ஆசஸ் பயனர்களே தயாரா: இந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் அறிவிப்பு!

|

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பை பெற்றிருக்கின்றன. இந்த அப்டேட் வழங்கப்படுவதோடு சாதனத்தில் இருந்த பல பிழைகள் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆகிய இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய அப்டேட்டில் சாதனங்களில் இருந்த பல பிழைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆகிய இரண்டு போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பு உலகளவில் வெளியிடத் தொடங்கி இருக்கிறது. இரண்டு சாதனங்களும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 2021-ல் ஜென்ஃபோன் 8 மற்றும் ஜென்ஃபோன் 8 பிளிப்-க்கான ஆண்ட்ராய்டு 12 நிலையான புதுப்பிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் விவரங்கள்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் விவரங்கள்

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் விவரங்கள் குறித்து பார்க்கலாம். ஆசஸ் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையின்படி, புதிய மென்பொருள் இரண்டு மாடல்களிலும் 31.0810.1226.57 என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த புதுப்பிப்பானது ஆர்ஓஜி யூஐ வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகள், ஆர்மரி க்ரேட்டிவ் புதிய கன்சோல் வடிவமைப்பு மற்றும் பல மேம்பாடுகளை இந்த புதுப்பிப்புக் கொண்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டில் பல அணுகல் அம்சம்

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டில் பல அணுகல் அம்சம்

தனியுரிமை டாஷ்போர்டு, கேமரா மற்றும் மைக்ரோஃபோன் இன்டிகேட்டர்ஸ், காட்சி கிலிப்போர்டு அணுகல், தோராயமான இருப்பிட அணுகல் உள்ளிட்ட பல அணுகல் அம்சங்களை ஆண்ட்ராய்டு 12 அப்டேட் மூலம் வழங்குகிறது. இந்த அப்டேட்டில் பல பிழை திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் போன் 5எஸ் சாதனங்கள் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. நிறுவனம் இந்த இரண்டு சாதனங்களுக்கான அப்டேட்டை உலகளவில் வெளியிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் அம்சங்கள்

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் அம்சங்கள்

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5எஸ் 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,448 பிக்சல்கள்) சாம்சங் அமோலெட் இ4 டிஸ்ப்ளே உடன் வருகிறது. 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆர்ஓஜி யூஐ உடனான ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ஆர்ஓஜி போன் 5எஸ் சாதனம் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. அதேபோல் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆனது மூன்று சேமிப்பக திறன்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தில் 64 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 5 எம்பி கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் பேக் கேமரா ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 25 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது.

ஆசுஸ் ஆர்ஓஜி போன் 5 சிறப்பம்சங்கள்

ஆசுஸ் ஆர்ஓஜி போன் 5 சிறப்பம்சங்கள்

ஆசுஸ் ஆசுஸ் ஆர்ஓஜி போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,448 பிக்சல் தீர்மானம், 20:4:9 என்ற திரைவிகதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட் வசதியோடு இந்த சாதனம் வருகிறது.

Best Mobiles in India

English summary
Asus announces Android 12 update for Asus ROG Phone 5, Asus ROG Phone 5S smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X