Home
News

சொகுசு கார்.. இரண்டு அழகிகள்.. ரிமோட் கண்ட்ரோல் மூலம் ATM-களில் கொள்ளை.. போலீசாரிடம் பிடிபட்டது எப்படி?

குருகிராம் போலீசார், சொகுசு காருடன் வளம் வந்த இரண்டு அழகிகளுடன் 3 நபர்களை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த 5 நபர்களும், ரிமோட் கண்ட்ரோலர் உதவியுடன் டெல்லி, பரிதாபாத் மற்றும் குருகிராம் பகுதிகளில் உள்ள ஏடிஎம் (ATM) எந்திரங்களில் இருந்து பொதுமக்களின் பணத்தை திருடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பெயரில் இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரிமோட் (Remote) உதவியுடன் எப்படி பணத்தை இவர்கள் திருடினார்கள்? உங்கள் பணம் ATM-களில் இருந்து திருடு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது இங்கே.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களின் பல பயன்பாட்டு சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இது ஒரு புறம் வரவேற்க தக்கது. தொழில்நுட்ப வளர்ச்சி (Technological development) எப்படி பொதுமக்களுக்கு ஒரு வழியில் உதவுகிறதோ, அதேபோல மோசடிக்காரர்களுக்கும் (fraudsters) மறைமுகமாக உதவி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொழில்நுட்பத்தின் பிரகாசமான பக்கத்தை மட்டுமே பார்த்து வந்த நமக்கு, இதன் சில இருண்ட பக்கங்களில் (dark side) மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கியுள்ளன.

சொகுசு கார்.. இரண்டு அழகிகள்.. ரிமோட் கண்ட்ரோல் மூலம் ATM-களில் கொள்ளை

ரிமோட் கண்ட்ரோல் உதவி மூலம் ATM-களில் கொள்ளை (Robbery of ATMs with the help of remote control):

உதாரணமாக, இப்போது குருகிராமில் (Gurugram) நடைபெற்ற ஏடிஎம் திருட்டு (ATM Theft) சம்பவத்தை நாம் குறிப்பிட்டு கூறலாம். தொழில்நுட்ப சாதனங்களை நற்செயலுக்காக பயன்படுத்துவதை தவிர்த்து சில மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பணத்தை திருட பயன்படுத்துகிறார்கள். அப்படி ஒரு எலக்ட்ரானிக் சிப்பை (electronic chip) வைத்து, அதை ரிமோட் கண்ட்ரோலர் (remote controller) மூலம் இயக்கி மிகவும் சுலபமாக ஏடிஎம் இயந்திரங்களில் (ATM machine) இருந்து இந்த கும்பல் திருடி வந்துள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களில் இருக்கும் பவர் பிளக் (power plug) இடையில், இந்த ஒற்றை சிப்பை இவர்கள் யாருக்கும் தெரியாமல் பொறுத்திவிடுகிறார்கள். பொதுமக்கள் அந்த ஏடிஎம் (ATM) இல் இருந்து பணம் எடுக்கும் (cash withdrawal) பொழுது, பணம் சரியாக வெளியில் வர வேண்டிய நேரத்தில், ரிமோட் கண்ட்ரோலர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக ஆஃப் (OFF) செய்துவிடுகிறார்கள். இதனால் பணம் வெளியில் வராமல் இயந்திரத்திற்குள்ளேயே நின்றுவிடுகிறது.

பணம் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது, வெளியில் வரவில்லையே என்று அந்த நபர் பதட்டமாகி கொண்டிருக்கும் நேரத்தில் தான் இரண்டு அழகிகள் ஏடிஎம் அறைக்குள் (ATM room) உள்நுழைவர்கள். மிகவும் இயல்பாக அந்த நபரிடம் என்ன நடந்தது என்று பேச்சு கொடுத்து, பணம் வெளியில் வரவில்லை என்றால், அது மீண்டும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கிற்கே (bank account) வரவு வைக்கப்படும் என்று நம்பிக்கை கூறி, அந்த நபரை ஏமாற்றிவிடுகிறார்கள்.

சொகுசு காருடன் இரண்டு அழகிகள் உட்பட 3 நபர்கள் கைது:

அந்த நபர் ஏடிஎம் அறையில் இருந்து வெளியில் சென்ற சில நேரம் கழித்து இவர்கள் மீண்டும் ஏடிஎம் உள்ளே சென்று ரிமோட் மூலம் ATM மெஷின்னை ஆன் (ON) செய்கிறார்கள். உடனே ஆஃப் செய்யப்பட்டபோது சிக்கிய பணம் (cash) வெளியில் வந்தவுடன் அதை எடுத்துக்கொண்டு, எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இப்படி பல ATM-களில் இவர்கள் கைவரிசையை காண்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலை குருகிராம் போலீசார் ஒரு சொகுசு காருடன் (Luxury car) வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். இதுவரை இந்த பெண் அழகிகளின் உதவியோடு அந்த கும்பல் எவ்வ்ளவு பணத்தை திருடியது என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. ATM செல்லும் பொது மக்கள், பணம் எடுக்கும் பொழுது இயந்திரம் ஆஃப் செய்யப்பட்டால், ATM உதவி எண்ணை (ATM helpline number) உடனே அழைத்து புகார் அளிக்க அறிவுரைக்கப்படுகிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ATM Robbery Using Remote Controller 2 Women with 3 Men Arrested with a Luxury Car in Gurugram India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X