என்ன Asus இப்படி செஞ்சுடீங்க? Asus Zenfone 10 விலை தெரியாமல் லீக் ஆகிவிட்டதா?
ஆசஸ் நிறுவனம் அதன் அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராகிவிட்டது. இது ஆசஸ் ஜென்ஃபோன் 10 (Asus Zenfone 10) என்று பெயருடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக இதன் விலை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.
அறிமுகத்திற்கு முன்பாக எப்படி வெளிவராத போனின் விலை வெளியானது என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கிறதல்லவா? ஆசஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில், தெரியாமல் இந்த விலை பட்டியலிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான லீக் தகவல்கள் மற்றும் கீக்பெஞ்ச் விபரங்கள் வரவிருக்கும் சாதனத்தின் தகவல்களை பற்றி ஏற்கனவே வழங்க துவங்கியுள்ளன. இப்போது, அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, Asus Zenfone 10 இன் விலை பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன.

வரவிருக்கும் Asus Zenfone 10 இன் கண்மூடித்தனமான கேமரா சோதனைக்காக பிரத்தியேக இணையதளத்தை Asus அறிமுகப்படுத்தியுள்ளது. கேமரா தேர்வுமுறைக்காக Asus-க்கு மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கும், தொடர்ச்சியான புகைப்படங்களுக்கு வாக்களிக்க பயனர்களை இந்த இணையதளம் ஊக்குவிக்கிறது. கூடுதலாக, பங்கேற்பாளர்கள் லக்கி டிராவில் நுழைந்து அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்குப் பிறகு புது Asus Zenfone 10 ஐ வெல்லும் வாய்ப்பும் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த போட்டியின் நிபந்தனை விபரங்களை நிறுவனம் பட்டியலிட்ட போது, இதில் இந்த போனின் விலை விபரங்களை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதன்படி, Asus Zenfone 10 இன் தோராயமான சில்லறை மதிப்பு $749 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில், இது சுமார் ரூ.61,841 விலையை நெருங்குகிறது. Asus Zenfone 10 இன் லீக் ஆன விலை உண்மையில் தொடக்க விலையாக இருந்தால், அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது அனைத்து வகைகளிலும் சுமார் $50 அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
தெரியாதவர்களுக்கு, Asus Zenfone 9 ஆரம்பத்தில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலை அறிமுகம் செய்தது, இதன் விலை $699 என்று கூறப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 57,712 விலையில் வாங்க கிடைத்தது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இவை முறையே $749 மற்றும் $799 என்ற விலையில் துவங்குகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Asus Zenfone 10 தொடர்பான சிறப்பம்ச விபரங்களை பற்றி பேசுகையில், வரவிருக்கும் Asus Zenfone 10 ஆனது 6.3' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும். இது மென்மையான 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் இருக்கும் என்று வதந்தி பரவுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் உடன் வெளிவரும். இது ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா திறன்களைப் பொறுத்தவரை, Asus Zenfone 10 ஆனது சாத்தியமான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் ஈர்க்கக்கூடிய 200MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 மதிப்பீட்டைக் கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. இந்த போன் 2023 ஆம் ஆண்டில் இறுதி காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








