Home
News

அடுத்த 3 நாட்கள்.. ATM மூடப்படும்.. பணம் அனுப்ப வேண்டாம்.. பேங்க் கஸ்டமர்கள் பதற்றம்.. மத்திய அரசு விளக்கம்!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் (ATM Closed) என்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை (Online Transactions) செய்ய வேண்டாம் என்றும் செய்திகள் வெளியாகி இருப்பதால், பேங்க் கஸ்டமர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு மற்றும் பேங்குகள் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மே 1ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. எந்தெந்த பேங்குகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக அடுத்த 2-3 நாட்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என்றும் அதேபோல ஆன்லைன் பரிவர்த்தனைகளை யாரும் செய்ய வேண்டாம் என்றும் செய்திகள் வருகின்றன.

அடுத்த 3 நாட்கள்.. ATM மூடப்படும்.. பணம் அனுப்ப வேண்டாம்.. விளக்கம்!

அந்த செய்தியில் பாகிஸ்தானுடனான போர் காரணமாக ரான்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ளதால், ஏடிஎம்கள் மூடப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் இந்த செய்திகள் பரவியதால், பேங்க் கஸ்டமர்கள் பதற்றமடைய தொடங்கிவிட்டனர். பணத்தை எடுக்க முடியாத சூழல் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால், அந்த செய்தி முற்றிலும் பொய்யானவை என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஐபி (PIB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) தெரிவித்துள்ளது. மேலும், ஏடிஎம்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே பேங்க் கஸ்டமர்களிடையே எழுந்த பதற்றத்தை சாமாளிக்க அந்தந்த பேங்குகள் விளக்கம் அளிக்க தொடங்கி இருக்கின்றன. ஆகவே, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) ஆனது கஸ்டமர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. ஏடிஎம்கள் முழுமையாக செயல்பாட்டில் இருக்கின்றன. போதுமான அளவு பணம் இருப்பில் இருக்கிறது.

அடுத்த 3 நாட்கள்.. ATM மூடப்படும்.. பணம் அனுப்ப வேண்டாம்.. விளக்கம்!

இதற்கு மாறாக வெளியாகும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளது. அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் (State Bank of India) அதன் கஸ்டமர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. ஏடிஎம், சிடிஎம் (CDM) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வழக்கம்போக நடப்பதாக தெரிவித்து இருக்கிறது.

இதேபோல அடுத்தடுத்த பேங்குகளும் கஸ்டமர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றன. உண்மையில், இந்தியா பாகிஸ்தான் போர் ஆரம்பித்த உடனேயே பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க தொடங்கிவிட்டனர். இதனால், நீண்ட வரிசை மற்றும் ஏடிஎம்களில் போதிய பணம் இருப்பு இல்லாதது போன்ற சூழல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் இந்தியாவில் ஏடிஎம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால், இதுபோன்ற செய்திகள் மிகுந்த கவனத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சேவை பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் குறைவாகும். ஆகவே, இந்தியா பாகிஸ்தான் போரை காரணம் காட்டி வெளியாகும் செய்திகளை மக்கள் அப்படியே நம்பி விடக்கூடாது.

அதேபோல அதுபோன்ற பரவும் செய்திகளை யாருக்கும் பகிரவும் கூடாது. முதலில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் பணியகத்தின் ட்விட்டர் அல்லது வெப்சைட்டுக்கு சென்று அது உண்மையா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொய்யான செய்தியாக உங்களுக்கு தோன்றும்பட்சத்தில் பிஐபி ஃபேக்ட்செக் (PIB Fact Check) மூலகமாக புகாராக தெரிவித்துவிடுங்கள்.

முன்னதாக இதேபோல இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியதாகவும் செய்திகள் வந்தன. இதுவும் பொய்யான செய்திகளாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corp Ltd) இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆகவே, கவனமுடன் இருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ATM Closed For 3 Days Amid India Pakistan War Central Government Claim This is FAKE Message
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X