பெஸ்ட்., பக்கா பெஸ்ட்- ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ், ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்!
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஆகிய இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தைவான் நிறுவனத்தின் மூலம் இரண்டு சமீபத்திய கேமிங் போன்கள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஆகியவை வெளியிடப்பட்டு இருக்கின்றன. இரண்டு போன்களும் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. அமோலெட் டிஸ்ப்ளே உடன் கூடிய உயர் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. சமீபத்திய ஆர்ஓஜி ஃபோன் மாடல்களில் டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் வேகமான சார்ஜ் அம்சத்தோடு வருகிறது. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ரூ.49,999 ஆக இருக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ அம்சங்கள்
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ சாதனத்தின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இரண்டு ஆர்ஓஜி போன்களும் ஒரே 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,448 பிக்சல்கள்) சாம்சங் அமோலெட் இ4 டிஸ்ப்ளே உடன் வருகிறது. 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆர்ஓஜி யூஐ உடனான ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ஆர்ஓஜி போன் 5எஸ் சாதனம் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. அதேபோல் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆனது மூன்று சேமிப்பக திறன்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

64 எம்பி முதன்மை கேமரா
ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களும் 64 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 5 எம்பி கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் பேக் கேமரா ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 25 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது.

பேட்டரி மற்றும் விலை விவரங்கள்
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோவின் பேட்டரி மற்றும் விலை குறித்து பார்க்கையில், இதில் இரண்டு முன்பக்க டூயல் ஸ்பீக்கர்கள் இருக்கிறது. 65 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் வசதி உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்ஓஜி போன் 5எஸ் மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ப்ரோ ஆகிய இரண்டு சாதனமும் ஏர்டிரிகர் 5 மற்றும் க்ரிப் பிரஸ்ஸிற்கான அல்ட்ரா சோனிக் சென்சார்களை கொண்டிருக்கின்றன. போன்களில் 5ஜி வசதியும் இருக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் விலை குறித்து பார்க்கையில், இது இந்தியாவில் ரூ.49,999 என இருக்கிறது. இந்த விலையில் கிடைக்கும் வேரியண்ட் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.57,999 ஆக இருக்கிறது. 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.79,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் கிடைக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications