Home
News

Smartphone கேம்ஸ்லாம் வேஸ்ட்! இந்தியாவுக்கு வரும் கையடக்க கேமிங் கன்சோல் Asus ROG Ally! விலை என்ன?

ASUS நிறுவனம் தனது முதல் கையடக்க கேமிங் சாதனமான Asus ROG Ally என்ற டிவைஸை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ASUS கேமிங் டிவைஸ் தற்போது, உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சாதனம் இப்போது இந்தியாவில் களமிறங்கவுள்ளது.

ஆம், மிரட்டலான கை அடக்க கேமிங் கன்சோல் சாதனமான ஆசஸ் ராக் அல்லை (Asus ROG Ally) இந்திய சந்தையில், வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விலையை விட, மிக பெரிய தொகையை இந்திய சந்தைக்குள் கொண்டுவருகிறது என்று சமீபத்திய தகவல் குறிப்பிட்டுள்ளது.

Smartphone கேம்ஸ்லாம் வேஸ்ட்! இந்தியாவுக்கு வரும் Asus ROG Ally!

ASUS ROG Ally இரண்டு வெவ்வேறு வேரியண்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை வேரியண்ட் மாடலின் ஆரம்ப விலை $599 ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 49,200 மட்டுமே. அதேபோல், இதன் ஹை-வேரியண்ட் மாடலான ASUS ROG Ally "எக்ஸ்ட்ரீம்" மிகவும் சக்திவாய்ந்த ஸ்பெக்ஸ் உடன் $699 விலையில் வருகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 57,400 ஐ நெருங்குகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த சாதனத்தின் பேசிக் மாடல் ASUS ROG Ally இன் AMD Z1 பிராசஸர் மாடல் இந்தியாவில் ரூ.71,999 விலையில் அறிமுகமாகவுள்ளது. அதேபோல், ASUS ROG Ally இன் AMD Z1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் உடன் கூடிய மாடல் ஆனது ரூ. 79,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்திய வேரியண்ட் மாடல்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்த ASUS ROG Ally சாதனத்தின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இது 1920 x 1080 பிக்சல் உடன் முழு HD தீர்மானம் கொண்ட 16:9 விகித 7' இன்ச் IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதத்துடன் 500 nits பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் டால்பி விஷன் HDR ஆதரவுடன் வருகிறது.

Smartphone கேம்ஸ்லாம் வேஸ்ட்! இந்தியாவுக்கு வரும் Asus ROG Ally!

இந்த கையடக்க கேமிங் சாதனத்தின் கேமிங் கண்ட்ரோல் ஸ்விட்ச்கள் இதன் டிஸ்பிளேவின் இருபுறமும் வழங்கப்பட்டுள்ளன. இது ASUS இன் ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர் தொழில்நுட்பத்துடன் டூயல் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவைஸ் AMD Ryzen Z1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் உடன் வருகிறது. இது AMD இன் புதிய ஜென் 4 கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ASUS ROG Ally இன் அடிப்படை மாடல் Ryzen Z1 சிப்செட்டை கொண்டுள்ளது. இது வினாடிக்கு 2.8 Teraflops வரை இயங்குகிறது. அதேசமயம் அதிக விலை கொண்ட ASUS ROG Ally Extreme மாடல் Ryzen Z1 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டை கொண்டுள்ளது. ASUS ROG Ally சாதனம் விண்டோஸ் 11 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்குகிறது. இது மூன்று மாத எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட்டுடன் வருகிறது.

இது 8.6 teraflops வரை இயங்குகிறது. இரண்டு வகைகளும் AMD Radeon Navi3 கிராபிக்ஸ், 16GB LPDDR5 ரேம் மற்றும் 512GB PCIe 4.0 NVMe M.2 SSD உடன் வருகின்றன. கேமிங் சாதனம் ஸ்டீம், ஈஏ ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் ஆகியவற்றில் உள்ள கேம்களுடன் இணக்கமானது. இது UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடருக்கான ஆதரவுடன் வருகிறது. 65W சார்ஜிங் ஆதரவுடன் 40WHr பேட்டரியைக் கொண்டுள்ளது.

இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ROG XG மொபைல் இடைமுகத்திற்கான USB 3.2 Gen2 Type C போர்ட் காம்போ போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இது ஜூன் 13ம் தேதி அறிமுகமாகிறது. கையடக்க கேமிங் கன்சோல் அனுபவத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், கட்டாயம் நீங்கள் இந்த சாதனத்தை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS ROG Ally Launch Date and Price In India Revealed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X