வந்துட்டான்..வந்துட்டான்.. கேமர்களின் தீரனாக வெளிவந்த ASUS ROG Ally! இனி PS5-லாம் தேவைப்படாதோ?
நீண்ட காலமாக உலக கேமர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ஒரு மிரட்டலான சாதனத்தை ஆசஸ் (ASUS) நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. ஒருவழியாக, இறுதியாக ஆசஸ் ராக் அல்லை (Asus ROG Ally) என்ற முதல் கையடக்க-கேமிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
ASUS தனது முதல் கையடக்க கேமிங் சாதனமான Asus ROG Ally என்ற டிவைஸை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ASUS கேமிங் டிவைஸ் தற்போது, உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், விரைவில் இந்தியாவிலும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளது. சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்க Asus ROG Ally சிறிய சாதனத்தில் சில சக்திவாய்ந்த வன்பொருள்களை பேக் செய்துள்ளது.

புதிய Asus ROG Ally ஆனது AMD Z சீரிஸ் சிப்செட் உடன் வருகிறது. இது 16GB LPDDR5 ரேமையும் கொண்டுள்ளது. இந்த கேமிங் சாதனம் Windows, Xbox, Android, Steam போன்ற பல சேவைகளை ஆதரிக்கும், இணக்கமான கேம்களுடன் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. ASUS ROG Ally இரண்டு வெவ்வேறு வேரியண்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படை வேரியண்ட் மாடலின் ஆரம்ப விலை $599 ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 49,200 மட்டுமே. அதேபோல், இதன் ஹை-வேரியண்ட் மாடலான ASUS ROG Ally "எக்ஸ்ட்ரீம்" மிகவும் சக்திவாய்ந்த ஸ்பெக்ஸ் உடன் $699 விலையில் வருகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 57,400 ஐ நெருங்குகிறது.

இந்த ASUS ROG Ally சாதனத்தின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இது 1920 x 1080 பிக்சல் உடன் முழு HD தீர்மானம் கொண்ட 16:9 விகித 7' இன்ச் IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதத்துடன் 500 nits பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் டால்பி விஷன் HDR ஆதரவுடன் வருகிறது.
இந்த கையடக்க கேமிங் சாதனத்தின் கேமிங் கண்ட்ரோல் ஸ்விட்ச்கள் இதன் டிஸ்பிளேவின் இருபுறமும் வழங்கப்பட்டுள்ளன. இது ASUS இன் ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர் தொழில்நுட்பத்துடன் டூயல் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவைஸ் AMD Ryzen Z1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் உடன் வருகிறது. இது AMD இன் புதிய ஜென் 4 கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ASUS ROG Ally இன் அடிப்படை மாடல் Ryzen Z1 சிப்செட்டை கொண்டுள்ளது. இது வினாடிக்கு 2.8 Teraflops வரை இயங்குகிறது. அதேசமயம் அதிக விலை கொண்ட ASUS ROG Ally Extreme மாடல் Ryzen Z1 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டை கொண்டுள்ளது. இது 8.6 teraflops வரை இயங்குகிறது. இரண்டு வகைகளும் AMD Radeon Navi3 கிராபிக்ஸ், 16GB LPDDR5 ரேம் மற்றும் 512GB PCIe 4.0 NVMe M.2 SSD உடன் வருகின்றன.
ASUS ROG Ally சாதனம் விண்டோஸ் 11 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்குகிறது. இது மூன்று மாத எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் உடன் வருகிறது. கேமிங் சாதனம் ஸ்டீம், ஈஏ ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் ஆகியவற்றில் உள்ள கேம்களுடன் இணக்கமானது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ROG XG மொபைல் இடைமுகத்திற்கான USB 3.2 Gen2 Type C போர்ட் காம்போ போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடருக்கான ஆதரவுடன் வருகிறது. 65W சார்ஜிங் ஆதரவுடன் 40WHr பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் எடை சுமார் 608 கிராம் மற்றும் 28.0 x 11.1 x 2.12 ~ 3.24 செ.மீ. அளவுடன் வருகிறது. இதன் இந்திய வருகை பற்றி விரைவில் அப்டேட் செய்கிறோம். அதுவரை காத்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








