கம்ப்யூட்டரையே மிஞ்சும் கையடக்க Asus ROG Ally கேமிங் கன்சோல்! அதிரடி சலுகையுடன் விற்பனையில்!
ஆசஸ் (Asus) நிறுவனம் அதன் கையடக்க Asus ROG Ally கேமிங் கன்சோல் சாதனத்தை இந்தியாவில் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நிறுவனம் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக பிளாஷ் சேல் விற்பனையை அறிவித்தது.
இப்போது ஆசஸ் நிறுவனம் இந்த Asus ROG Ally கையடக்க கேமிங் கன்சோல் சாதனத்தை இந்தியாவில் விற்பனை செய்ய துவக்கியுள்ளது. இதன் விலை என்ன? அறிமுக சலுகையாக உங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? என்பது போன்ற விஷயங்களை பார்க்கலாம். ASUS ROG Ally இப்போது இந்தியாவில் ரூ. 69,990 விலையில் வாங்க கிடைக்கிறது.

இது ASUS நிறுவனத்தின் பிரத்தியேக ஸ்டோர்கள், ASUS Eshop மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகியவற்றின் வழியாக வாங்கி கிடைக்கிறது. இந்த சாதனத்தின் அறிமுக விற்பனை என்பதனால், சில வெளியீட்டு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 12 முதல் 15 வரை, ASUS Eshop அல்லது ASUS பிரத்தியேக ஸ்டோர்களில் இருந்து Asus ROG Ally சாதனத்தை வாங்கும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 மதிப்புள்ள ROG Ally கேஸ் இலவசமாக வழங்கப்படும்.
இந்தச் சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் asuspromo.in என்ற இணையதள பக்கத்தை நாடவேண்டும். இதுதவிர, வாடிக்கையாளர்கள் ரூ.1,42,990 மதிப்புள்ள XG மொபைலைப் பெறுவதற்கான பிரத்யேக வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த மொபைலை சிறப்பு விலையான் ரூ. 87,990 என்ற விலையில் உங்களால் வாங்க முடியும். கூடுதலாக, கேஷ்-பேக் சலுகை மற்றும் நோ-காஸ்ட் EMI திட்டம் என்று பல சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.
இந்த ASUS ROG Ally சாதனத்தின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இது 1920 x 1080 பிக்சல் உடன் முழு HD தீர்மானம் கொண்ட 16:9 விகித 7' இன்ச் IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதத்துடன் 500 nits பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் டால்பி விஷன் HDR ஆதரவுடன் வருகிறது. இந்த கையடக்க கேமிங் சாதனத்தின் கேமிங் கண்ட்ரோல் ஸ்விட்ச்கள் இதன் டிஸ்பிளேவின் இருபுறமும் வழங்கப்பட்டுள்ளன. இது ASUS இன் ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர் தொழில்நுட்பத்துடன் டூயல் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிவைஸ் AMD Ryzen Z1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் உடன் வருகிறது. இது AMD இன் புதிய ஜென் 4 கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ASUS ROG Ally இன் அடிப்படை மாடல் Ryzen Z1 சிப்செட்டை கொண்டுள்ளது. இது வினாடிக்கு 2.8 Teraflops வரை இயங்குகிறது.
அதேசமயம் அதிக விலை கொண்ட ASUS ROG Ally Extreme மாடல் Ryzen Z1 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டை கொண்டுள்ளது. ASUS ROG Ally சாதனம் விண்டோஸ் 11 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்குகிறது. இது மூன்று மாத எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட்டுடன் வருகிறது.

இது 8.6 teraflops வரை இயங்குகிறது. இரண்டு வகைகளும் AMD Radeon Navi3 கிராபிக்ஸ், 16GB LPDDR5 ரேம் மற்றும் 512GB PCIe 4.0 NVMe M.2 SSD உடன் வருகின்றன. கேமிங் சாதனம் ஸ்டீம், ஈஏ ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் ஆகியவற்றில் உள்ள கேம்களுடன் இணக்கமானது.
இது UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடருக்கான ஆதரவுடன் வருகிறது. 65W சார்ஜிங் ஆதரவுடன் 40WHr பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ROG XG மொபைல் இடைமுகத்திற்கான USB 3.2 Gen2 Type C போர்ட் காம்போ போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முதல் 200 நபர்களுக்கு மட்டுமே கூடுதல் சலுகை கிடைக்குமென்பதனால் இதை இப்போதே வாங்கிடுங்கள்.


Click it and Unblock the Notifications








