Home
News

அடடே விலை, எக்கச்சக்க ஆபர்.. 3 புதிய AI லேப்டாப்கள் அறிமுகம்.. ஏப்.21 முதல் விற்பனை.. Asus அசத்தல்!

ஆசஸ் (Asus) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல! இந்திய லேப்டாப் சந்தையில் "கேப்பு விட்டா தானே ஆப்பு வைப்பீங்க?" என்கிற பாணியில்.. 1 மாத இடைவெளியில் மீண்டும் தனது புதிய ஏஐ லேப்டாப் மாடல்களை (AI Laptops) அறிமுகம் செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆசஸ் நிறுவனம் 2 சக்திவாய்ந்த ஏஐ-பவர்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது.

அவைகள் - ஆசஸ் ஜென்புக் ஏ14 (Asus Zenbook A14) மற்றும் ஆசஸ் விவோபுக் 16 (Asus Vivobook 16) மாடல்கள் ஆகும். ஆசஸ் நிறுவனத்தின் எக்ஸ்பர்ட்புக் பி சீரீஸின் கீழ் 3 புதிய லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளன. அவைகள் - ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1 (Asus ExpertBook P1), ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி3 (Asus ExpertBook P3) மற்றும் ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி5 (Asus ExpertBook P5) மாடல்கள் ஆகும்.

Asus அசத்தல்.. 3 புதிய AI லேப்டாப்கள் அறிமுகம்!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி சீரீஸ் லேப்டாப் மாடல்களுமே, 13900+ பின் கோட்களில் ஆன்சைட் ஆதரவு, சர்வதேச உத்தரவாதம் மற்றும் லேப்டாப்பிற்கான பிரத்யேக கட்டணமில்லா வணிக வாடிக்கையாளர் உதவி எண், நீட்டிக்கப்பட்ட சேவை பேக்குகள் மற்றும் ஒரு வருட லோக்கல் டேமேஜ் சேத பாதுகாப்பு ஆகியவைகளுடன் வரும்.

ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1 லேப்டாப் மாடலின் முக்கிய அம்சங்கள் (Asus ExpertBook P1 Specifications Features):
- இன்டெல்கோர் ஐ7-13620H ப்ராசஸர்
- 16GB DDR5 ரேம்
- 14-இன்ச் மற்றும் 15.6-இன்ச் FHD டிஸ்ப்ளே ஸ்க்ரீன் சைஸ்கள்
- 300 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ்
- 1TB வரை SSD
- 50Wh பேட்டரி

ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி3 லேப்டாப் மாடலின் முக்கிய அம்சங்கள் (Asus ExpertBook P3 Specifications Features):
- அலுமினியம் சேசிஸ்
- 14-இன்ச் ஃபுல்ஹெச்டி டிஸ்பிளே
- 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- 64 ஜிபி ரேம்
- இன்டெல் கோர் i5-13420H அல்லது இன்டெல் கோர் i7-13620H ப்ராசஸர்கள்
- விண்டோஸ் ஹலோ ஆதரவுடன் கூடிய ஐஆர் கேமரா
- 1.42 கிலோ எடை
- 50Wh பேட்டரி

ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி5 லேப்டாப் மாடலின் முக்கிய அம்சங்கள் (Asus ExpertBook P5 Specifications Features):
- 144 ஹெர்ட்ஸ் 14 இன்ச் FHD டிஸ்பிளே
- இன்டெல் ஆர்க் கிராபிக்ஸ்
- 1டிபி NVMe SSD
- இன்டெல் கோர் அல்ட்ரா 5 மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர்கள்
- முறையே 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ரேம்
- விண்டோஸ் ஹலோ ஆதரவுடன் ஒரு ஐஆர் கேமரா
- எடை 1.29 கிலோ
- 63Wh பேட்டரி

ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1, எக்ஸ்பர்ட்புக் பி3 மற்றும் எக்ஸ்பர்ட்புக் பி5 லேப்டாப் மாடல்களின் விலை (Asus ExpertBook P1, ExpertBook P3 and ExpertBook P45 Price in India) மற்றும் விற்பனை விவரங்கள்: ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1, பி3 மற்றும் பி5 ஆகியவைகள் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். இவைகள் முறையே ரூ.39,990, ரூ.64,990 மற்றும் ரூ.94,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை இந்த புதிய லேப்டாப்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆசஸ் கூடுதல் வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை வழங்குகிறது. இதில் ரூ.3,000 வரை அறிமுக தள்ளுபடி, ரூ.3,499 மதிப்புள்ள இரண்டு வருட இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் ரூ.1,499 மதிப்புள்ள இரண்டு வருட லோக்கல் டேமேஜ் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். அனைத்து மாடல்களிலும், ரூ.3,900 மதிப்புள்ள ஒரு வருட இலவச McAfee+ பிரீமியம் சந்தாவும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Asus Launched 3 New AI Laptops ExpertBook P1 P3 P5 in India Price Features Sale From April 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X