ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

|

ATM பயனர்கள் கவனத்திற்கு, நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, ICICI வங்கி, HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் பேங்க் வங்கி போன்ற எந்த வங்கி பயனராக இருந்தாலும், உங்கள் சேமிப்பு கணக்கில் போதுமான இருப்பு உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் வீணாய் வங்கிகளுக்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்

தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்

தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு இப்பொழுது கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடும், தெரியாதவர்கள் இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். தற்போதைய நிலையில் உங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் போதுமான இருப்பு பணம் இல்லையென்றால், இந்த அபராத கட்டணம் உங்களிடமிருந்து ஜிஎஸ்டி உடன் வசூலிக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதை சரியாக கவனிக்காமல் பணம் எடுக்காதீர்கள்

இதை சரியாக கவனிக்காமல் பணம் எடுக்காதீர்கள்

இனி எப்பொழுதும் உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள தொகையின் மேல் ஒரு தனிக் கவனம் வையுங்கள், உங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகை விபரங்களை அறிந்துகொள்ள, உங்கள் வங்கி கணக்கின் சம்பந்தப்பட்ட எண்ணிற்கு மிஸ்ட்டு கால் அல்லது எஸ்எம்எஸ் செய்து, இருப்பு தொகை விபரங்களை அறிந்துகொள்ளலாம். இனி இதை சரியாக கவனிக்காமல் பணம் எடுக்கச் சென்றால் கண்டிப்பாகச் சிக்கல் தான்.

விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!

கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும்

கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும்

குறிப்பாக நீங்கள் ATM சென்று பணத்தை எடுக்க முயலும் பொழுது, உங்கள் பரிவர்த்தனை தோல்வியுற்ற பரிவர்த்தனையாக நிறைவடையும் பட்சத்தில், நீங்கள் கட்டாயம் ஒரு பெரிய தொகையை வங்கிக்கு செலுத்த நேரிடும். SBI வங்கி, ICICI வங்கி, HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, YES பேங்க் வங்கி ஆகிய வங்கிகள் இப்பொழுது தோல்வியுற்ற ATM பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SBI வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?

SBI வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு SBI வங்கி உங்களிடமிருந்து GST உடன் 20 ரூபாயை வசூலிக்கிறது.

ICICI வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு ICICI வங்கி உங்களிடமிருந்து GST உடன் ரூ.25 வசூலிக்கிறது.

போனஸ் டேட்டா கிடைக்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.! இதோ லிஸ்ட்.!போனஸ் டேட்டா கிடைக்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.! இதோ லிஸ்ட்.!

HDFC வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?

HDFC வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு HDFC வங்கி உங்களிடமிருந்து GST உடன் ரூ.25 வசூலிக்கிறது.

IDBI வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
அரசாங்கத்திற்குச் சொந்தமான IDBI வங்கி தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு ரூ .20 கட்டணம் வசூலிக்கிறது.

கோடாக் மஹிந்திரா வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?

கோடாக் மஹிந்திரா வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு கோடாக் மஹிந்திரா வங்கி உங்களிடமிருந்து GST உடன் ரூ.25 வசூலிக்கிறது.

YES பேங்க் வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு YES பேங்க் வங்கி உங்களிடமிருந்து GST உடன் ரூ.25 வசூலிக்கிறது.

Axis வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?

Axis வங்கியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
தோல்வி பெறும் பரிவர்த்தனைக்கு Axis பேங்க் வங்கி உங்களிடமிருந்து GST உடன் ரூ.25 வசூலிக்கிறது.

ஆகையால், இனி அடுத்த முறை ATM இயந்திரங்களிலிருந்து பணத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு பணம் எடுக்க செல்லுங்கள்.

இருப்பை விட அதிகமான தொகையை என்டர் செய்ய வேண்டாம்

இருப்பை விட அதிகமான தொகையை என்டர் செய்ய வேண்டாம்

சரியான தொகையை உள்ளிடுங்கள், கணக்கில் இருக்கும் இருப்பை விட அதிகமான தொகையை என்டர் செய்து வீணாய் வங்கிகளிடமிருந்து கூடுதல் கட்டணத்தை அபராதமாகப் பெறாமல் பாதுகாப்பாக இருங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
ATM users are alert: If this happens while withdrawing money from ATM then you have to pay charges with GST : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X