விலை கொஞ்சம் ஒஸ்தி., அம்சம் இருக்கே அடடா: ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 அறிமுகம்- ஆன்லைன் வகுப்பு, வேலைக்கு அவசியம்!

|

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 சாதனம் 50 வாட்ஸ் ஹவர் பேட்டரி உடன் எச்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 சீனாவில் சமீபத்திய ஏஎம்டி ரைசன் 5000 தொடர் சிபியூ உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் இரண்டு உள்ளமைவுகளோடு ஒரே நிறத்தில் வருகிறது. இது தரம் வாய்ந்த அம்ச விகிதத்தைவிட உயர்ரக ஓஎல்இடி வண்ண துல்லிய காட்சியை வழங்குகிறது

டிஸ்ப்ளே மேற்புறத்தில் வெப்கேம்

டிஸ்ப்ளே மேற்புறத்தில் வெப்கேம்

இதில் காட்சி பக்கத்தில் மெலிதான உளிச்சாயுமோரம் இருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் வெப்கேம் அம்சத்தோடு வருகிறது. வெப்கேம் டிஸ்ப்ளே மேற்புறத்தில் இருக்கிறுது. அதேபோல் இதில் டச்பேட் மிகவும் பெரியதாக இருக்கிறது. ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 சிறந்த அம்சத்தோடு கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கிறது.

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 விலை குறித்து பார்க்கையில்., இதன் ஆர்எஸ்-5600எச், 16 ஜிபி, 512 ஜிபி உள்ளமைப்பு வேரியண்ட் இந்திய விலை மதிப்புப்படி ரூ.52,500 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் ஆர்7-5800எச், 16 ஜிபி, 512 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,100 ஆக இருக்கிறது. ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 மெக்கானிக் சில்வர் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஜேடி.காம்-ல் முன்பதிவுக்கு கிடைக்கிறது. மே 11 முதல் ஷிப்பிங் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 சாதனம் சர்வதேச சந்தையில் கிடைக்கும் விவரங்கள் குறித்து ஆசஸ் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 விவரக்குறிப்புகள்

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 விவரக்குறிப்புகள்

ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 விவரக்குறிப்புகள், அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது விண்டோஸ் 10 ஹோம் ஓஎஸ் உடன் இயங்குகிறது. இது 14 இன்ச் ஓஎல்இடி எச்டிஆர் டிஸ்ப்ளே 2,880x1,800 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் இந்த சாதனம் வருகிறது. 600 நிட்ஸ் பீக் பிரகாச தன்மையுடன் 10பிட் வண்ண அம்சம் கொண்டிருக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

அதேபோல் ஹூட்டின் கீழ் பார்க்கையில் இது விவோபுக் ப்ரோ 14 ஏஎம்டி ரைசன் 5 5600 எச் சிபியூ உடன் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு வேரியண்ட்களும் ஏஎம்டி ரேடியோஸ் கிராபிக்ஸ் அம்சத்தோடு வருகிறது. அதேபோல் 4 ரேம், 16ஜிபி டிடிஆர், 512 ஜிபி ஜென் 3 எக்ஸ் உடன் வருகிறது. வைஃபை 6, ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி 2.0 போர்ட்கள், மைக்ரோ எஸ்டி கார்ட் ரீடர் ஆகிய இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது.

50 வாட்ஸ் மணிநேர பேட்டரி அம்சம்

50 வாட்ஸ் மணிநேர பேட்டரி அம்சம்

ஆசஸ் விவோபுக் ப்ரோ 16 ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. ஹர்மன் கார்டனால் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது 50 வாட்ஸ் மணிநேர பேட்டரி அம்சத்தோடு பாதுகாப்பு அம்சத்திற்கு பவர் பட்டனுடன் கூடிய கைரேகை ஸ்கேனர் மற்றும் மறைந்த நிலையில் இருக்கும் வெப்கேம் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Asus vivobook pro 14 Launched with OLED Display, 50Whr Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X