Home
News

ஆளுக்கொன்னு அள்ளுங்க.. மொபைல் விலையில் லேப்டாப்.. வெறும் ரூ.19,990 போதும்.. ASUS குரோம்புக் மாடல்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில் 15.6 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே, இன்டெல் செலரான் சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டு, எச்டி கேமரா, 12 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட அசுஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 (ASUS Chromebook CX1) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 அம்சங்கள் (ASUS Chromebook CX15 Specifications): இந்த லேப்டாப் 15.6 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) எல்இடி (LED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு பிளாக்லிட் ஆன்டி-கிளார் (Backlit Anti-Glare) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 220 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 45% என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut) வருகிறது.

மொபைல் விலையில் லேப்டாப்.. வெறும் ரூ.19,990 போதும்.. குரோம்புக் மாடல்!

இந்த லேப்டாப் குரோம் ஓஎஸ் (Chrome OS) கொண்ட இன்டெல் செலரான் என்4500 (Intel Celeron N4500) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 600 (Intel UHD Graphics 600) கார்டு வருகிறது. இந்த குரோம் லேப்டாப் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

அதே போல 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது. ஃபுல் சைஸ் எர்கோனோமிக் ஸ்பில்-ரெசிஸ்டன்ட் கீபோர்ட் (Ergonomic Spill-Resistant Keyboard) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டில் 1.5 மிமீ கீ - டிராவல் சப்போர்ட் வருகிறது. யுஎஸ் மில்-எஸ்டிடி 810எச் (US MIL-STD 810H) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அசுஸ் குரோம் லேப்டாப்பில் வீடியோ காலிங் வசதிக்காக 720p ரொசொலூசன் கொண்ட எச்டி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல கம்பைண்ட் ஹெட்போன் (Combined Headphone) மற்றும் மைக்ரோபோன் ஜாக் (Microphone Jack), பில்ட்-இன் டூயல் ஸ்பீக்கர்கள் (Built-in Dual Speakers) வருகின்றன.

மேலும், டூயல் பேண்ட் வை-பை 6 (Dual-Band Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack), டைப்-ஏ (Type-A) மற்றும் டைப்-சி (Type-C) யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த குரோம்புக் லேப்டாப் 42wh சப்போர்ட் கொண்ட டூ-செல் (2-cell) பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல்சார்ஜ் செய்தால், தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு பேக்கப் கொடுக்கும். மொத்தமாக இந்த குரோம் லேப்டாப் 1.80 கிலோ எடை கொண்டுள்ளது. டிரான்ஸ்பரன்ட் சில்வர் (Transparent Silver) கலரில் விற்பனைக்கு வருகிறது.

இந்த அசுஸ் குரோம்புக் லேப்டாப்பின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 19,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,990ஆகவும், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,990ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 1) முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அசுஸ் ஆன்லைன் ஸ்டோர் (ASUS Online Store) ஆகிய தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் பிளிப்கார்ட்டில் குறிப்பிட்ட சில வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடியும் கிடைக்கிறது. மிகவும் கம்மியான பட்ஜெட்டில் நல்ல லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த அசுஸ் குரோம்புக் லேப்டாப் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS Chromebook CX15 With 4GB RAM, Intel Celeron N4500 Available in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X