ரூ.5,299க்கு 3ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது.!!
ஏசஸ் நிறுவனம் புதிய சென்ஃபோன் கோ எனும் கருவியை இந்தியாவில் ரூ.5,299க்கு வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் வெளியாகியிருக்கும் இந்த கருவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. மற்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6580 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 சார்ந்த சென் 2.0 யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 0.3 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 3ஜி, வை-பை, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 1600 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications