தெரியுது ஆனா தெரியல: புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு- "ஒளிரும் ராட்சச நட்சத்திரம்" சூரியனைவிட 100 மடங்கு!

|

25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நட்சத்திரத்தின் முழு விவரங்களை பார்க்கலாம்.

புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

பால்வெளி மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திரம் குறித்து பார்க்கையில், இது 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நட்சத்திரமானது 97% வரை குறைந்து பின்னர் மெதுவாக முன்பாக இருந்த பிரகாசத்திற்கு திரும்புகிறது. சிலி நாட்டில் உள்ள விஸ்டா என்ற தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.

விஸ்டா என்ற தொலைநோக்கி

விஸ்டா என்ற தொலைநோக்கி

சிலி நாட்டின் விஸ்டா என்ற தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் VVV-WIT-08 என்ற நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த நட்சத்திரம் ஆனது 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது எதிர்பாராத அளவில் மங்கி மீண்டும் பிரகாசமாக ஒளிர்கிறது. இந்த நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. இந்த நட்சத்திரம் ஒளிபுகா தூசி டிஸ்க் மூலம் சூழப்பட்டுள்ளது.

மங்கத் தொடங்கிய நட்சத்திரம்

மங்கத் தொடங்கிய நட்சத்திரம்

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் டாக்டர் லீ ஸ்மித் கூறுகையில், இது எங்கும் வெளியே வரவில்லை. 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மங்கத் தொடங்கிய நட்சத்திரம் அடுத்த 100 நாட்களில் கண்டறிவதற்கு முன்பாக அந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் மறைந்துவிட்டது.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகம்

ஐரோப்பிய தெற்கு ஆய்வகம்

சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தால் இயக்கப்படும் விஸ்டா தொலைநோக்கி சேகரித்த தரவுகளில் மர்மமான மங்கலான நட்சத்திரத்தை வானியலாளர்கள் கவனித்தனர். உலகின் பிரகாசத்தால் மாறுபடும் இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை தேடி ஒரு தசாப்த காலமாக ஒரு பில்லியன் நட்சத்திரங்களை இந்த கருவி கண்காணித்து வருகிறது.

வெளிச்சத்தை உள்வாங்கி பின் வெளியிடும்

VVV-WIT-08 என்ற நட்சத்திரம் துணைக் கோள் ஒன்றிணை சுற்றி வருவதால் அந்த கோளின் வெளிச்சத்தை உள்வாங்கி பின் வெளியிடும் தன்மையை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சூரியனை விட 100 மடங்கு பெரிதான மற்றொரு நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒளிரும் நட்சத்திரம் குறிதத்தும் மறைக்கப்படும் டிஸ்க் குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த டிஸ்க்கள் எங்கிருந்து வருகின்றன என்பதற்கான மர்மங்களை கண்டறியப்படும் எனவும் கூறப்படுகிறது.

பூமிக்கு மிக அருகில் ஒரு புதிய சிறுகோள்

பூமிக்கு மிக அருகில் ஒரு புதிய சிறுகோள்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தற்பொழுது பூமிக்கு மிக அருகில் ஒரு புதிய சிறுகோளைக் கண்டுபிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய சிறுகோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிறுகோளில் நீர் ஆத்திரம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிறுகோள் பற்றிய கூடுதல் சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

90 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிப்பு

90 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிப்பு

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள சிறுகோள், பூமிக் கோளில் இருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் மட்டுமே உள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இந்த புதிய சிறுகோளுக்கு நாசா விஞ்ஞானிகள் TOI-1231 b என்று பெயரிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய TOI-1231 b சிறுகோளானது பார்ப்பதற்கு அச்சு அசல் நெப்டியூன் கிரகம் போல் காட்சியளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகம் பூமியை விட 3 ½ மடங்கு பெரியது மற்றும் 134 டிகிரி பாரன்ஹீட் (57 செல்சியஸ்) வெப்பநிலையில் பூமியின் தரத்தால் சூடாக இருக்கிறது.

File Images

Pic Source: Social Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Astronomers Found a New Blinking Star at 25000 Light Years Away

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X