புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!

|

புதுசா ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? அதுவும் நல்ல அருமையான அம்சங்களுடன் ஒரு சிறப்பான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கொஞ்சம் உங்கள் ஆர்வத்திற்கு பிரேக் போடுங்கள். காரணம், இந்தியாவில் Asus இன் மிரட்டலான பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவிருக்கிறது. ஆம், இந்த டிசைனை பார்த்ததும், காத்திருப்பதில் எந்த தவறுமில்லை என்று நீங்களே முடிவு செய்துவிடுவீர்கள்.

ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க Asus ROG Phone 6 வருது

ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க Asus ROG Phone 6 வருது

தைவானைத் தளமாகக் கொண்ட ஆசுஸ் (Asus) நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய Asus ROG Phone 6 டிவைஸ் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆம், ஜூலை 5ஆம் தேதி நிறுவனம் இந்த புதிய டிவைஸை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்கிறது. உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த Asus ROG Phone 6 டிவைஸிற்காக நீங்கள் ஏன் காத்திருக்கலாம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க.இந்த புதிய ஸ்மார்ட்போனின் முதல் பெஸ்டான விஷயமே இதன் பியூச்சரிஸ்டிக் டிசைன் தான்.

ஆக்சஸரீஸ் உடன் வரும் புதிய Asus ROG Phone 6 சாதனம்

ஆக்சஸரீஸ் உடன் வரும் புதிய Asus ROG Phone 6 சாதனம்

சரி, அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புதிய Asus ROG Phone 6 சாதனம் உங்களுக்கு ஆக்சஸரீஸ் உடன் வருகிறது என்பது தான். இன்றைய காலகட்டத்தில், வாங்கும் டிவைஸ்களுடம் சார்ஜர்களே வழங்கப்படாத நிலையில், ஆசுஸ் நிறுவனம் உங்களுக்குக் கூடுதல் ஆக்சஸரீஸுடன் இந்த போனை வழங்குகிறது. இந்த டிவைஸுடன் உங்களுக்கு ஏரோஆக்ட்டிவ் கூலர் 6 (AeroActive Cooler 6) மற்றும் டெவில்கேஸ் கார்டியன் லைட் பிளஸ் (Devilcase Guardian Lite Plus) போன்ற ஆக்சஸரீஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

Asus ROG Phone 6 டிவைஸ் எப்போது அறிமுகம்?

Asus ROG Phone 6 டிவைஸ் எப்போது அறிமுகம்?

வழக்கமான ஸ்மார்ட்போன்கள் போல் அல்லாமல், இந்த புதிய Asus ROG Phone 6 டிவைஸ் ஒரு கேமிங் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படுகிறது. உலகளாவிய வெளியீட்டு நிகழ்வோடு, இது இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆசஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக மலை 5:20 மணிக்கு நடைபெறும் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இது அறிமுகம் செய்யப்படும். Asus ROG Phone 6 ஸ்மார்ட்போன் குவால்காமின் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரசிகர்கள் எங்கிருந்து இந்த போனை வாங்கலாம்?

இந்திய ரசிகர்கள் எங்கிருந்து இந்த போனை வாங்கலாம்?

இந்த கவர்ச்சிகரமான புதிய Asus ROG Phone 6 டிவைஸ் Flipkart வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் சமீபத்திய தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு அறிமுகமான ROG Phone 5 இன் வாரிசு மாடலாகும். இந்த புதிய Asus ROG Phone 6 சாதனம் பற்றிய சில முக்கிய தகவல்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதுபற்றி இப்போது பார்க்கலாம். இந்த புதிய Asus ROG Phone 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பது இதோ.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?

பிரபல டிப்ஸ்டர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

பிரபல டிப்ஸ்டர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

பிரபல டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (@evleaks) டிவிட்டரில் Asus ROG Phone 6 இன் தொண்டர்களை வெளியிட்டுள்ளார். இந்த ரெண்டர்கள் Asus ROG Phone 6 டிவைஸை பிளாக் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் காண்பிக்கின்றது. இந்த புதிய டிவைஸ் முந்தைய ROG தொடர் 5 ஸ்மார்ட்போன்களைப் போன்ற வடிவமைப்பை ஒத்திருக்கிறது. ஆனால், சில பல நவீன மாற்றங்களை நிறுவனம் Asus ROG Phone 6 இல் மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மிரட்டலான கேமரா அனுபவத்துடன் வெளியாகும் கேமிங் போன்

மிரட்டலான கேமரா அனுபவத்துடன் வெளியாகும் கேமிங் போன்

இந்த புதிய Asus ROG Phone 6 டிவைஸ் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. சாதனத்தின் மேல் இடது மூலையில் எல்இடி ஃபிளாஷுடன் வரும் என்பதை இது காண்பிக்கிறது. சீன கேமிங் நிறுவனத்துடன் நிறுவனம் இணைந்திருப்பதைக் குறிக்கும் வகையில் ROG லோகோ மற்றும் டென்சென்ட் கேம்ஸ் பிராண்டிங் பின்புறம் உள்ளது. மேலும், பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

Asus ROG Phone 6 இன் டிஸ்பிளே சிறப்பு பற்றி தெரியுமா?

Asus ROG Phone 6 இன் டிஸ்பிளே சிறப்பு பற்றி தெரியுமா?

Asus ROG Phone 6 சாதனம் 165Hz ரெபிரஷ்ஷிங் ரேட் ரேட்ஸியோ உடன் 6.78' இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிட்டுள்ளது. இது, Asus ROG Phone 6 இன் முன்னோடியான Asus ROG Phone 5-யில் வழங்கப்பட 144Hz புதுப்பிப்பு விகிதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்புறத்தில், இந்த சாதனம் 64MP கொண்ட பிரைமரி லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸை உள்ளடக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

65W பாஸ்ட் சார்ஜிங் உடன் மிரட்டலான கேமிங் போன்

65W பாஸ்ட் சார்ஜிங் உடன் மிரட்டலான கேமிங் போன்

Asus ROG Phone 6 போனில் உள்ள கேமராக்கள் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவைக் கொண்டிருக்கும் என்று முந்தைய லீக் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளது. முன்பக்க செல்பி கேமராவைப் பொறுத்தவரை, இது 12MP சென்சாருடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Asus ROG Phone 6 சாதனம் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் 18GB வரை LPDDR5 RAM உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 1TB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த டிவைஸ் 65W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5,850mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Asus ROG Phone 6 டிவைஸின் விலை என்ன இருக்கும்?

Asus ROG Phone 6 டிவைஸின் விலை என்ன இருக்கும்?

அதேபோல், இந்த Asus ROG Phone 6 சாதனம் ஏரோஆக்டிவ் கூலர் 6 ஆக்சஸரீஸ் உடன் வழங்கப்படும். இது பயனர்கள் கேம் விளையாடும் போது உருவாகும் சூட்டை குறைக்க உதவுகிறது. இந்த புதிய Asus ROG Phone 6 சாதனம் EUR 799 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 65,703 என்ற விலையில் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. எது எப்படியாக இருந்தாலும் நாளை இந்த சாதனத்தைப் பற்றிய அனைத்து விபரங்களும் நமக்குத் தெரிந்துவிடும் என்பதால் கொஞ்சம் காத்திருக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ROG Phone 6 India Launch Date Set For July 5 at 5 pm IST

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X