அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அசுஸ் நிறுவனம் தனது 5இசெட்(5Z) மற்றும் 6இசெட்(6Z) ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அசுஸ் 6இசெட் விலைகுறைப்பு
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 6இசெட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 6இசெட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 6இசெட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசுஸ் 5இசெட்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.24,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.28,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்போன் 5z-இரட்டை கேமரா அமைப்பு.!
அம்சங்களை பொறுத்தமட்டில, சென்போன் 5z ஆனது 6.2 அங்குல முழு எச்டி+ எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடனாக 8 ஜிபி வரையிலான ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு ஆதரவையும் வழங்கும். கேமரா பிரிவில், அசுஸ் மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு தேர்வு செய்துள்ளது.

சென்போன் 5z-போர்ட்ரெயிட் நிலை காட்சி.!
அதாவது, ஒரு பெரிய 1.4 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் உடனான 8 எம்பி இரண்டாம் நிலை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலை சென்சார் அந்த போர்ட்ரெயிட் நிலை காட்சிகளை உருவாக்க அனுமதிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது, அசுஸ் சென்போன் 5இசெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
சென்போன் 5இசெட் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி போர்ட், குவிக் சார்ஜ் 3.0 ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அசுஸ் 6இசெட் அம்சங்கள்
6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080 பிக்சல்)
எச்டிஆர் ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி
அட்ரினோ 640ஜிபியு
கேமரா: 48எம்பி 10 13எம்பி
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
5000எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








