Home
News

ASUS ROG Phone 9: மார்க்கெட் மிரளுது.. 185Hz டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. 200% ஒரிஜினல் கேமிங் போன்..

ஆசுஸ் (ASUS) நிறுவனம் ராக் போன் 9 சீரிஸ் கேமிங் ஸ்மார்ட்போன்களை (ROG 9 series gaming smartphone) அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆசுஸ் நிறுவனம் ஆசுஸ் ராக் போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசுஸ் ராக் போன் 9 ப்ரோ (ASUS ROG Phone 9 Pro) ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களில் பல அட்டகாசமான அம்சங்களை வழங்கி, ஆசுஸ் நிறுவனம் 200% ஒரிஜினல் கேமிங் போனை அறிமுகம் செய்துள்ளதென்று கூட நாம் தயக்கம் இல்லாமல் கூறலாம்.

அந்த அளவிற்கு இந்த ஆசுஸ் கேமிங் போனில் (ASUS gaming phone) அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பம்சம் மற்றும் விலை விபரங்கள் இப்போது தெரிந்துகொள்ளலாம். ஆசுஸ் ராக் போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசுஸ் ராக் போன் 9 ப்ரோ (ASUS ROG Phone 9 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஒரே மாதிரியான அம்சங்களை பெற்றுள்ளன.

ASUS ROG Phone 9: மார்க்கெட் மிரளுது.. 185Hz டிஸ்பிளே.. 24GB ரேம் 1TB

ஆசுஸ் ராக் போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசுஸ் ராக் போன் 9 ப்ரோ (ASUS ROG Phone 9 Pro):

ஆனால், ப்ரோ மாடல் மட்டும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது. இந்த இரண்டு மாடல்களும், 6.78" இன்ச் அளவு கொண்ட 2400×1080 பிக்சல் (pixels) தீர்மானத்துடன் முழு எச்டி+ AMOLED டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1Hz முதல் 120Hz LTPO ஆதரவை கொண்டுள்ளது. இதன் தனி சிறப்பென்னவென்றால், கேமிங் மோடில் (gaming mode) இந்த டிஸ்பிளே அதிகபட்சமாக 185Hz ரெஃப்ரஷ் ரேட்டை (refresh rate) ஆதரிக்கிறது.

இதன் டிஸ்பிளே 10 பிட் HDR 20:09 அஸ்பெக்ட் ரேஷியோ (aspect ratio) உடன் 2500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (up to 2500 nits brightness) உடன் கார்னிங்க் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் (Corning Gorilla Glass Victus 2 protection) வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ASUS ROG Phone 9 சீரிஸ் மாடல்கள் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டை கொண்டுள்ளது.

இது அட்ரினோ 830 ஜிபியு உடன் 12GB / 16GB / 24GB LPDDR5X ரேம் (RAM) மற்றும் 256GB / 512GB / 1TB (UFS 4.0) ஸ்டோரேஜ் (storage) உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 15 உடன் ராக் யுஐ (Android 15 with ROG UI) இயங்குதளத்தில் இயங்குகிறது. இது டூயல் நானோ + நானோ சிம் கார்டு (dual nano + nano SIM card) ஆதரவை கொண்டுள்ளது.

ஆசுஸ் ராக் போன் 9 (ASUS ROG Phone 9 Price) மற்றும் ஆசுஸ் ராக் போன் 9 ப்ரோ (ASUS ROG Phone 9 Pro Price) விலை என்ன?

கேமரா அம்சத்தை பொறுத்த வரையில், ASUS ROG Phone 9 சாதனம் 50MP + 13MP + 5MP மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. மறுபுறம், ASUS ROG Phone 9 Pro சாதனம் 50MP + 13MP + 32MP 3x டெலிபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் 90° FoV உடன் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த போன்கள் 3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர், 5 மேக்னெட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (5-magnet stereo speaker), 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 7 802.11 be, ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ்/க்ளோனஸ்/ பெய்டோ (GPS/GLONASS/Beidou), Galileo(E1+E5a), QZSS(L1+L5), NavIC(L5), USB Type-C, NFC போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த போன்கள் 5800mAh பேட்டரியுடன் 65W ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் (Hyper charge fast charging) ஆதரிக்கிறது.

குயிக் சார்ஜ் 5.0 (Quick Charge 5.0) மற்றும் பிடி சார்ஜிங் (PD Charging), 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi wireless charging), ASUS ROG Phone 9 சாதனம் ஸ்டோர்ம் வைட் (Storm White) மற்றும் பாண்டம் பிளாக் (Phantom Black) நிறங்களில் வருகிறது. இதன் 12GB + 256GB மாடல் விலை தோராயமாக ரூ.84,432 ஆக இருக்கும்.

அதேபோல், 12GB + 512 GB மாடல் விலை இந்தியாவில் ரூ.1,02,80 ஆக இருக்கலாம். ASUS ROG Phone 9 Pro போனின் 16GB + 512GB விலை இந்திய மதிப்பில் ரூ.1,01,320 ஆகும். இதன் 24GB + 1TB மாடல் விலை ரூ. 1,26,650 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
ASUS ROG Phone 9 and 9 Pro with 185Hz AMOLED Display 24GB RAM 1TB Storage Check Price and Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X