புது ATM ரூல்ஸ்.. பணம் எடுக்க புது விதி.. புது கட்டுப்பாடு.. ATM கார்டு இருக்க எல்லோரும் கவனியுங்க மக்களே..
ஏடிஎம் கார்டு (ATM card) வைத்துள்ள இந்திய மக்களுக்காக (ATM card new rules) புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ATM தொடர்பான மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம் மோசடி, காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏடிஎம்மில் இருந்து இனி பணம் எடுப்பதில் மக்கள் என்ன புதிய மாற்றங்களை சந்திக்கவுள்ளனர் என்பது குறித்த தகவலை இப்போது முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஏடிஎம் சேவை (ATM service) தொடர்பான மோசடி வழக்குகள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ATM விதிகள் திருத்தப்பட்டன, பல முறை திருத்தங்களுக்கு பிறகு, இப்போது டிசம்பர் 2024 இல் புதிய விதியுடன் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதி இயக்கத்திற்கு வந்துள்ளது.

புது ATM ரூல்ஸ்.. பணம் எடுக்க புது விதி.. புது கட்டுப்பாடு:
ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் எடுக்கும் போது, பணம் வெளியில் வராமல், பணத்தை எடுக்க சிக்கல் விளைவிக்கும் மோசடியை கையாளும் விதமா இந்த புதிய ஏடிஎம் ரூல்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை ATM இயந்திரத்தில் இருந்து எடுக்கவில்லை என்றால், இனி பணம் தானாகவே மீண்டும் ATM இயந்திற்குள் சென்றுவிடும் படி இயந்திரங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின் படி, ATM மையங்களில் இருந்து பணம் எடுக்கும் ATM கார்டு பயனர்கள் 30 வினாடிகளுக்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே ஏடிஎம் மூலம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இதன் பின்னர், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 30 வினாடிக்குள் ATM-ல் இருந்து பணம் எடுக்க புது கட்டுப்பாடு வந்துள்ளது.
30 வினாடிகளுக்குள் பணம் எடுக்கப்படவில்லை என்றால் என்னாகும்?
ஏடிஎம் மையங்களில் இருந்து சில நேரங்களில் பணம் எடுக்கப்படாமல் இருக்கும் போது, அது திருட்டு அல்லது மோசடி இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நிதியை மிகவும் திறமையாகப் பாதுகாக்கிறது. ஆர்பிஐயால் புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறை, ஏடிஎம் மோசடி சம்பவங்களை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ATM பணம் எடுக்கும் மோசடிக்கு பிறகு இந்த புதிய ரூல்ஸ் நடைமுறைக்கு வந்துள்ளது.
தெரியாதவர்களுக்கு, ATM மோசடி என்பது, மோசடிக்காரர்களால் ஏடிஎம் இயந்திரங்களில் சிறிய தகடு போன்ற தடுப்பை பணம் பெரும் வழியில் பொருத்தி, அதன் பயனர்களை எடுக்கவிடாமல் செய்வதாகும். பணத்தை எடுக்க முயன்ற ATM பயனர்கள் பணம் வரவில்லை என்று நினைத்து, ATM மையத்தில் இருந்து வெளியேறியதும். சிறிது நேரத்தில் மோசடிக்காரர்கள் ATM மையத்திற்குள் சென்று, பணம் வரும் வழியில் வைக்கப்பட்டிருக்கும் தகடை எடுத்துவிட்டு, பணத்தை திருடி செல்கிறார்கள்.
24 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கி பேலன்ஸ் செக் செய்யவும்:
இத்தகைய சிக்கலை சமாளிக்க, இந்திய அரசு தற்போது அணைத்து ATM இயந்திரங்களிலும் 30 வினாடிக்குள் பணத்தை எடுக்கவில்லை என்றால், அவை தானாக மீண்டும் இயந்திரத்திற்குள் சென்றுவிடும் படியான அமைப்பை நிர்வகித்துள்ளது. ஒரு வேலை நீங்கள் பணம் எடுக்க முயலும் பொழுது, பணம் வெளியில் வரவில்லை என்றால், உடனே உங்கள் பேங்க் பேலன்ஸை செக் செய்யுங்கள். 24 மணி நேரத்திற்குள் பணம் வரவு வைக்கப்படும். உள்ளே சென்ற பணம் அந்த நபரின் சரியான அக்கௌன்ட்டில் மீண்டும் வரவு வைக்கப்படும். இந்த புதிய ATM விதி பற்றி உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








