பணம் எடுத்தால் கட்டணம் உறுதி: ஏடிஎம்-ல் பணம் எடுக்க போறீங்களா- ஜனவரி 1 முதல் வரும் புது கட்டண விதிகள்!

|

ஏடிஎம்-களில் பணம் எடுப்பது என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசிய பயன்பாடாக மாறி இருப்பது அறிந்ததே. பொதுவாக ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் எவ்வளவு எடுக்கப்பட்டது, மீதத் தொகை எவ்வளவு உள்ளது என்பது மட்டுமே காண்பிக்கப்படும் ஆனால் சமீப காலமாக அவரவர்கள் கணக்கு வைத்திருக்கும் குறிப்பிட்ட வங்கிகளில் இருந்து ஒரு எச்சரிக்கைத் தகவல் வரும் அதில் நீங்கள் ஐந்து முறை பரிவர்த்தனை செய்துவிட்டீர்கள் என்பதாலும். இதற்கு பொருள் இனிமேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு தொகை வசூலிக்கப்படும் என்பது தான்.

வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்

வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்

வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டண விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் உயரப் போகிறது. இந்த அறிவிப்பை ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது ஜனவரி 1 2022 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட முறைகளை தாண்டி பணம் எடுக்கும் போது இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

இலவசமாக ஒதுக்கப்பட்ட முறைகள்

இலவசமாக ஒதுக்கப்பட்ட முறைகள்

ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட முறைகளை தாண்டி பணம் எடுக்கும் போது கூடுதல் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படும் என்பதோடு இதுகுறித்த அறிவிப்பை ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) அனைத்து வங்கிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு பயனர்களுக்கு குறிப்பிட்ட முறை ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கும். அதை தாண்டி பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து வந்தது. இந்த நிலையில் இதுவரை இந்த கட்டணம் ரூ.20 ஆக இருந்ததாகும் இனி வரும் காலங்களில் ரூ.21 வரை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

அதிகளவு ஏடிஎம்-களில் பரிவர்த்தனை செய்யும் பெரும்பாலானோர் இந்த வங்கிக் குறுஞ்செய்தியை பார்த்திப்போம். அதில் நீங்கள் உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளில் 5 பரிவர்த்தனை நிவர்த்தி செய்துவிட்டீர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணிக்கையை தாண்டி பணம் எடுக்கும் போது இந்த கட்டண வசூல் பொருந்தும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வங்கி அறிவிக்கும் 5 முறை பரிவர்த்தனை என்பது நகரங்களை பொறுத்து மாறுபடும். மெட்ரோ நகர பரிவர்த்தனைகளில் 3 முறை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகிறது.

ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணங்கள்

ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணங்கள்

இதன்மூலம் ஜனவரி 2022 முதல் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணங்கள் செலுத்த நேரிடும் என கூறப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச பரிவர்த்தனையை தாண்டி பணம் எடுக்கும் பட்சத்தில் இந்த கட்டணம் செலுத்த நேரிடும். இந்த அறிவிப்பு ஜூன் 10, 2021 ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி இந்த உயர்வு ஜனவரி 1 2022 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறை

பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறை

ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வங்கி பல்வேறு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பல்வேறு மோசடி செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம்-களில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள், முதியவர்களை குறிவைத்து இந்த மோசடி செயல்கள் நடந்து வருகிறது. இதை சரிசெய்வதற்கு வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி

முன்னதாக வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி அனுப்பப்படும் அது கட்டாயமாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் பாதுகப்பானது ஸ்டேட் பேங்க் கார்ட் வைத்திரப்பவர்கள் அங்கீகரிக்கப்படாது ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்கிறது. அதேபோல் ஸ்டேட் பேங்க் கார்டு வைத்திருப்பவர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போதும் பணப் பரிமாற்றம் செய்யும் போது இந்த வசதி பொருந்தாது. எஸ்பிஐ ஏடிஎம்களில் பத்தாயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும் போது வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதேபோல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனியே ஓடிபி எண் அனுப்பப்படும் அதை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான சரியான OTP-யை உள்ளிட வேண்டும்

தேவையான சரியான OTP-யை உள்ளிட வேண்டும்

ஏடிஎம் பரிவர்த்தனையை அங்கீகரிக்கத் தேவையான சரியான OTP-யை எஸ்பிஐ வாடிக்கையாளர் உள்ளிட்டால் மட்டுமே ATMல் இருந்து பணம் எடுக்க முடியும். தற்போதைய நிலவரப்படி, SBI வாடிக்கையாளர்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இந்த செயல்பாடு தேசிய நிதி மாற்றத்துடன் (NFS) ஒரு நிறுவனத்தில் உருவாக்கப்படவில்லை. இது நாட்டின் மிகப்பெரிய இயங்கக்கூடிய ஏடிஎம் நெட்வொர்க் ஆகும். தற்போது, ​​NFS நிறுவனம் 95 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான ஏடிஎம் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது.

OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை

OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை

எஸ்பிஐ முதன்முதலில் OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனையைக் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இது மோசடி பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அரசு ஆதரவு கடன் வழங்குபவரிடம் அதிகப்படியான புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கவலையின் காரணமாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செயல்பாட்டில், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவார்கள்.

புதிய உதவி மைய சேவை எண்

புதிய உதவி மைய சேவை எண்

எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய உதவி மைய சேவை எண்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறை மற்றும் சந்தேகங்களை இந்த எண்ணின் மூலம் கேட்டுக் கொள்ளலாம். எஸ்பிஐ உதவி மையம் ஆனது எளிமையான உதவி மைய எண்ணாக மாற்றி அமைக்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கியின் சேவைகள் மற்றும் சந்தேகங்களை இனி இந்த எண்ணின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி தற்போது இலவச டோல்ஃப்ரீ எண்ணை வாடிக்கையாளர்களின் சந்தேகம் மற்றும் சேவைகளை அறிந்து கொள்ள பயன்படுத்துகிறது. எஸ்பிஐ அறிவித்த புதிய இலவச டோல் ஃப்ரீ எண் குறித்து பார்க்கையில் அது 1800 1234 ஆகும். இந்த எண்கள் ஆனது வாடிக்கையாளர்கள் எளிதாக நியாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
ATM Transaction New Rules Will Come to be Effect on January 2022: RBI Announces New Rules For Withdrawl ATM Cash

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X