நேரத்தை தன்னுடனேயே இழுத்துச்செல்லும் நட்சத்திரம்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..

|

ஐன்ஸ்டீனின் பொதுவான சார்பியல் கோட்பாட்டு கணிப்புகளில் ஒன்று, எந்தவொரு சுழலும் பொருளும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள இட-நேரத்தின் இழைகளை தன்னுடன் இழுத்துச் செல்கிறது என்பதாகும். இது "சட்ட-இழுத்தல்" (frame dragging) என்று அழைக்கப்படுகிறது.

750 மில்லியன்அமெரிக்க டாலர்

750 மில்லியன்அமெரிக்க டாலர்

அன்றாட வாழ்க்கையில் இந்த சட்ட-இழுத்தல் நிகழ்வு என்பது கண்டறிய முடியாதது மற்றும் பொருத்தமற்றது. ஏனெனில் இதன் விளைவு மிகமிக சிறயது. பூமியின் முழு சுழற்சியால் ஏற்படும் சட்ட-இழுத்தலை கண்டறிவதற்கு 750 மில்லியன்அமெரிக்க டாலர் மதிப்புள்ள கிராவிட்டி ப்ரேப் பி போன்ற செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன மற்றும் கைரோஸ்கோப்களில் கோண மாற்றங்களைக் கண்டறிதல் என்பது ஒவ்வொரு 100,000 வருடங்களுக்கும் மேலாக ஒரு டிகிரிக்கு சமமானது.

 ஈர்ப்பு ஆய்வகங்கள்

அதிர்ஷ்டவசமாக நமது பிரபஞ்சத்தில் இயற்கையாக நிகழும் பல ஈர்ப்பு ஆய்வகங்கள் உள்ளன. அங்கு இயற்பியலாளர்கள் ஐன்ஸ்டீனின் கணிப்புகளை நேர்த்தியாக விரிவாக ஆராய முடியும்

விவோ வி19, வி19ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்? முன்பதிவு எப்போது?விவோ வி19, வி19ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்? முன்பதிவு எப்போது?

நியூட்டனின் காலத்து வானியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும்

தற்போது வெளியாகியுள்ள ஒரு குழுவின் ஆராய்ச்சி முடிவுகளில், ரேடியோ தொலைநோக்கி மற்றும் தங்களுக்கு சுற்றிவரும் தனித்துவமான இரு சிறு நட்சத்திரங்களைப் பயன்படுத்தி, மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் சட்ட-இழுத்தல் நிகழ்வுகளுக்கான ஆதாரங்களை வெளியாகியுள்ளன.


இந்த நட்சத்திரங்களின் இயக்கம் நியூட்டனின் காலத்து வானியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும். ஏனெனில் அவை ஒரு திசைதிருப்பப்பட்ட விண்வெளி நேரத்தில் தெளிவாக நகர்கின்றன. மேலும் ஐன்ஸ்டீனின் பொதுவான சார்பியல் கோட்பாடு அவற்றின் பாதைகளை விளக்க வேண்டும்.

 துல்லியமான இயக்கம்

துல்லியமான இயக்கம்

பொது சார்பியல் என்பது நவீன புவிஈர்ப்பு கோட்பாட்டின் அடித்தளமாகும். இது நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் துல்லியமான இயக்கம் மற்றும் கால ஓட்டத்தை கூட விளக்குகிறது. அதன் குறைவாக அறியப்பட்ட கணிப்புகளில் ஒன்று, சுழலும் பொருட்கள் அவற்றுடன் இட-நேரத்தை இழுக்கின்றன. வேகமாகச் சுழலும் ஒரு பொருள் மிகப்பெரிய நிறையுடன் இருக்கும் போது, அதிக சக்திவாய்ந்த இழுவை திறனை கொண்டிருக்கும்.

24 மணி நேரம்

24 மணி நேரம்

இதற்கு மிகவும் பொருத்தமான ஒரு வகை பொருள் வெள்ளை குள்ள கிரகம் (white dwarf) என்று அழைக்கப்படுகிறது. இறந்த நட்சத்திரங்களிலிருந்து எஞ்சியிருக்கும் மையப்பகுதியான இவை, ஒரு காலத்தில் நமது சூரியனை விட பல மடங்கு நிறையை கொண்டிருந்தன. ஆனால் அப்போதிருந்து அவற்றின் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிட்டது.


தற்போது எஞ்சியிருப்பலை பூமியின் அளவிற்கு ஒத்ததாக இருக்கும் நிலையில், அதன் நிறையானது நூறாயிரக்கணக்கான மடங்கு அதிகமானது. வெள்ளை குள்ளர்கள் பூமியைப் போல சுழல்வதற்கு 24 மணி நேரம் எடுப்பதை விட, ஒவ்வொரு நிமிடமும் அல்லது இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும் இந்த வெள்ளை குள்ள கிரகங்கள் சுழலும்.

வானொலி தொலைநோக்கி,

வானொலி தொலைநோக்கி,

இத்தகைய வெள்ளை குள்ள கிரகத்தாலா ஏற்படும் சட்ட-இழுத்தல், பூமியை விட சுமார் 100 மில்லியன் மடங்கு சக்திவாய்ந்ததாக இருக்கும்.இது எல்லாமே நன்மைக்காகவே இருந்தாலும், நாம் அங்கு பறந்து சென்று அதைச் சுற்றி செயற்கைக்கோள்களை செலுத்த முடியாது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, இயற்கையானது வானியலாளர்களிடம் கருணை கொண்டு, பல்சர்கள் எனப்படும் நட்சத்திரங்களைச் சுற்றுவதன் மூலம் அவற்றைக் கண்காணிக்க அதன் சொந்த வழியைக் கொண்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சி.எஸ்.ஐ.ஆர்.ஓவின் பார்க்ஸ் வானொலி தொலைநோக்கி, ஒரு வெள்ளை குள்ள கிரகம் (பூமியின் அளவுடைய ஆனால் சுமார் 300,000 மடங்கு கனமானது) மற்றும் ஒரு ரேடியோ பல்சர் (ஒரு நகரத்தின் அளவுடைய ஆனால் 400,000 மடங்கு கனமானது) ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான நட்சத்திர ஜோடியைக் கண்டுபிடித்தது.

YouTube அதிரடி: போலி செய்திகளை தடுக்க புதிய ஏற்பாடு.!YouTube அதிரடி: போலி செய்திகளை தடுக்க புதிய ஏற்பாடு.!

ஒவ்வொரு நிமிடமும் 150 முறை சுழல்கிறது

ஒவ்வொரு நிமிடமும் 150 முறை சுழல்கிறது

வெள்ளை குள்ள கிரகங்களுடன் ஒப்பிடும்போது, ​​பல்சர்கள் ஒட்டுமொத்தமாக மற்றொரு வகையாக உள்ளன. அவை வழக்கமான அணுக்களால் ஆனவை அல்ல, ஆனால் நியூட்ரான்கள் ஒன்றாக இறுக்கமாக நிரம்பியுள்ளதுடன் நம்பமுடியாத அளவிற்கு அடர்த்தியாகின்றன. மேலும் எங்கள் ஆய்வில் உள்ள பல்சர் ஒவ்வொரு நிமிடமும் 150 முறை சுழல்கிறது.

5 மணி நேரத்திற்குள் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன

5 மணி நேரத்திற்குள் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன

இதன் பொருள் என்னவெனில் ஒவ்வொரு நிமிடமும் 150 முறை, இந்த பல்சரால் உமிழப்படும் ரேடியோ அலைகளின் கதிர்கள், பூமியில் உள்ள நமது நிலைப்பாட்டைக் கடந்திருக்கிறது. பல்சர் வெள்ளை குள்ள கிரகத்தை சுற்றிவருகையில், அதன் துடிப்பு நம் தொலைநோக்கிக்கு வரும்போது மற்றும் ஒளியின் வேகத்தை அறிந்துகொள்வதன் மூலம் அதன் பாதையை கண்டறிய இதைப் பயன்படுத்தலாம். இரண்டு நட்சத்திரங்களும் 5 மணி நேரத்திற்குள் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன என்பது இம்முறையில் தெரியவந்தது.

2001 ஆம் ஆண்டு முதல்

2001 ஆம் ஆண்டு முதல்

அதிகாரப்பூர்வமாக பி.எஸ்.ஆர் ஜே 1141-6545 என அழைக்கப்படும் இந்த ஜோடி, ஒரு சிறந்த புவிஈர்ப்பு ஆய்வகமாகும். இந்த அமைப்பின் சுற்றுப்பாதையை வரைபடமாக்குவதற்காக 2001 ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஆண்டுக்கு பல முறை பார்க்ஸுக்கு மலையேற்றம் செய்தோம். இது ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகிறது.

5 பல நூறு குவாட்ரில்லியன் கிலோமீட்டர் தொலைவில்

5 பல நூறு குவாட்ரில்லியன் கிலோமீட்டர் தொலைவில்

சுற்றுப்பாதைகளின் பரிணாமத்தை வரைபடமாக்குவது மிக பொறுமையாக செய்ய வேண்டும். ஏனெனில் இவற்றின் அளவீடுகள் துல்லியமானவை. பி.எஸ்.ஆர் ஜே 1141-6545 பல நூறு குவாட்ரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் (ஒரு குவாட்ரில்லியன் ஒரு மில்லியன் பில்லியன்), பல்சர் வினாடிக்கு 2.5387230404 முறை சுழல்கிறது என்பதையும், அதன் சுற்றுப்பாதை விண்வெளியில் வீழ்ச்சியடைவதையும் நாம் அறிவோம்.


இதன் பொருள் அதன் சுற்றுப்பாதையின் நிலை நிலையானது அல்ல, மாறாக அது மெதுவாக சுழல்கிறது.

Best Mobiles in India

English summary
Astronomers Have Caught a Star Literally Dragging Space-Time Around With It : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X