30% நீராலான 'மறைக்கப்பட்ட' கடல் உலகம் கண்டுபிடிப்பு.. உயிர்கள் இருக்க வாய்ப்பா? விஞ்ஞானிகளின் கருத்து என்ன?

|

நமது சூரிய மண்டலத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட கிரகங்கள் எக்ஸோபிளானட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. பிரபஞ்சம் விசாலமானது, இதுவரை, வல்லுநர்கள் ஆயிரக்கணக்கான புதிய விஷயங்களை விண்வெளியின் பறந்து விருந்த அண்ட உலகில் கண்டுபிடித்துள்ளனர். ஆகையால், நம்மைப் போன்ற ஒரு உலகம் பிரபஞ்சத்தில் மறைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக தற்போது 'மறைக்கப்பட்ட' ஒரு கடல் உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி போன்ற உலகங்களின் தடயங்களைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி

பூமி போன்ற உலகங்களின் தடயங்களைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி

விண்வெளியில் எங்கோ ஒரு மூலையில் வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலைகள் மிக அதிகமாக இருக்கக்கூட இடம் என்று ஒரு இதன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்று விஞ்ஞானிகள் ஆணித்தரமாக நம்புகின்றனர். இதை உறுதிப்படுத்த, வானியலாளர்கள் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் பிரபஞ்சத்தில் இதுபோன்ற உலகங்களின் தடயங்களைக் கண்டுபிடிக்க இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் புதிய கண்டுபிடிப்பு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கண்டுபிடிப்பு

இதை நோக்கி, வானியலாளர்கள் சமீபத்தில் ஒரு புதிய நட்சத்திர அமைப்பைக் கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தது ஐந்து தனித்துவமான உலகங்களைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் சில நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களுடன் ஒற்றுமையைக் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரக நட்சத்திர அமைப்பு L 98-59 ஆகும். இது பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

வாழக்கூடிய மண்டலத்தில் ஒரு பூமி கிரகம்

வாழக்கூடிய மண்டலத்தில் ஒரு பூமி கிரகம்

"இந்த அமைப்பின் வாழக்கூடிய மண்டலத்தில் ஒரு பூமி கிரகம் இருப்பதற்கான குறிப்புகள் எங்களிடம் உள்ளன" என்று போர்ச்சுகலில் உள்ள போர்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் புதிய ஆய்வின் முன்னணி ஆசிரியருமான ஒலிவியர் டிமான்ஜியன் விளக்கியுள்ளார். வாழக்கூடிய மண்டலம் என்றால் என்ன? நமது பூமியானது வாழக்கூடிய மண்டலத்தில் அமைத்துள்ளது. உயிர்கள் வாழத் தேவையான சூழ்நிலையை உருவாக்கி அமைத்துள்ள கிரகத்தைத் தான் விஞ்ஞானிகள் வாழக்கூடிய மண்டலம் என்று குறிப்பிடுகின்றனர்.

நட்சத்திர அமைப்பின் கண்டுபிடிப்பு

நட்சத்திர அமைப்பின் கண்டுபிடிப்பு

2019 ஆம் ஆண்டில், நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (TESS) நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகங்களைக் கண்டறிந்தது. அப்போதிருந்த, இந்த கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் புரவலன் நட்சத்திரத்திற்கு அருகில் இருப்பதால் வானியலாளர்கள் இந்த அமைப்பைப் படித்து வருகின்றனர். பூமி அல்லது வீனஸ் போன்ற நமது சூரிய மண்டலத்தின் நிலப்பரப்பு கிரகங்களைப் போன்ற சிறந்த வெப்பத்தை இந்த அருகாமையில் அவர்களுக்கு அளிக்கிறது.

நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்

நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்

முதலில், விஞ்ஞானிகள் தனித்துவமான அம்சங்களைக் கவர்ந்த மூன்று கிரகங்களைக் கண்டுபிடித்தனர். இந்த எக்ஸோபிளானெட்டுகள் சில சதவீத நீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தின. இரண்டு கிரகங்கள் உலர்ந்த மற்றும் பாறை உலகங்களாக இருக்கலாம் என்றும், நட்சத்திரத்திற்கு அருகாமையில் இருப்பதால் சிறிய அளவு நீரைக் கொண்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இதற்கிடையில், மூன்றாவது கிரகத்தின் நிறை 30% நீரால் ஆனது என்றும், இது ஒரு கடல் உலகமாக இருக்கலாம் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் குறிக்கிறது.

வாழக்கூடிய மண்டலத்தில் 'மறைக்கப்பட்ட' உலகம்

வாழக்கூடிய மண்டலத்தில் 'மறைக்கப்பட்ட' உலகம்

ஆச்சரியப்படும் விதமாக, இந்த குழு சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த நட்சத்திர அமைப்பில் இருக்கும் 'மறைக்கப்பட்ட' உலகங்களின் தடயங்களைக் கண்டறிந்தது. தொலைநோக்கி அவதானிப்புகள் இந்த அன்னிய நட்சத்திர அமைப்பின் மற்ற புறக்கோள்களைப் பற்றிய பல விவரங்களை அவிழ்க்க உதவியது, அதே நேரத்தில் இதுவரை யாரும் கண்டுபிடிக்காத மேலும் இரண்டு கிரகங்கள் இருப்பதை இது குறிக்கிறது.

'மறைக்கப்பட்ட' மற்றொரு கிரகம் கண்டுபிடிக்கப்படுமா?

'மறைக்கப்பட்ட' மற்றொரு கிரகம் கண்டுபிடிக்கப்படுமா?

அமைப்பில் நான்காவது 'மறைக்கப்பட்ட' கிரகத்தைக் கண்டுபிடித்த பிறகு, விஞ்ஞானிகள் இப்போது இன்னும் ஒரு உலகம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சாத்தியமான ஐந்தாவது கிரகம் ஒரு அதிர்ஷ்டமான டிராவாக இருக்கலாம்! என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த கிரகம் நட்சத்திர அமைப்பில் சரியான இடத்தில் அமைத்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், வாழக்கூடிய மண்டலத்தில் உள்ள கிரகம் வாழ்க்கையைப் பாதுகாக்கும் மற்றும் ஆதரிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Astronomers Spot New Planetary System With Hidden Exoplanets About 35 Light Years Away From Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X