Home
News

இந்த பக்கம் லேப்டாப், அந்த பக்கம் டேப்லெட்: இரண்டு ஆசஸ் ஜென்புக் மாடல் அறிமுகம்!

அசுஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி, ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி உள்ளிட்ட இரண்டு புதிய லேப்டாப்களை அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி மற்றும் ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி உள்ளிட்ட சாதனங்கள் விண்டோஸ் 11 உடன் வருகிறது.

அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி மற்றும் ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி

அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி மற்றும் ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி

அசஸ் நிறுவனமானது அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி மற்றும் ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி ஆகிய இரண்டு புதிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் விண்டோஸ் 11 ஆதரவோடு வருகிறது. ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி ஆனது ஏஎம்டி ரைசன் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஜென்புக் ப்ரோ 15 பிளிப் ஓஎல்இடி லேப்டாப் ஆனது 12 தலைமுறை இன்டெல் கோர் செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு மடிக்கணினிகள் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஜென்புக் ப்ரோ 15 பிளிப் ஓஎல்இடி லேப்டாப் விவரக்குறிப்புகள்

ஜென்புக் ப்ரோ 15 பிளிப் ஓஎல்இடி லேப்டாப் விவரக்குறிப்புகள்

புதிய ஜென்புக் லேப்டாப் ஆனது 2 இன் 1 பயன்முறை வடிவமைப்போடு வருகிறது. இது 360 டிகிரி கீல் ஆதரவு உதவியோடு இதை டேப்லெட் ஆகவும் பயன்படுத்தலாம். இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் 2.8கே (2,880×1,620 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 100 சதவீதம் டிசிஐ-பி3 வண்ண வரம்புடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் இந்த லேப்டாப் ஆனது 12-வது தலைமுறை வரையிலான இன்டெல் கோர் ஐ7-12700எச் செயலி ஆதரவோடு வருகிறது. இது ஆர்க் ஏ370எம் ஜிபியூ ஆதரவுடன் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரையிலான சேமிப்பகத்துடன் இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவு விவரங்கள்

இந்த லேப்டாப்களின் ஆடியோ அம்சங்களுக்கு என டால்பி விஷன் மற்றும் அட்மாஸ் ஆதரவு ஆகியவை உடன் வருகிறது. இது முக அங்கீகாரத்துடன் கூடிய ஐஆர் கேமரா மற்றும் ஒற்றை மண்டல ஆர்ஜிபி கீபோர்ட் ஆதரவுடன் வருகிறது. மடிக்கணினிகளில் உள்ள இணைப்பு ஆதரவுகள் என்று பார்க்கையில், இது 2எக்ஸ் தண்டர்போல்ட் 4 போர்ட்கள், 1 எக்ஸ் எச்டிஎம்ஐ 2.0 போர்ட் மற்றும் வைஃபை 6இ ஆகிய ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 96 மணிநேர பேட்டரியைக் கொண்டுள்ளது.

அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி சிறப்பம்சங்கள்

அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி சிறப்பம்சங்கள்

அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி லேப்டாப் ஆனது 13.3 இன்ச் 2.8கே (2,880×1,800 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 16:10 விகிதத்துடன், கார்னிங் கொரில்லா என்பிடி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இது 100 சதவீத டிசிஐ-பி3 வண்ண வரம்புக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி லேப்டாப் ஆனது ஏஎம்டி ரைசன் 7 6800யூ செயலி ஆதரவோடு வருகிறது. ரைசன் 5 6600யூ சிபிஐ ஆதரவும் இதில் இருக்கிறது என வெர்ஜ் தகவல் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தில் 32 ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது.

67 மணிநேர பேட்டரி ஆதரவு

67 மணிநேர பேட்டரி ஆதரவு

அசஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி ஆனது 67 மணிநேர பேட்டரி ஆதரவோடு வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது என கூறப்படுகிறது. இணைப்பு ஆதரவுக்கு என 3 x யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் மற்றும் 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைப் பெறுவீர்கள். டால்பி விஷன், அட்மாஸ் ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Asus Launched its Asus ZenBook S 13 OLED, Asus ZenBook Pro 15 Flip OLED Laptops with 2 in 1 Convertible
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X