அசுஸ் நிறுவனத்தின் இலவச சிறப்பு சேவை முகாம்.!
தண்ணீரினால் பாழாகி போன ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத மழையினால் கேரளா பெருமளவில் பாப்திகபட்டது. பல நிறுவனங்கள் மாற்றும் மக்கள்கள் தங்களின் உதவிகளை கேரளத்திற்கு வழங்கிவருகின்றனர்.தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் சென்ற வாரத்தில் கேரள மக்களுக்கு உதவ முன்வந்திருந்தனர், அந்த அசுஸ் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

தண்ணீரினால் பாழாகி போன ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை அனைத்து அசுஸ் சேவை மையங்களிலும் நிறுவப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. பொருட்களை சரி செய்ய எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை, இருப்பினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசுஸ் சேவை மையங்களில் இந்த சிறப்பு சேவை முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications