அடுத்த முரட்டு தனமான சக்தி வாய்ந்த கேமிங் போன் இது தான்.. மிரளவிடும் அம்சங்கள்.. எந்த மாடல்?
ஆசஸ் ராக் போன் 8 (Asus ROG Phone 8) சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.
நமக்கு கிடைத்த தகவலின் படி, ஆசஸ் ராக் போன் 8 அடிப்படை ஆசஸ் ராக் போன் 8 (Asus ROG Phone 8), ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ (Asus ROG Phone 8 Pro) மற்றும் ஆசஸ் ராக் போன் 8 அல்ட்ரா (Asus ROG Phone 8 Ultra) ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்ட ROG ஃபோன் 7 வரிசைக்கு அடுத்ததாக இந்த ராக் போன் 8 சீரிஸ் வரிசை வெளிவரவிருக்கிறது.

ஆசஸ் ராக் போன் 7 சீரிஸ் வரிசையை பற்றி பேசுகையில், இது ஆசஸ் ராக் போன் 7 (Asus ROG Phone 7) மற்றும் ஆசஸ் ராக் போன் 7 அல்டிமேட் (Asus ROG Phone 7 Ultimate) மாடல்களுடன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசஸ் ராக் போன் 8 (ROG Phone 8) மாடல்களில் 3 மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இதன் வெளியீட்டு காலவரிசையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
ஆசஸ் ராக் போன் 8 (Asus ROG Phone 8):
இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் நமக்கு சில லீக் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் இந்த புதிய அசுஸ் ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட் இடம்பெறும் விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட தகவல் உயர்தர அல்டிமேட் மாடல் 3C சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. இப்போது இந்த ஃபோன் கீக்பெஞ்ச (Geekbench) இல் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆசஸ் ராக் போன் 8 அல்டிமேட் (Asus ROG Phone 8 Ultimate) என ஊகிக்கப்படும் ஆசஸ் (Asus) மாடல், கீக்பெஞ்ச தளத்தில் 'ASUS_AI2401_D,' என்ற மாடல் எண்ணுடன் பட்டியலிடப்பட்டது. நவம்பர் 20 அன்று. சிங்கிள்-கோர் டெஸ்டில் 2,235 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 7,098 புள்ளிகளையும் பெற்ற செயலியுடன் இந்த போன் காணப்பட்டுள்ளது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட்டின் எண்களை கொண்டிருந்தது.
ஆசஸ் ராக் போன் 8 அல்டிமேட் (Asus ROG Phone 8 Ultimate) ஆனது 24GB ரேம் உடன் வரக்கூடும் என்றும். இது பிரத்தியேகமான ROG UI உடன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தில் இயங்கும் என்றும் பட்டியல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு 3C சான்றிதழ் தளத்தில் ஸ்பாட் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மாடல் 65W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று பரிந்துரைத்தது. இது 5G இணைப்பு உடன் வருகிறது.
ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC):
குறிப்பாக, 'ASUS_AI2401_A' செப்டம்பர் 26 அன்று பட்டியலிடப்பட்டது. இந்த போன் 16ஜிபி ரேம் உடன் காணப்படுகிறது.இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இது ROG Phone 8 தொடரின் அடிப்படை அல்லது Pro மாதிரியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆசஸ் ராக் போன் 7 மாடல்கள் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) உடன் இணைக்கப்பட்டது.
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்பட்டது. இவை ஸ்ட்ரோம் வைட் (Storm White) வண்ணத்தில் கிடைக்கின்றன. அடிப்படை மாடல் கூடுதல் பந்தம் பிளாக் (Phantom Black) விருப்பத்தில் வழங்கப்படுகிறது. சமீபத்திய தகவல் படி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் முந்தைய SoCகளை விட ஃபோன்களின் செயல்திறனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








