இந்தியாவில் சத்தமில்லாமல் சீற வரும் ஏசஸ் சென்ஃபோன் சூம்.!!
ஏசஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் சூம் கருவி இந்தியாவில் இம்மாதம் வெளியாகும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த கருவியானது இம்மாதம் இந்தியாவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாக இதன் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3எக்ஸ் ஆப்டிக்கல் சூம் தான். இதோடு லேசர் ஆட்டோஃபேகஸ், 10 லென்ஸ் எலமென்ட்ஸ் மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஏசஸ் பிக்ஸல்மாஸ்டர் தொழில்நுட்பம் குறைந்த வெளிச்சங்களிலும் சிறப்பான புகைப்படம் எடுக்க வழி செய்யும். இந்த கருவியின் மற்ற சிறப்பம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.

பிராசஸர்
இந்த கருவியில் இன்டெல் ஆட்டம் குவாட் கோர் Z3580 பிராசஸர், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட மாடலும் இன்டெல் ஆட்டம் குவாட் கோர் Z3590 பிராசஸர் கொண்ட மாடல் என இரு மாடல்கள் இருக்கின்றன.

கனெக்டிவிட்டி
வை-பை 801.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 4.0, என்எப்சி, 4ஜி எல்டிஈ மற்றும் மைக்ரோ யுஎஸ்பி 2.0 கொண்டு ஆண்ட்ராய்டு லாலிபாப் சார்ந்த சென் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

திரை
5.5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 4, மற்றும் 4ஜிபி ரேம்
மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

மெமரி
மெமரியை பொருத்த வரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு மாடல்கள் இருக்கின்றன, இது தவிற 64 ஜிபி மாடலில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

வெளியீடு
தற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவநல்களின் படி இந்தியாவில் இந்த கருவி ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகின்றது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications