அடேங்கப்பா! Asus ROG Phone 6-ஆ இது? என்ன டிஸைனு என்ன லுக்கு? AeroActive Cooler 6 கூட இருக்கா?
பார்த்தவுடன் வாயை பிளக்க வைக்கும் தோற்றத்தில் நம்மை கவர்ந்திழுக்கும் இந்த புதிய சாதனம் Asus நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஆம், ஆசுஸ் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய காத்திருக்கும் Asus ROG Phone 6 டிவைஸ் தான் இது. உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த Asus ROG Phone 6 இன் முதல் சிறப்பே இதன் பியூச்சரிஸ்டிக் டிசைன் தான்.

மிரட்டலான டிவைஸுடன் அறிமுகமாகும் Asus ROG Phone 6
அதுமட்டுமின்றி, இந்த டிவைஸுடன் அறிமுகம் செய்யப்படும் ஏரோஆக்ட்டிவ் கூலர் 6 (AeroActive Cooler 6) மற்றும் டெவில்கேஸ் கார்டியன் லைட் பிளஸ் (Devilcase Guardian Lite Plus) ஆக்சஸரீஸ் மற்றொரு சிறப்பாகும். இந்த புதிய Asus ROG Phone 6 சாதனம் பற்றிய சில முக்கிய தகவல்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பிரபல டிப்ஸ்டர் இந்த போன் பற்றிய புகைப்படங்களையும் லீக் செய்திருக்கிறார்.

Asus ROG Phone 6 எப்போது அறிமுகம்?
Asus ROG Phone 6 டிவைஸை நாம் என்னென்ன அம்சங்களுடன் எதிர்பார்க்கலாம்? இந்த புதிய ஸ்மார்ட்போன் என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும்? என்பது போன்ற பல தகவல்களை பற்றிய முழுமையாக இப்போது விரிவாகப் பார்க்கலாம்.இந்த புதிய Asus ROG Phone 6 சாதனம் வரும் ஜூலை 5 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபலமான டிப்ஸ்டர் Evan Blass வெளியிட்ட புகைப்படங்கள்
பிரபலமான டிப்ஸ்டர் Evan Blass, வரவிருக்கும் இந்த புதிய Asus ROG Phone 6 இன் ஹை-ரெசொலூஷன் கொண்ட ரெண்டர் புகைப்படங்களை அதன் துணைக்கருவிகளுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவான் ப்ளாஸ் டிப்ஸ்டர், வரவிருக்கும் இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை 91 மொபைல்ஸ் வழியாக எடுத்துவந்துள்ள. இந்த போனின் முன்பக்க மற்றும் பின்புற விவரங்களை ரெண்டர் புகைப்படங்களைத் தெளிவாகக் காண்பிக்கிறது.

அசர வைக்கும் ஆக்சஸரீஸ்கள் டெவில்கேஸ் கார்டியன்
அதேபோல், Asus ROG Phone 6 உடன் அறிமுகமாகும் ஏரோஆக்டிவ் கூலர் 6 (AeroActive Cooler 6) மற்றும் டெவில்கேஸ் கார்டியன் லைட் ப்ளஸ் (Devilcase Guardian Lite Plus) போன்ற சில ஆக்சஸெரீஸ்களையும் அந்த ரெண்டர் புகைப்படம் காண்பிக்கிறது. இந்த ஆக்சஸரீஸ்கள் போனுடன் வெளியிடப்படும் அல்லது தனியாக விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படிக் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய நாம் அறிமுகம் வரை காத்திருக்க வேண்டியதுள்ளது.

Asus ROG Phone 6 இல் என்ன மாற்றம் உள்ளது?
Asus ROG Phone 6 டிவைஸானது, அதன் முன்னோடியான ROG Phone 5 இன் தோற்றத்தை ஒத்திருக்கிறது. ஆனால், Asus ROG Phone 6 இன் வடிவத்தில் சில மாற்றங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக புதிய Asus ROG Phone 6 சாதனத்தின் சிறந்த கேமரா அனுபவத்தை உறுதி செய்ய நிறுவனம் அதன் கேமரா ஐலேண்ட் மாடியுளை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய சாதனத்தின் முன்பக்க டிஸ்பிளேவில் நாட்ச் அல்லது பஞ்ச் ஹோல்ஸ் எதுவும் இல்லாமல் வருகிறது.

Asus ROG Phone 6 டிஸ்பிளே விபரம்
Asus ROG Phone 6 சாதனம் 165Hz ரெபிரஷ்ஷிங் ரேட் வீதத்துடன் 6.78' இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிட்டுள்ளது. இது, Asus ROG Phone 6 இன் முன்னோடியான Asus ROG Phone 5-யில் வழங்கப்பட 144Hz புதுப்பிப்பு விகிதத்தை விட மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Asus ROG Phone 6 கேமரா அம்சம்
பின்புறத்தில், Asus ROG Phone 6 சாதனம் 64MP கொண்ட பிரைமரி லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸை உள்ளடக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. Asus ROG Phone 6 போனில் உள்ள கேமராக்கள் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவைக் கொண்டிருக்கும் என்று முந்தைய லீக் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி அம்சம்
முன்பக்க செல்பி கேமராவைப் பொறுத்தவரை, இது 12MP சென்சாருடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Asus ROG Phone 6 சாதனம் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் 18GB வரை LPDDR5 RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 1TB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ் 5,850mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இது 65W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

ஏரோஆக்டிவ் கூலர் 6 ஆக்சஸரீஸ் எதற்காக தெரியுமா?
இது தவிர, இந்த சூப்பர் ஹைடெக் Asus ROG Phone 6 கேமிங் ஸ்மார்ட்போன், அதன் முன்னோடியான Asus ROG Phone 5 இல் வழங்கப்பட ஒருவித ஹீட் டிஸிபேஷன் அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த Asus ROG Phone 6 சாதனம் ஏரோஆக்டிவ் கூலர் 6 ஆக்சஸரீயையும் இந்த கேமிங் போனுடன் வழங்கும். இது பயனர்கள் கேம் விளையாடும் போது உருவாகும் சூட்டை குறைக்க உதவுகிறது.

Asus ROG Phone 6 டிவைஸை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
இந்த புதிய Asus ROG Phone 6 விலையைப் பொறுத்த வரை, இது EUR 799 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 65,703 என்ற விலையில் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. ஜூலை 5 ஆம் தேதி உலகளாவிய வெளியீட்டிற்குப் பிறகு விரைவில் இந்த சாதனம் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Image credit: 91 Mobiles


Click it and Unblock the Notifications