Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

|

இனி புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால், விஷயம் தெரிந்தவர்களின் கவனம் கட்டாயமாக இனி ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் உடன் அறிமுகமாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் மீது மட்டும் தான் இருக்கப் போகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், இந்த புது சிப்செட் உடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன், Asus நிறுவனத்திடமிருந்து Asus ROG Phone 6 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் போன்களை ஏன் தேடுகிறார்கள்? விஷயம் என்ன?

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் போன்களை ஏன் தேடுகிறார்கள்? விஷயம் என்ன?

விஷயம் தெரிந்தவர்கள் ஏன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களை தேடுகிறார்கள்? இந்த பதிவின் முதல் இரண்டு வரிகளைப் படித்தவுடன், இந்த கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்கள் ஏன் புதிய 8+ ஜென் 1 சிப்செட்டை தேர்வு செய்ய முன்வருகிறார்கள் என்றால், இந்த சிப்செட்டின் முன்னர் மாடலான 8 ஜென் 1 சிப்செட்டில் தெர்மல் பெர்பார்மன்ஸ் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டில் காணப்பட்ட கோளாறு என்ன?

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டில் காணப்பட்ட கோளாறு என்ன?

இதனால், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி மிக வேகமாக டீ-சார்ஜ் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுப் புகாரளிக்கப்பட்டது. இது பெரியளவு கோளாறு இல்லையென்றாலும், சில பயனர்களால் இது பெரிய தொல்லையாகப் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்னாப்டிராகன் செய்த சில மாறுபாட்டுடன் வெளியிடப்பட்ட புதிய சிப்செட் தான் இந்த Snapdragon 8+ Gen 1 மாடலாகும்.

Asus ZenFone 9 டிவைஸ் 8+ ஜென் 1 சிப்செட் உடன் வருதா?

Asus ZenFone 9 டிவைஸ் 8+ ஜென் 1 சிப்செட் உடன் வருதா?

இப்போது இந்திய சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் பழைய Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால், Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் இப்போது இந்தியாவில் கிடைக்கும் ஒரே ஒரு டிவைஸாக அசுஸ் நிறுவனத்தின் Asus ROG Phone 6 மட்டுமே இருக்கிறது. இதனை, தொடர்ந்து இதே ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் நிறுவனம் அறிமுகம் செய்யக் காத்திருக்கும் புது மாடல் தான் Asus ZenFone 9 டிவைஸ்.

அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?

Asus ஏன் ஆப்பிள் போனுக்கு நிகராக பேசப்படுகிறது?

Asus ஏன் ஆப்பிள் போனுக்கு நிகராக பேசப்படுகிறது?

ஆப்பிள் நிறுவனத்தைத் தவிர்த்து, சிறிய ஃபிளாக்ஷிப் போன்களை நம்பி வாங்கக்கூடிய ஒரே பிராண்ட்டாக Asus மட்டுமே உள்ளது. ஆசுஸ் நிறுவனம் இப்போது அதன் போர்ட்போலியோவில் Asus ZenFone 9 என்று அழைக்கப்படும் புதிய மாடலை சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சாதனத்தை நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் முறையாக இந்த புதிய Asus ZenFone 9 டிவைஸ் தொடர்பான ஒரு விளம்பர வீடியோ ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

எதிர்பாராமல் Asus செய்த வேலை இது தான்

எதிர்பாராமல் Asus செய்த வேலை இது தான்

புதிய Asus ZenFone 9 டிவைஸின் விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்தும் தகவலுடன் இருக்கும் வீடியோவை, ஆசுஸ் நிறுவனமே தவறுதலாக ஆசஸின் யூடியூப் சேனலில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தெரியாமல் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ விளம்பரம் சிறிது நேரம் கழித்து அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. TechGoing வலைப்பக்கத்தால் இந்த வீடியோ முதலில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

அச்சச்சோ Asus ZenFone 9 பற்றி எல்லாமே லீக் ஆகிடுச்சா?

அச்சச்சோ Asus ZenFone 9 பற்றி எல்லாமே லீக் ஆகிடுச்சா?

Asus ZenFone 9 பற்றிய சாத்தியமான அனைத்து தகவலையும் இந்த வீடியோ காண்பித்துவிட்டது. Asus ZenFone 9 ஆனது அதன் முன்னோடி மாடலான Asus ZenFone 8 வடிவமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகவும், இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் Asus ZenFone 9 சாதனம் ரெட், வைட், ப்ளூ மற்றும் பிளாக் உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Asus ZenFone 9 டிவைஸில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?

Asus ZenFone 9 டிவைஸில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?

இந்த புதிய Asus ZenFone 9 டிவைஸ் 120Hz ரெப்ரெஷிங் ரேட் கொண்ட 5.9' இன்ச் சாம்சங் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று வீடியோ அறிவுறுத்துகிறது. இந்த டிவைஸ் மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm இன் புதிய Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், எல்இடி ஃபிளாஷ் கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 6 ஆக்சிஸ் கிம்பல் ஸ்டேபிலைசருக்கான ஆதரவுடன் வருகிறது.

Asus Zenfone 9 கேமரா, பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் விபரம்

Asus Zenfone 9 கேமரா, பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் விபரம்

இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் Sony IMX766 பிரைமரி சென்சார் உடன் அறிமுகமாகும். Asus Zenfone 9 ஆனது 4,300mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 மதிப்பீட்டுடன் வருகிறது. இந்த டிவைஸ் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம் என்று கூறுகின்றது. இந்த டிவைஸின் அறிமுகம் எப்போது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வீடியோவை வைத்துப் பார்க்கையில் விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 9 Leaked Video Shows Compact Flagship Device With Snapdragon 8+ Gen 1 Chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X