Home
News

ஏடிஎம், UPI-ல் வரும் முக்கிய மாற்றங்கள்.. இனி 5 முறைக்கு மேல் ATM ல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்..

வரும் 2025 மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள் உயரும். அதாவது இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஏடிஎம் இலவச வரம்புகள் முடிந்த பிறகு ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தணைகளுக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஏடிம் (ATM)

அதாவது வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் ஐந்து முறை ஏடிஎம்-ல் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதன்பின்பு நீங்கள் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்தால் மே மாதம் முதல் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடிஎம், UPI-ல் வரும் முக்கிய மாற்றங்கள்..

குறிப்பாக நீங்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்-ஐ பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 3 இலவச பரிவர்த்தனைகளையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகபட்சம் 5 முறை இலவச பணம் எடுக்கலாம். இலவச பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலவச பரிவர்த்தனை வரம்பு தீர்ந்த பிறகு, வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.21 வசூலிக்க முடியும். அதுவும் ஒரு மாதத்தில் பல முறை ஏடிஎம்மில் பணம் எடுக்கும் அல்லது வேறு எந்த சேவையையும் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த முடிவு வருத்தமாகத் தான் இருக்கும்.

ஆனாலும் இந்த ஏடிஎம் கட்டண உயர்விற்குப்பின் பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதாவது வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டிற்குச் செலவுகளை செய்கின்றன. பின்பு நீங்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது, பயன்படுத்தப்பட்ட சேவைக்கும் உங்கள் வங்கி மற்ற வங்கிக்குப் பணம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ (UPI)

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வருகின்றன. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

அதாவது யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. அதாவது உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஏடிஎம், UPI-ல் வரும் முக்கிய மாற்றங்கள்..

நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் சரியாகச் சென்றடையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ATM transaction fees will be increased from Rs. 21 to Rs. 23 from May 2025: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X