காம்பாக்ட் சைசில் புது பிளாக்ஷிப் Zenfone 8 அறிமுகம் செய்யும் Asus.. விலை இதுவாக இருக்கலாம்..

|

ஆசஸ் (Asus) நிறுவனத்தின் ஆசஸ் ஜென்ஃபோன் 8 (Asus Zenfone 8) விரைவில் இந்தியாவின் உள்ளூர் சந்தைக்கு வரவிருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி தினேஷ் சர்மா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தகவலை அவர் டிவிட்டர் வழியாக ஒரு ட்வீட் மூலம் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது, இது விற்பனைக்கு முந்தைய ப்ரீபுக்கிங் பக்கத்தையும் இணைத்துள்ளது.

காம்பாக்ட் வடிவத்தில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட Asus ஜென்ஃபோன் 8

காம்பாக்ட் வடிவத்தில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட Asus ஜென்ஃபோன் 8

துரதிர்ஷ்டவசமாக, நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்த தகவலை இந்த பதிவுடன் வெளியிடவில்லை. 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மற்றும் 64 எம்பி முதன்மை கேமரா ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுவருகிறது. ஜென்ஃபோன் 8 மிகவும் காம்பாக்ட் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

புதிய ஜென்போன் 8 சாதனத்தின் இந்திய விலை என்னவாக இருக்கும்?

புதிய ஜென்போன் 8 சாதனத்தின் இந்திய விலை என்னவாக இருக்கும்?

நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த புதிய ஜென்போன் 8 சாதனம் இந்தியாவில் எதிர்பார்த்திடாத பிளாக்ஷிப் விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சில்லறை விலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சுமார் 630 டாலர் மற்றும் € 670 விலையை விட குறைவாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இந்த சாதனத்தின் விலை ரூ. 46,930 நெருங்குகிறது.

ரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.! ஏன்?ரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.! ஏன்?

காம்பெக்ட் சைசில் உறுதியான மற்றும் தெளிவான டிஸ்பிளே

காம்பெக்ட் சைசில் உறுதியான மற்றும் தெளிவான டிஸ்பிளே

இந்த சாதனம் 5.9' இன்ச் கொண்ட 1080 x 2400 பிக்சல் சூப்பர் அமோலேட் HDR10+ ஆதரவு கொண்ட 120 Hz டிஸ்பிளேவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. Android 11 இயங்குதளத்துடன் இயங்க கூடிய ZenUI 8 சாப்ட்வேர் உடன் வருகிறது.

ஸ்னாப்டிராகன் 888 5ஜி உடன் 16ஜிபி ரேம் வரை ஸ்டோரேஜ் வேரியண்ட்

ஸ்னாப்டிராகன் 888 5ஜி உடன் 16ஜிபி ரேம் வரை ஸ்டோரேஜ் வேரியண்ட்

இது குவால்காம் SM8350 ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி, 8ஜிபி, 12ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் உடன் கூடிய 128ஜிபி, 256 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 128GB மற்றும் 6GB RAM கொண்ட ஒரு மாடல்கவும், 128GB மற்றும் 8GB RAM மாடல், 256GB மற்றும் 8GB RAM கொண்ட மாடல், 256GB மற்றும் 12GB RAM மாடல் என்றும், இறுதியாக ஹை-வேரியண்ட் மாடலாக 256GB மற்றும் 16GB RAM உடன் ஜென்போன் 8 அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

மிரட்டலான பிளாக்ஷிப் கேமரா அம்சம்.. 8K மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங்

மிரட்டலான பிளாக்ஷிப் கேமரா அம்சம்.. 8K மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங்

கேமராவை பொறுத்த வரை இந்த புதிய ஜென்போன் 8 சாதனம் 64 MP பிரைமரி கேமரா மற்றும் 12 MP, f/2.2, 112˚, 14mm கொண்ட அல்ட்ரா வைடு சென்சார் உடன் கூடிய டூயல் பிக்சல் PDAF உடன் வருகிறது. எல்இடி பிளாஷ், எச்டிஆர் மற்றும் 12 MP செல்பி கேமரா உடன் வருகிறது. இந்த சாதனம் 8K மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு அம்சத்தை பொறுத்தவரை, இது டூயல் பேண்ட் வைஃபை 802.11, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus Zenfone 8 Coming To India Soon Know The Price Specification and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X