ஆசஸ் ஜென்போன் 3 ஜூம்' மாடல் இந்தியாவில் வெளியாவது எப்போது?

By Siva
|

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற CES கண்காட்சியில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசஸ் நிறுவனம் 'ஆசஸ் ஜென்போன் AR' மற்றும் ஆசஸ் ஜென்போன் 3 ஜூம்' ஆகிய இரண்டு மாடல்களை வெகுவிரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் ஆசஸ் ஜென்போன் AR' மாடல் கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த போனின் விலை ரூ.49.999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசஸ் ஜென்போன் 3 ஜூம்' மாடல் இந்தியாவில் வெளியாவது எப்போது?

இந்த நிலையில் ஆசஸ் ஜென்போன் 3 ஜூம்' மாடல் வெளியாகும் நாள் குறித்து அதன் வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆசஸ் ஜென்போன் AR' மாடல் வெளியான அறிமுக விழாவில் ஆசஸ் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்தியாவின் மண்டல தலைவர் பீட்டர் சாங் அவர்கள் ஆசஸ் ஜென்போன் 3 ஜூம் மாடல் மிக விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று உறுதியளித்தார்

பீட்டர் சாங் அவர்கள் சரியான ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை எனிலும் டெக்னாலஜி செய்தி நிறுவனம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசஸ் ஜென்போன் 3 ஜூம் மாடல் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இனி இந்த ஆசஸ் ஜென்போன் 3 ஜூம் மாடலின் தன்மைகள் குறித்து பார்ப்போம். இந்த மாடல் 5.5 இன்ச் FHD 1080P அமோஎல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டது. இதில் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தன்மையும் உண்டு. மேலும் இந்த மாடல் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் உடன் அட்ரெனோ 506 கிராபிக்ஸ் வசதியும் உண்டு. மேலும் இந்த மாடல் 3GB மற்றும் 4GB என இரண்டு ரேம் வகைகளிலும் 32GB/64GB/128GB என வெவ்வேறு விதங்களில் இண்டர்னல் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியையும் கொண்டது. மேலும் இந்த மாடலில் 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தி கொள்ளலாம்

ஆண்ட்ராய்ட் 6.0 ஓ.எஸ் கொண்ட இந்த ஆசஸ் ஜென்போன் 3 ஜூம் மாடல் டூயல் சிம் கொண்டது. மேலும் 4G VoLTE, யூஎஸ்ட்பி டைப் C போர்ட், மற்றும் 5000mAh பேட்டரி தன்மையை கொண்டது. மேலும் இந்த மாடலில் 12MP பின் கேமிராவும், அதில் டூயல் டோன் எல்.இ.இட் பிளாஷ் தன்மை, லேசர் ஏ.ஆர், PDAF ஆகிய அம்சங்கள் உண்டு. இந்த போனின் செகண்டரி கேமிராவில் 5P பெரிய லென்ஸ் உண்டு. மேலும் 13MP செல்பி கேமிராவும் இந்த மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus ZenFone 3 Zoom India launch seems to be pegged to happen in the second half of August.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X