Home
News

ஆடிப்போன இந்தியர்கள்.. அசத்தும் ASUS.. இவ்ளோ கம்மி விலைக்கு 32 மணிநேர பேட்டரி உடன் AI Laptop-ஆ!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 13-இன்ச், 15-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல்கள் அறிமுகமான சில தினங்களில் ஆசஸ் நிறுவனம் 2 சக்திவாய்ந்த ஏஐ-பவர்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அவைகள் - ஆசஸ் ஜென்புக் ஏ14 (Asus Zenbook A14) மற்றும் ஆசஸ் விவோபுக் 16 (Asus Vivobook 16) மாடல்கள் ஆகும்

படைப்பாற்றல் மிக்க வல்லுநர்கள் மற்றும் பட்ஜெட் உணர்வுள்ள பயனர்களை ஈர்க்கும் வண்ணம், ஆசஸ்-ன் இந்த புதிய லேப்டாப்கள் உயர்மட்ட செயல்திறன், ஏஐ அடிப்படையிலான அம்சங்கள் மற்றும் நீண்ட பேட்டரி லைப் ஆகியவற்றை உறுதியளிக்கின்றன. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை? இதோ விவரங்கள்:

ASUS.. இவ்ளோ கம்மி விலைக்கு 32 மணிநேர பேட்டரி உடன் AI Laptop-ஆ!

ஆசஸ் ஜென்புக் ஏ14 - ஒரு பிரீமியம், அல்ட்ரா-லைட் லேப்டாப் ஆகும். இது வெறும் 980 கிராம் எடை கொண்டது. இது ஒரு செராலுமினிய சேஸ், செராமிக் மற்றும் அலுமினியத்தின் கலவையாகும். இந்த கலவை - ஒரு நேர்த்தியான, ஸ்டைலான டிசைன் உடன் சேர்த்து நீடித்து உழைக்கும் தன்மையையும் உறுதி செய்கிறது.

படைப்புத்திறன் நிபுணர்களுக்கு ஏற்ற.. ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் சிப்செட் உடன் வரும் வேரியண்ட்டின் விலை ரூ.1,29,990 என்றும், பல்பணி மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்த.. ஸ்னாப்டிராகன் எலைட் சிப்செட் உடன் வரும் வேரியண்ட்டின் விலை ரூ.99,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆசஸ் ஜென்புக் ஏ14 லேப்டாப்பில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்கள்:
- 14 இன்ச் லுமினா OLED டிஸ்ப்ளே
- 32 மணிநேர பேட்டரி லைஃப்
- அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கான Wi-Fi 7 ஆதரவு மற்றும் USB4 போர்ட்கள்

ஆசஸ் விவோபுக் 16 - இது ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஏஐ லேப்டாப் ஆகும். மிகவும் மலிவு விலையில் ஏஐ மூலம் இயக்கப்படும் செயல்திறனை தேடும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். விலையை பொறுத்தவரை இது ரூ. 65,990 முதல் தொடங்குகிறது.

இது ஸ்னாப்டிராகன் எக்ஸ் சிப்பால் இயக்கப்படுகிறது, 45 TOPS (டெரா செயல்பாடுகள் ஒரு வினாடிக்கு) NPU செயல்திறனை வழங்குகிறது. மேலும் இது 16-இன்ச் FHD+ IPS டிஸ்பிளே, 27 மணிநேரம் வரை பேட்டரி லைஃப், ஏஐ அடிப்படையிலான கேமரா பாதுகாப்பு அம்சங்கள், லைவ் கேப்ஷன்கள், ஏஐ அடிப்படையிலான ஸ்கெட்ச்-டு-ஆர்ட் அம்சங்கள் மற்றும் போட்டோ எடிட்டிங்கிற்கான ஜெனரேட்டிவ் ஃபில் போன்ற ஏஐ டூல்ளையும் கொண்டுள்ளது.

விற்பனையை பொறுத்தவரை ஆசஸ் ஜென்புக் ஏ14 மற்றும் விவோபுக் 16 ஆகிய 2 புதிய லேப்டாப்களுமே ஆசஸ் இ-ஷாப், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon), ஆசஸ்-ன் பிரத்தியேக கடைகள் மற்றும் பிற சில்லறை விற்பனை கூட்டாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும்

ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் 2025 மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 13-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.1,24,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 முக்கிய அம்சங்கள்:
- 13 இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15 இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளே
- எம்4 சிப் (நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு)
- 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவு

- 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
- ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்
- சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமரா
- 13-இன்ச் மாடலில் 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரி, 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15-இன்ச் மாடலில் 66.5Wh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS Zenbook A14 Vivobook 16 AI powered laptops Launched in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X