8 ஜிபி ரேம் உடன் வெளிவரும் புதிய ஆசஸ் ஜென்போன் ஏஆர்(அம்சங்கள்).!
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் 2.34ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.!
ஆசஸ் நிறுவனம் பொருத்தவரை தற்போது சிறந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது, இந்நிறுவனம் புதிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் ஆசஸ் ஜென்போன் ஏஆர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் இடம்பெற்ற ஒரு முக்கியமான சிறப்பம்சங்கள் என்னவென்றால் 8 ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆசஸ் ஜென்போன் ஏஆர் இயங்குதளம் பொருத்தவரை மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் 2.34ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23எம்பி ரியர் கேமரா:
ஆசஸ் ஜென்போன் ஏஆர் 23எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 8எம்பி ஆக உள்ளது, போட்டோ மற்றும் வீடியோவை உயர்ந்த தரத்தில் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:
ஆசஸ் ஜென்போன் ஏஆர் 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1440-2560)வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

8 ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:
ஆசஸ் ஜென்போன் ஏஆர் பொருத்தவரை 3300எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வைஃபை 802, ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

விலை:
இந்தியாவில் ஆசஸ் ஜென்போன் ஏஆர் விலைப் பொருத்தவரை ரூ.49,999ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications