Home
News

புது ATM ரூல்ஸ் வருது.. 5 முறைக்கு மேல் ATM யூஸ் செய்வீர்களா? அப்போ அதிக கட்டணம் தரணும்.. RBI-ன் புது ரூல்ஸ்..

ஏடிஎம் கார்டு (ATM) பயன்படுத்தும் பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் கவனியுங்க, 1 மாதத்தில் 5 இலவச பரிவர்த்தனைகளை தாண்டி (5 free transactions per month), இன்னும் சில அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்றால், இனி கூடுதல் கட்டணத்தை நீங்கள் வங்கிக்கு வழங்க வேண்டியதிருக்கும் என்று புதிய விதிமுறை கூறுகிறது. ஆம், ATM மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணத்தையும், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தையும் உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வருமென்று கூறப்படுகிறது.

ஏடிஎம் கார்டு பயனர்களுக்கு (ATM card users) ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் (5 free ATM transactions per month) மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்த இலவச வரம்பைத் தாண்டி வாடிக்கையாளர்களின் அதிகரிக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு (ATM transaction fee) வங்கிகள் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணத்தையும், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தையும் (ATM interchange fees) உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருகிறது.

புது ATM ரூல்ஸ் வருது.. 5 முறைக்கு மேல் ATM யூஸ் செய்வீர்களா?

புது ATM ரூல்ஸ் வருது.. 5 முறைக்கு மேல் ATM யூஸ் செய்வீர்களா?

இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் (bank customers) ஏடிஎம் இயந்திரங்களில் (ATM machines) இருந்து பணம் எடுக்க (cash withdrawal from ATM machines) இனி அதிக செலவு செய்ய (ATM usage fees) வேண்டியிருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) விதித்த முந்தைய விதிமுறையின் படி, ATM பயனர்கள் தங்கள் இலவச பரிவர்த்தனை வரம்பு முடித்த பிறகு, கூடுதலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு தனி எக்ஸ்ட்ரா கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலவரத்தை படி, 5 இலவச பரிவர்த்தனைக்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ATM பயனர்கள் ரூ. 21 என்ற தொகையை கட்டணமாக செலுத்தி வருகின்றனர். இந்த கட்டணத்தை இப்போது ரூ. 22 ஆக உயர்த்த (ATM transaction fee hike) RBI பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், NPCI என்ற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், ரொக்கமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான ATM பரிமாற்றக் கட்டணத்தையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ATM பரிமாற்றக் கட்டணம் எவ்வளவு அதிகரிக்கிறது?

இதற்கு முன்பு, ரூ. 17 என்ற கட்டணத்தில் இருந்த ATM பரிமாற்றக் கட்டணம் (ATM interchange fees hike) இனி ரூ. 19 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு (cashless transactions fee) இதற்கு முன்பு ரூ. 6 என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி இந்த கட்டணம் ரூ. 7 ஆக உயர வாய்ப்புள்ளது (cashless transaction fee hike) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ATM பரிமாற்றக் கட்டணம் என்றால் என்னவென்று (What is ATM interchange fees means?) சிலர் கேள்வி எழுப்பலாம், அது வேறொன்றுமில்லை, ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியால் இயக்கப்படும் ATM சேவை மையத்தை (ATM center) பயன்படுத்தி, பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும், முந்தைய வங்கி பிந்தைய வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது தான் பரிமாற்றக் கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு கட்டணம் கூடுகிறது?

பெருநகரப் பகுதிகளுக்கும், பெருநகரம் அல்லாத பகுதிகளுக்கும் (non-metro areas) ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்துவது குறித்த NPCI-யின் பரிந்துரையில் வங்கிகளும் வைட் லேபிள் ஏடிஎம் நிறுவனங்களும் (white label ATM company) இணைந்திருந்தாலும், தொழில்துறை நிறுவனங்கள் ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை ரொக்கப் பரிவர்த்தனைக்கு ரூ. 21 ஆகவும், ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்கு ரூ. 7 (non-cash transactions) ஆகவும் உயர்த்த பரிந்துரைத்தன.

தற்போது, ​​பெருநகரம் அல்லாத பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனை வரம்பையும், பெங்களூரு (Bengaluru), சென்னை (Chennai), ஹைதராபாத் (Hyderabad), கொல்கத்தா (Kolkata), மும்பை (Mumbai) மற்றும் புது தில்லி (New Delhi) ஆகிய பெருநகரங்களில் மூன்று இலவச பணப் பரிவர்த்தனை வரம்பையும் தாண்டிய பிறகு, ஒரு ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கு ரூ. 21 வரை கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. இந்த கட்டணம் இனி வரும் காலத்தில் உயரப்போகிறது.

இதனால், பொதுமக்கள் இனி சரியாக திட்டமிட்டு ATM சேவையை பயன்படுத்தினால் மட்டுமே, இந்த எக்ஸ்ட்ரா கட்டணங்களில் இருந்து தப்பிக்க முடியும் சூழ்நிலை உருவாக்கப்போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ATM Cash Transaction Fee and ATM Interchange Fee Hike Coming RBI and NPCI Planning New Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X