைமுறைக்கு என்ன காரணம்? எந்த நாட்டில் இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது? இந்த விதி ஏன் முக்கியமானது என்பது போன்ற முழு விபரங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஜப்பானில் உள்ள ஒசாகா நகரத்தில் இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் பொழுது, மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது என்று அந்த நாட்டின் அரசாங்கம் புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணம் எடுக்கும் முதியவர்கள் யாரும் போனில் பேசிக்கொண்டே ஏடிஎம் சேவையை பயன்படுத்த கூடாது என்று கண்டிப்புடன் ஜப்பான் தெரிவித்துள்ளது.

ATM மையங்களில் Mobile போன் பயன்படுத்த தடை.. குறிப்பாக இந்த வயதுடையவர்களுக்கு தடை:
ஆம், பெரியவர்கள் அல்லது முதியவர்கள் என்று கருதப்படும் யாரும் இனிமேல், ஏடிஎம் சேவையை பயன்படுத்தும் பொழுது, அவர்களுடைய போனில் உரையாடிக் கொண்டோ அல்லது போனை பயன்படுத்திக் கொண்டோ ATM சேவையை பயன்படுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்டு தெளிவாக கூற வேண்டுமென்றால், 65 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள் ATM மையங்களுக்குள் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் திடீரென ATM மையங்களில் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று ஜப்பான் அரசு விதி விதித்தது என்று பார்க்கையில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 72.2 பில்லியன் தொகைக்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் பல இடங்களில் வசிக்கும் மக்களிடம் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பணத்தை இழந்தவர்களில் வயத்தவர்களின் எண்ணிக்கை தான் மிஷாவும் அதிகமாக இருந்திருக்கிறது.
வயதானவர்களை தான் மோசடி செய்யும் நபர்களின் மெயின் டார்கெட்:
யாகுசா உள்ளிட்ட குற்றவியல் கும்பல்களால் திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட மோசடித் திட்டங்களால் ஏற்பட்ட சேத்தால், ஜப்பான் அரசு இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, ATM மையங்களை பயன்படுத்தும் பொழுதும், திறந்தவெளி ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போதும், மக்கள் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ATM மையங்களுக்கும் மொபைல் பயன்படுத்தும் பழக்கத்தை அடியோடு மறக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது ஜப்பான் அரசு.
ஜப்பான் மட்டுமில்லை, இந்தியாவிலும் கூட வயதானவர்களை தான் மோசடி செய்யும் நபர்கள் குறிவைத்து மோசடி செய்து பணத்தை திருடுகிறார்கள். இவர்கள் தான் முக்கியமான டார்கெட் ஆக இருக்கிறார்கள். காரணம், இவர்களுக்கு இன்றைய காலத்து தொழில்நுட்பம் எப்படி செயல்படும் என்பதில் தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கிறது. அதேபோல், போன் மூலம் தொடர்பு கொண்டு இவர்களிடம் நம்பும்படியான பொய்களை கூறி ஏமாற்றுவது மோசடிக்காரர்களுக்கு சுலபமாக இருக்கிறது.
இந்தியாவிலும் கூட இது தான் நிலை.. இங்கும் வயதானவர்கள் தான் அதிகம் ஏமாறுகிறார்கள்:
ஏதேனும் ஒரு உறவினர் போல பேசியோ, அல்லது காவல்துறை அதிகாரி அல்லது பெரிய பொறுப்பில் அதிகாரி அல்லது வக்கீல் போன்று பாவித்து, இந்த முதியவர்களிடம் டிஜிட்டல் கைது அல்லது மோசமான நிகழ்வு என்றெல்லாம் அடுக்கடுக்காக பொய் சொல்லி, அவர்களை நம்ப வைத்து, அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மிகவும் எளிமையாக திருடிவிடுகிறார்கள். இதனால், இந்தியாவிலும் கூட பலர் மோசடிக்கு ஆளாகியுள்ளனர்.
முன்பின் தெரியாத எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வந்தால், அவற்றை ஏற்காமல் இருப்பது சிறப்பானது. அல்லது அந்த எண்களில் பேசும் நபர்கள் கூறும் கட்டுக்கதையை துளியளவு கூட நம்பாமல் இருப்பது பாதுகாப்பானது. உங்களை பதட்டமடைய செய்து, உங்களை உடனே கைது செய்ய வருவதாக கூறி பல பொய்களை கூறி உங்களை மிரள வைப்பார்கள். இப்படி சூழ்நிலை உங்களுக்கு உருவானால், உடனே அழைப்பை துண்டித்துவிட்டு 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கவும் மக்களே.


Click it and Unblock the Notifications








