காதலிக்காக ATM கொள்ளை.. சிறுவன் செய்த நேக்கான வேலை.. ATM உடையலை..சத்தம் போடல.. ஆனா பணம் மட்டும் திருட்டு..
இந்த தலைமுறை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏன் மிக சுலபமாக தவறான பாதையில் அவர்களின் வாழ்க்கையை வெகு எளிதாக துளைத்துவிடுகிறார்கள் என்பது இன்னும் பல பெற்றோர்களுக்கும், மூத்த தலைமுறை மக்களுக்கும் புரியாத மர்மமாகவே இருக்கிறது. என்னப்பா ஆச்சு இவ்வளவு விரக்தியாக பேசுகிறீர்களே என்று சில நினைக்கலாம். சமீபத்தில் நடந்தவொரு சம்பம் காவல்துறையினரையே ஆதங்கப்பட வைத்துள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? சில சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து காதலிக்கு செலவு செய்ய பணம் தேவையென்று ஏடிஎம் (ATM) மையத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வசிக்கும் சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக, அந்த பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் (ATM machine) இருந்து பணத்தை மிகவும் புத்திசாலித்தனமாக திருடியுள்ளான். ஆம், புத்திசாலித்தனமாக தான். காரணம், இந்த சிறுவன் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கவில்லை, அதை சேதம் செய்யவில்லை, அடுத்த நபர்கள் பணம் எடுப்பதற்கு எந்தவித சிக்கலையும் உருவாகாமல் மிக நூதனமாக பணத்தை திருடியுள்ளான்.

காதலிக்காக ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த சிறுவன்:
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் எப்படி பணம் எடுத்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம். ஏடிஎம் இயந்திரத்தை சிறுவன் உடைக்காமல், மிகவும் திறமையாக ஒரு மெல்லிய பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை (Plastic strips) பணம் வரும் ஏடிஎம் வழியில் செருகியுள்ளான். பிளாஸ்டிக் ஸ்ட்ரிப் எளிதில் வெளிவந்துவிட கூடாது என்பதற்காக பெவிகால் (Fevicol) பயன்படுத்தி ஸ்ட்ரிப்பை ஏடிஎம் உடன் நன்றாக ஒட்டிவைத்துள்ளான்.
அவசர பண தேவைக்காக இந்த ஏடிஎம் மையத்தை பயன்படுத்தும் மக்கள் அவர்கள் விரும்பும் தொகையை உள்ளிட்டு பணத்தை வித்ட்ராவல் (Cash withdrawal) செய்ய முயலும் பொழுது, அவர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எண்ணப்படும் சத்தம் கேட்கும் (cash counting sound ATM) ஆனால், பணம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வராது. ஏடிஎம் பயனரின் கணக்கில் இருந்து உள்ளிட்ட தொகை வித்ட்ராவல் செய்யப்பட்டதாக மெசேஜ் அவர்களின் மொபைல் எண்ணிற்கு வரும்.
ஆனால், கையில் ரொக்கமாக பணம் மட்டும் கிடைக்காது. இது எதோ இயந்திர கோளாறு (ATM technical error) என்று கருதி, அந்த நபர் புகார் அளிக்க வெளியே சென்றுவிடுவார். சிறிது நேரம் கழித்து சுபம் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து ஏடிஎம் மெஷினில் சிக்கி இருக்கும் பணத்தை மிக எளிமையாக எடுத்து சென்றுவிடுகிறார். இந்த முறையை பயன்படுத்தி பல முறை, இந்த சிறுவன் தொடர்ந்து பணம் திருடி வத்ததாக கூறப்படுகிறது.
எப்படி போலீசில் பிடிபட்டனர்?
இந்த முறையை பின்பற்றி இவர் மட்டும் கொள்ளயடித்தது பத்தாது என்று, இவருடன் சுற்றி திரியும் இவரின் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். இதே முறையில் வாரங்கல் நகரில் இருக்கும் பல ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து பணம் மாயமாக மறைவதாக மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் கீழ் விசாரணையை துவங்கி போலீஸ் (Police), சிசிடிவி கேமராவில் (CCTV camera) பதிவான ஆதாரங்களை வைத்து சிறுவர்களை கைது செய்தனர்.
இந்த கொள்ள திட்டத்தை திட்டம் தீட்டி பல ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த சுபம் போலீசாரிடம் சிக்காமல் தனது காதலியுடன் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் இப்போது தேடி வருகின்றனர். இவர்கள் இன்னும் 18 வயதை கூட நெருங்காது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








