Just In
- 9 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 11 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 12 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 13 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ASUS ROG Phone 6 Batman Edition விரைவில் அறிமுகமா? சூப்பர் ஹீரோ போன் உங்களுக்கும் வேணுமா?
நீங்கள் ஒரு DC ரசிகரா? அதிலும் குறிப்பாக உங்களுக்கு பேட்மேன் சூப்பர் ஹீரோவை பிடிக்குமா? அப்படியானால், வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் உங்களுக்கானது தான். ASUS நிறுவனம் புதிய ROG Phone 6D சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. புதிய ROG Phone 6D மற்றும் 6D Ultimate போன்ற புதிய கேமிங் ஸ்மார்ட்போன்ளை நிறுவனம் Dimensity 9000+ சிப்செட் உடன் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதனுடன் புதிய ASUS ROG Phone 6 Batman Edition அறிமுகமாகிறது.

ASUS ROG Phone 6 Batman Edition பற்றி வெளியான எக்ஸ்க்ளூசிவ் தகவல்
இது ஒரு ஸ்பெஷல் வேரியண்ட் மாடலாகும். ASUS நிறுவனம் இன்னும் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், டிப்ஸ்டர் Evan Blass மூலம் 91Mobiles இல் வெளியிடப்பட்ட தகவல் வரவிருக்கும் ASUS ROG Phone 6 Batman Edition கேமிங் போனின் டிசைன் ரெண்டர்களை காட்டியுள்ளது. ASUS ROG Phone 6 பேட்மேன் எடிஷன் மாடலின் ரெண்டர்கள், சிறப்பம்ச தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம்.

ASUS ROG Phone 6 Batman Edition இல் என்ன ஸ்பெஷல்?
ASUS ROG Phone 6 Batman Edition, சில டிசைன் மாற்றங்கள் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களுடன் ஒரு ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சில கிராஃபிக் டிசைன்கள் மாற்றப்பட்டுள்ளது. இது பேட்மேன் போல முழு பிளாக் நிறத்தில் வருகிறது. அதேபோல், இந்த டிவைஸ் DC சூப்பர் ஹீரோவால் ஈர்க்கப்பட்ட சில சாப்ட்வேர் அடிப்படையிலான தீம்கள் மற்றும் ஸ்கின்களை ஆதரிக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

புதிய பேட்மேன் எடிஷன் ஸ்மார்ட்போனில் தரமான புது சிப்செட் சிறப்பான டிஸ்பிளே
இந்த புதிய பேட்மேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் வருகிறது. இது ஸ்டாண்டர்ட் ROG Phone 6 மற்றும் 6 Pro மாடல்களில் காணப்படுகிறது. அதேபோல், இந்த ASUS ROG Phone 6 Batman Edition சிறப்பம்சங்கள், ஸ்டாண்டர்ட் மாடல்களில் காணப்படுவது போலவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ASUS ROG Phone 6 Batman Edition மாடல் 165Hz ரெஃப்பிரெஷ் ரேட் உடன் 6.78' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்.

இந்த ஸ்பெஷல் எடிஷன் போனில் கேமரா எப்படி இருக்கு?
இது 720Hz டச் சாம்ப்ளிங் வீத ஆதரவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இந்த சாதனமும் பின்புறத்தில், ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். இது 50MP Sony IMX766 பிரைமரி கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5MP மேக்ரோ கேமரா மூலம் இயக்கப்படும். முன்பக்கத்தில், 12MP செல்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஹீட் ஆகாமல் இருப்பதைத் தடுக்க, சில பிரத்தியேகமான கூலிங் அம்சங்களைக் கொண்டுள்ளது.

அட்டகாசமான ஆக்சஸரீஸ் மற்றும் பெரிய பாஸ்ட் சார்ஜிங் பேட்டரியா?
இத்துடன் ஏரோஆக்டிவ் கூலர் 6 ஃபேன் போன்ற சில ஆக்சஸரீஸையும் நிறுவனம் வழங்குகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும். இது ROG UI இன் லேயரைக் கொண்டிருக்கும். இந்த டிவைஸ் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000 mAh பேட்டரியை பேக் செய்யும். இந்த பேட்மேன் ஸ்பெஷல் எடிஷனின் விலை என்னவாக இருக்கும் என்பதை இந்த லீக் தகவல் பரிந்துரைக்கவில்லை. விரைவில் சரியான விலையுடன் உங்களை அப்டேட் செய்கிறோம். அதுவரை காத்திருங்கள்.

ASUS ROG Phone 6 இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
ASUS ROG Phone 6 இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் சுமார் ரூ. 71,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும். ASUS ROG Phone 6 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 22, 2022 இல் இந்தியாவில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ASUS ROG Phone 6 இன் 12 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ஆகும். இது ஃபாண்டம் பிளாக் மற்றும் ஸ்ட்ரோம் வைட் நிறத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470