ஏன் Asus ZenFone 9 போனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? விஷயம் 'இது' தான் பாஸ்!

|

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உங்களுக்காகவே ஒரு பெஸ்டான புது ஸ்மார்ட்போன் மாடலை Asus நிறுவனம் அறிமுகம் செய்யத் தயாராகிறது. உங்களை வெயிட் செய்ய சொன்னதற்கான காரணம், வரப்போகும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் மாடலை வைத்து மட்டுமில்லை, இந்த டிவைஸில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டை பற்றியது. நீங்கள் ஏன் இதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் இதோ.

புது ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் நபர்களின் கவனம் இனி இது மேல் தான் இருக்கனும்

புது ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் நபர்களின் கவனம் இனி இது மேல் தான் இருக்கனும்

இனி புது ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனம் கட்டாயமாக ஏன் இந்த ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1) மீது மட்டும் இருக்கப் போகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தியில் பெரும்பாலான அளவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 (Snapdragon 8 Gen 1) சிப்செட்டில் இயங்கும் டிவைஸ்கள் தான் வாங்கக் கிடைக்கிறது. இவற்றின் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷன் புதிய சிப்செட் தான் இந்த Snapdragon 8+ Gen 1.

Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் என்ன கோளாறு இருக்கிறது?

Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் என்ன கோளாறு இருக்கிறது?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், இந்த புது சிப்செட் உடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் டிவைஸாக Asus நிறுவனத்திடமிருந்து வெளியான புதிய Asus ROG Phone 6 என்ற கேமிங் ஸ்மார்ட்போன் திகழ்கிறது. இது சக்தி வாய்ந்த ஒரு புதிய சிப்செட் மாடல் என்பதைக் காட்டிலும், Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் இருக்கும் கோளாறுகள் இந்த புதிய சிப்செட்டில் சரி செய்யப்பட்டுள்ளதே உண்மையான விஷயமாகும். Snapdragon 8 Gen 1 இல் காணப்பட்ட தெர்மல் பெர்பார்மன்ஸ் மற்றும் பேட்டரி கோளாறுகள் புதிய சிப்செட்டில் சரி செய்யப்பட்டுள்ளது.

Snapdragon 8+ Gen 1 மாடலா இந்த புதிய Asus ZenFone 9 ஸ்மார்ட்போன்?

Snapdragon 8+ Gen 1 மாடலா இந்த புதிய Asus ZenFone 9 ஸ்மார்ட்போன்?

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டில் காணப்படும் தெர்மல் பெர்பார்மன்ஸ் கோளாறு காரணமாக, ஸ்மார்ட்போன்களில் பேட்டரி மிக வேகமாக டீ-சார்ஜ் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுப் புகாரளிக்கப்பட்டது. இது பெரியளவு கோளாறு இல்லையென்றாலும், சில பயனர்களால் இது பெரிய தொல்லையாகப் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்னாப்டிராகன் செய்த சில மாறுபாட்டுடன் வெளியிடப்பட்ட புதிய சிப்செட் தான் இந்த Snapdragon 8+ Gen 1 மாடலாகும்.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

Asus ZenFone 9 சாதனத்தின் அறிமுகம் எப்போது தெரியுமா?

Asus ZenFone 9 சாதனத்தின் அறிமுகம் எப்போது தெரியுமா?

இனி வரவிருக்கும் பெரும்பாலான புதிய ஸ்மார்ட்போன் மாடல்களில் இந்த Snapdragon 8+ Gen 1 சிப்செட்டை நாம் காணலாம். அடுத்தபடியாக, இந்த சிப்செட் உடன் அறிமுகமாகக் காத்திருக்கும் புதிய டிவைஸ் தான் இந்த Asus ZenFone 9 ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த புதிய Asus ZenFone 9 சாதனத்தின் அறிமுக தேதி பற்றிய தகவல்களை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. இதன் படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஜூலை 28 ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

Asus Zenfone 9 இந்தியாவிற்கு எப்போது வரும்?

Asus Zenfone 9 இந்தியாவிற்கு எப்போது வரும்?

ஆசுஸ் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அதன் புதிய ஸ்மார்ட்போனான Asus Zenfone 9 மாடல், ஜூலை 28 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்குமா இல்லையா என்பதைப் பற்றி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், Asus நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாக இருப்பதால், இந்த டிவைஸ் இந்தியாவில் பட்ஜெட் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்பற்றிய லீக் தகவல் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

Asus ZenFone 9 டிவைஸ் சிறப்பம்சம்

Asus ZenFone 9 டிவைஸ் சிறப்பம்சம்

இந்த புதிய Asus ZenFone 9 டிவைஸ் 120Hz ரெப்ரெஷிங் ரேட் கொண்ட 5.9' இன்ச் சாம்சங் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ் மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm இன் புதிய Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், எல்இடி ஃபிளாஷ் கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது சமீபத்திய வீடியோ லீக் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது 6 ஆக்சிஸ் கிம்பல் ஸ்டேபிலைசருக்கான ஆதரவுடன் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

Asus Zenfone 9 கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

Asus Zenfone 9 கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் Sony IMX766 பிரைமரி சென்சார் உடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சாருடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிவைஸின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 12 மெகா பிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, Asus Zenfone 9 ஆனது 4,300mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.

Asus Zenfone 9 டிவைஸிற்காக காத்திருப்பது வொர்த்தா?

Asus Zenfone 9 டிவைஸிற்காக காத்திருப்பது வொர்த்தா?

இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையில் இயங்கும் என்றும் சமீபத்திய லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு கொண்ட IP68 மதிப்பீட்டுடன் வருகிறது. இந்த டிவைஸ் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விருப்பமிருந்தால், கட்டாயமாக ஜூலை 28 ஆம் தேதி வரை நீங்கள் காத்திருப்பது நல்லது. உண்மையை சொல்ல போனால் இந்த டிவைஸிற்காக நீங்கள் காத்திருப்பது செம வொர்த்.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 9 Is Set To Launch On July 28 With Snapdragon 8+ Gen 1 Chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X