Acer Vs Asus Laptop: ரூ.20,990-க்கு ஆசஸ் லேப்டாப், ரூ.23,990-க்கு ஏசர் லேப்டாப்: எது பக்கா தெரியுமா?

|

ஏசர் ஒன் 14 பென்டியம் கோல்ட் லேப்டாப் ரூ.23,990 எனவும் ஆசஸ் செலரன் டூயல் கோர் லேப்டாப் ரூ.20,990 என்ற பட்ஜெட் விலையிலும் கிடைக்கிறது. இந்த இரண்டு லேப்டாப்களையும் ஒப்பிட்டு சிறந்தவை எது என்பதற்கான விவரங்களை பார்க்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை, ஆன்லைன் வகுப்பு

வீட்டில் இருந்தே வேலை, ஆன்லைன் வகுப்பு

கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதான தேவையாக லேப்டாப்

பிரதான தேவையாக லேப்டாப்

பல்வேறு தேவைகளுக்கும் லேப்டாப் பிரதானமாக்கப்பட்டு இருக்கிறது. லேப்டாப் பட்ஜெட் விலையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. இதில் ஆசஸ் மற்றும் ஏசர் நிறுவனம் வழங்கும் பட்ஜெட் விலை லேப்டாப்களில் சிறந்தவற்றை காணலாம்.

ஏசர் ஒன் 14 பென்டியம் கோல்ட்

ஏசர் ஒன் 14 பென்டியம் கோல்ட்

ஏசர் நிறுவனத்தின் ஏசர் ஒன் 14 பென்டியம் கோல்ட் லேப்டாப் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.23,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப நிர்ணய விலை ரூ.37,500 ஆக இருந்தது. அதேபோல் ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் செலரன் டூயல் கோர் லேப்டாப் ரூ.20,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் நிர்ணய விலை ரூ.24,390 ஆக இருந்தது.

14 இன்ச் டிஸ்ப்ளே வசதி

14 இன்ச் டிஸ்ப்ளே வசதி

ஏசர் ஒன் 14 பென்டியம் கோல்ட் லேப்டாப், இதன் பெயர் குறிப்பிடுவது போல் இது 14 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதேபோல் இந்த லேப்டாப் பென்டியம் கோல்ட் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இதில் விண்டோஸ் 10 ஹோம் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

ஆசஸ் செலரன் டூயல் கோர் லேப்டாப்

ஆசஸ் செலரன் டூயல் கோர் லேப்டாப்

ஆசஸ் செலரன் டூயல் கோர் லேப்டாப்பானது 15.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதேபோல் இந்த லேப்டாப் இன்டெல் செலரான் டூயல் கோர் என்4020 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஜென்யூன் விண்டோஸ் 10 ஓஎஸ் ப்ரீஇன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

4 மணிநேர பேட்டரி ஆயுள்

4 மணிநேர பேட்டரி ஆயுள்

ஏசர் ஒன் 14 பென்டியம் கோல்ட் லேப்டாப் வைபை, ப்ளூடூத், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யூஎஸ்பி டைப் ஏ போர்ட்களுடன் வருகிறது. மேலும் இந்த லேப்டாப் 4 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இதில் கூடுதல் ஆதரவாக மைக்ரோபோனுடன் கூடிய எச்டி வெப்கேம் இருக்கிறது. இந்த லேப்டாப் 4ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் வருகிறது.

4ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் வரும் லேப்டாப்

4ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் வரும் லேப்டாப்

ஆசஸ் லேப்டாப் விஜிஏ வெப்கேம் உடன் வருகிறது. இதில் சிக்லெட் கீபோர்ட் வசதி இருக்கிறது. இந்த லேப்டாப் 4ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் வருகிறது. இது டிரான்ஸ்பரன்ட் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Asus Vs Acer: Asus Celeron Dual Core, Acer One 14 Pentium Gold Laptops Available at Under Rs.24,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X