Home
News

அசுஸ் உடன் கூட்டணி; ஏப்.23-ல் ஒரு சர்ப்ரைஸ்; அசத்தும் ப்ளிப்கார்ட்.!

ஏப்ரல் 23, சரியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும் இந்த எக்ஸ்க்ளூஸிவ் விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ வாங்குவதற்கு கிடைக்கும்.

By Muthuraj

இன்று (ஏப்ரல் 17, செவ்வாய்) அறிவிக்கப்பட்ட, அசுஸ் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கூட்டணியை தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதியன்று, அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் வழியாக அதன் பிரத்யேக இந்திய விற்பனையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் உடன் கூட்டணி; ஏப்.23-ல் ஒரு சர்ப்ரைஸ்; அசத்தும் ப்ளிப்கார்ட்.!

ஏப்ரல் 23, சரியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும் இந்த எக்ஸ்க்ளூஸிவ் விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ வாங்குவதற்கு கிடைக்கும். இது சென்போன் மேக்ஸ் ப்ரோவின் உலகளாவிய அறிமுகப்படுத்தல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

புது தில்லியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த பிரத்தியேக விற்பனை சார்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதும், அந்த சந்திப்பில் கூறப்படும் சென்போன் மேக்ஸ் ப்ரோ ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 636 SoC கொண்டு இயங்கும் என்றும் ப்ளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது. எனினும், டிஸ்பிளே அளவு, ரெசல்யூஷன், திரை விகிதம் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள்; கேரா சென்சார்கள், பேட்டரி திறன் மற்றும் இயக்க முறைமை பற்றிய எந்தவொரு வார்த்தைகளும் இல்லை.

அசுஸ் உடன் கூட்டணி; ஏப்.23-ல் ஒரு சர்ப்ரைஸ்; அசத்தும் ப்ளிப்கார்ட்.!

சென்போன் மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்த பிரத்யேக விற்பனையானது அசுஸ் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கும் நடந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஆகும். வரவிருக்கும் நாட்களில், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நுகர்வோர் விருப்பங்களை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளது. அந்த தயாரிப்புகள் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு கூடுதல் கவனம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசுஸ் உடன் கூட்டணி; ஏப்.23-ல் ஒரு சர்ப்ரைஸ்; அசத்தும் ப்ளிப்கார்ட்.!

மேலும் கையெழுத்து இடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி (MoU) இந்த இரு நிறுவனங்களும் அசுஸ் சென்போன் மாடல்களுக்கான மார்க்கெட்டிங் நடவடிக்கைகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் பரந்த அளவிலான ஆதரவை பரிமாறியும் கொள்ள உள்ளன.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

கடந்த 2014 -ல் முதல் தலைமுறை சென்போன் தொடர் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்காக ப்ளிப்கார்ட் உடன் ஆசஸ் இணைந்ததும், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கூட்டணியின் விளைவாக வருகிற 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 40 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் ப்ளிப்கார்ட் பணியாற்றுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus ZenFone Max Pro India Launch Soon, Will be Available via Flipkart From April 23. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X