Asus செய்ய துடிக்கும் மிகப்பெரிய சம்பவம் இது தானா? போன வருஷம் 9.. இப்போ Zenfone 10-ஆ!
கடந்த ஆண்டில் கைக்கு அடக்கமான கியூட் ஸ்மார்ட்போன் சாதனமாகவும், மிகவும் சக்தி வாய்ந்த மிரட்டலான ஸ்மார்ட்போன் சாதனமாகவும் புகழப்பட்ட சாதனம் தான் ASUS Zenfone 9. இப்போது ASUS நிறுவனம் ASUS Zenfone 10 சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ASUS நிறுவனம் கடந்த ஜூலை 2022 ஆம் ஆண்டில் Asus Zenfone 9 மாடல் போனை வெளியிட்டது. இந்த சாதனம் முழு HD+ தீர்மானம் கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 5.9' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட்டை கொண்டுள்ளது. இது 16GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

புதிய Asus Zenfone 10 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமா?
இப்போது, ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ஜென்ஃபோன் 9 மாடலுக்கு அடுத்தபடியாக, விரைவில் ஆசஸ் ஜென்ஃபோன் 10 (Asus Zenfone 10) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் புதிய Asus Zenfone 10 சாதனம், நிறுவனத்தின் முந்தைய மாடலான Asus Zenfone 9 மாடலை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்டதாக இருக்குமென்று கூறப்படுகிறது.
பிரைஸ்பாபாவில் வெளியான தகவலின் படி, வரவிருக்கும் புதிய Asus Zenfone 10 இன் சாத்தியமான வெளியீட்டுக் காலவரிசை மற்றும் முழு விவரக்குறிப்புகளையும் அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்படுத்தியுள்ளனர். ASUS Zenfone 10 சாதனமானது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 6.3' இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இது ஹூட்டின் கீழ், Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
Asus Zenfone 10 ஸ்மார்ட்போன் சாதனம் 16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவரும். இது ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்கும். கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை, Zenfone 10 ஆனது OIS ஆதரவைக் கொண்டிருக்கும் 200MP பிரைமரி கேமராவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. Asus Zenfone 10 ஆனது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் பாதுகாப்பிற்கான IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

Asus Zenfone 10 விலை என்னவாக இருக்கும்?
இந்த புதிய Asus Zenfone 10 அறிமுகத்தைப் பொறுத்தவரை, இது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாகும் என்றும், இது மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது Asus Zenfone 9 போன்ற 4,300mAh அல்லது 5000mah பேட்டரியை பேக் செய்யுமென்று கூறப்படுகிறது.
இது 30W வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இது 5G ஆதரவு, 4G VoLTE, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக், Wi-Fi 802.11ax 6E, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், USB Type-C போர்ட் மற்றும் NFC ஆதரவு போன்றவற்றைக் கொண்டிருக்கும், இது ZenUI 10 உடன் Android 13 இல் இயங்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலை பற்றிய விபரங்களை இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும் Asus Zenfone 9 விலை பற்றி பேசுகையில், முந்தைய மாடலான Asus Zenfone 9 இந்தியாவில் ரூ.64,490 விலையில் வருகிறது. Asus Zenfone 10 இந்த விலை வரம்பை ஒட்டி வருவதற்கு வாய்ப்புள்ளது. அல்லது சில ஆயிரங்கள் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications








