18 ஜிபி ரேம், பிரத்யேக டிஸ்ப்ளே மற்றும் கூலிங் சிஸ்டம் உடன் Asus ROG Phone 6, 6 Pro: தலைசுத்த வைக்கும் அம்சம்!

|

அசுஸ் ROG Phone 6, ROG Phone 6 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனில் உச்சப்பட்ச அம்சம் என்று எதை எதிர்பார்ப்போமோ அது அனைத்தும் இதில் இருக்கிறது.

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஸ்மார்ட்போன்

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஸ்மார்ட்போன்

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஸ்மார்ட்போன் ஜூலை 5 (நேற்று) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு கேமிங் ஸ்மார்ட்போன்களும் குவால்காமின் ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 SoC மூலம் இயக்கப்படுகிறது. 18 ஜிபி வரை ரேம் வசதியோடு இந்த சாதனம் வெளியாகி இருக்கிறது.

பிரத்தியேக ROG ட்யூனிங் தொழில்நுட்ப ஆதரவு

பிரத்தியேக ROG ட்யூனிங் தொழில்நுட்ப ஆதரவு

அதேபோல் ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஸ்மார்ட்போனானது 165Hz புதுப்பிப்பு வீதம், HDR10+ ஆதரவு மற்றும் பிரத்தியேக ROG ட்யூனிங் தொழில்நுட்பத்துடன் 6.78-இன்ச் முழு-HD+ Samsung AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது சாத்தியமா என்ற கேள்வி வருகிறதா? கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro இந்திய விலை

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro இந்திய விலை

அசுஸ் ஆர்ஓஜி போன் 6 மற்றும் ஆர்ஓஜி போன் 6 ப்ரோ இந்திய விலை குறித்து பார்க்கையில், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.71,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் Asus ROG Phone 6 Pro ஸ்மார்ட்போனின் 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.89,999 ஆக இருக்கிறது. இவ்வளவு விலையா என்ற கேள்வி வரலாம், ஆனால் அதற்கு ஏற்ற அம்சங்களும் இதில் இருக்கிறது.

ஒவ்வொன்று குறிப்பிடத்தக்க அம்சம்

ஒவ்வொன்று குறிப்பிடத்தக்க அம்சம்

Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், டூயல் சிம் (நானோ), ROG ​​UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.78 இன்ச் முழு HD+ (1,080x2,448 பிக்சல்கள்) Samsung AMOLED டிஸ்ப்ளே, 165Hz புதுப்பிப்பு வீதம், 720Hz டச் ரேட்டிங் உடன் HDR10+ ஆதரவு மற்றும் 1200 nits பிரைட்னஸ் அம்சத்தை கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலின் பின்புற பேனலில் ROG விஷனுடன் கூடிய சிறிய PMOLED டிஸ்ப்ளே இருக்கிறது.

அதீத மேம்பட்ட அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன்

அதீத மேம்பட்ட அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன்

18 ஜிபி ரேம் என்பது அதீத வேகத்தை வழங்கும் செயல்திறன் ஆகும். அதேபோல் இதன் டிஸ்ப்ளேவில் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. பொதுவாக டிஸ்ப்ளேவில் 90 ஹெர்ட்ஸ், 120 ஹெர்ட்ஸ் என்பதே வழக்கமான ஒன்று. டிஸ்ப்ளே மட்டுமின்றி இதன் பெரும்பாலான அம்சங்கள் அதீத மேம்பட்ட வகையில் இருக்கிறது.

பிரத்யேக கூலிங் சிஸ்டம் இருக்கு

பிரத்யேக கூலிங் சிஸ்டம் இருக்கு

Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேம்கூல் 6 எனப்படும் கேம் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய அப்டேட் இது என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

சோனி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

Asus ROG Phone 6 மற்றும் ROG Phone 6 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி சோனி IMX766 முதன்மை கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா ஆதரவு இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

6,000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங்

6,000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங்

விற்பனை தேதி மற்றும் கிடைக்கும் தன்மை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Asus ROG Phone 6 ஆனது Phantom Black மற்றும் Storm White வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் Asus ROG Phone 6 Pro ஆனது Storm White வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 6, Asus ROG Phone 6 Pro Smartphone Launched in India With 18GB RAM, GameCool6: Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X