LPG கேஸ் புக்கிங் முதல் ATM கட்டணம் வரை.. ஜூன் 1 அமலுக்கு வந்தது புதிய விதிகள்.. இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
வாங்கி வாடிக்கையாளர்கள் முதல் எல்பிஜி கேஸ் பயன்படுத்தும் நுகர்வோர்கள் வரையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் வகையில் எல்பிஜி சிலிண்டர் விதிகள் முதல் ஏடிஎம் கட்டண விதிகள் வரையில் ஜூன் மாத புதிய விதிகள் (June New Rules) அமலுக்கு வந்துள்ளன.
பிஎன்ஜி நுகர்வோர்கள் எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க வேண்டி இருக்கும், ஏடிஎம் கஸ்டமர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும், யுபிஐ பரிவர்த்தனைகளை புதிய விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டி இருக்கும், பான் கார்டு வைத்து இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் கொஞ்சம் நிம்மதியடைலாம்.

யுபிஐ விதிகள் (UPI Rules): யுபிஐ பரிவர்த்தனைகளானது, ஓடிபி சரிபார்ப்பு மட்டுமே செய்து முடிக்கப்படாது. அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்யும்போது கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட செயலிகளில் 4 அல்லது 6 இலக்க பின் நம்பர்கள் மட்டுமல்லாமல், கூடுதல் சரிபார்ப்பு இருக்கும். இதில் கைரேகை அல்லது முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பு இருக்கும்.
மேலும், யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும் முன்பாக பணம் பெறுபவரின் விவரங்களில் பேங்கில் கொடுக்கப்பட்ட பெயருடன் காண்பிக்கப்படும் விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. உண்மையில் இந்த விதிகள் 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டன. இப்போது, யுபிஐ ஆப்கள் படிப்படியாக அமலுக்கு கொண்டுவருகின்றன.

ஏடிஎம் விதிகள் (ATM Rules): யுபிஐ வழியாக செய்யப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளும் டெபிட் கார்டு வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளும் ஒன்றாக சேர்க்கப்படுகிறது. ஆகவே, வங்கிகள் நிர்ணயம் செய்து இருக்கும் ஏடிஎம் வரம்பை மீறானால், வழக்கமான டெபிட் கார்டுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் யுபிஐ வழியாக எடுக்கப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் விதிக்கப்படும்.
வருமான வரி விதிகள் (Income Tax Rules): வரி செலுத்துவோர்களுக்கு 2026-27 நிதியாண்டிற்கான முதல் தவணை முன்பண வரியை செலுத்துவதற்கான காலக்கெடு ஜூன் 15ஆம் தேதியாக உள்ளது. இதில் 15 சதவீதத்தை இந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த ஜூன் 15ஆம் தேதியை தவறவிடும்பட்சத்தில் மாதத்திற்கு 1 சதவீதம் என்ற வீதத்தில் வட்டி அபராதம் விதிக்கப்படலாம்.
இபிஃஎப்ஓ விதிகள் (EPFO Rules): மே மாதமே அமலுக்கு வர இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட இபிஃஎப்ஓ யுபிஐ விதிகள் ஜூன் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, யுபிஐ ஆப்கள் வழியாக பிஃஎப் பணத்தை எடுத்தும் நடைமுறை ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் முழு தொகையை எடுக்க முடியாது.

பான் கார்டு விதிகள் (PAN Card Rules): 2026ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளின் அடிப்படையில் ரூ.50,000 மேல் ரொக்க வைப்புகளுக்கு இனிமேல் பான் என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை. ஒரே நிதியாண்டில் மொத்த ரொக்க வைப்புகள் அல்லது திரும்ப பெறுதல்களின் மொத்த தொகை ரூ. 10 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் எண் தேவைப்படும்.
எல்பிஜி விதிகள் (LPG Rules): பிஎன்ஜி (Piped Natural Gas) இணைப்பு வைத்திருக்கும் நுகர்வோர்கள் இனிமேல் எல்பிஜி கேஸ் சிலிண்டரை புக் செய்ய முடியாது. பிஎன்ஜி இணைப்பை பெற்ற 30 நாட்களுக்குள் பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பு ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், தானாகவே இணைப்பு நிராகரிப்பு செய்யப்படும்.

இது இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், பிஎன்ஜி இல்லாத பகுதிகளுக்கு செல்லும்போது, எல்பிஜி இணைப்பை விரைவாக பெறுவதற்கு டிரான்ஸ்ஃபர் வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது எல்பிஜி இணைப்பை உடனடியாக பெற்றுத்தரும். ஆகவே, ஒரு இணைப்பை மட்டுமே நுகர்வோர்கள் பெற்று கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications