விண்வெளியில் நடைபயணம் செய்த 2 பேர்: பூமியில் இருந்த எடுத்த புகைப்படம்- அது இவர்கள்தானா?
ஜெர்மனியை சேர்ந்த வானியல் புகைப்பட கலைஞரான செபாஸ்டியன் வோல்ட்மர், எக்ஸ்பெடிஷன் 66 விண்வெளி வீரர்கள் விண்வெளி நடைப்பயணத்து கண்டு அதை புகைப்படமாக பதவு செய்துள்ளார். ஜெர்மனியின் ஒரு பிரகாசமான மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு ஐஎஸ்எஸ் தோன்றியதை கண்டு புகைப்படம் எடுத்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து செல்லும் விண்வெளி வீரர்களான ராஜா சாரி மற்றும் மத்தியாஸ் மவுரரை வானியற்பியல் நிபுணர்கள் படம் பிடித்துள்ளனர். விண்வெளி புகைப்பட நிபுணர் சமீபத்தில் பூமியில் இருந்து இரண்டு விண்வெளி வீரர்களின் படத்தை பதிவு செய்துள்ளார்.

நாசா விண்வெளி வீரர்கள்
நாசா விண்வெளி வீரர் ராஜா சாரி மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர் ஆகியோர் மார்ச் 23 அன்று, சுமார் ஏழு மணிநேரம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே செலவழித்துள்ளனர். அவர்கள் அங்கு எக்ஸ்ட்ராவெஹிகுலர் செயல்பாட்டை மேற்கொண்டனர். ஜெர்மனியில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகான ஒரு பிரகாசமான மாலை நேரத்தில் சர்வதேச விண்வெளி மையம் (ஐஎஸ்எஸ்) வானில் தோன்றியிருக்கிறது. இதை அறிந்த வானியியல் நிபுணர், சி11 எட்ஜ்எச்டி தொலைநோக்கி மூலம் அதை காட்சிப்படுத்த முயன்றுள்ளார். அப்போது விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே இருந்த விண்வெளி வீரர்களின் படத்தை தனது சொந்த ஊரான மவுரரில் இருந்து பதிவு செய்துள்ளார்.
புகைப்படத்தை பதிவு செய்த வோல்ட்மர்
இந்த புகைப்படத்தை பதிவு செய்த வோல்ட்மர்., "வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே எடுக்கக்கூடிய படத்தை நான் உருவாக்கியது போல் உணர்கிறேன் என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஐஎஸ்எஸ் (சர்வதேச விண்வெளி மையம்) பாஸின் படம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர் டாக்டர். மத்தியாஸ் மௌரரின் சொந்த ஊரில் இருந்து சி11 EdgeHD தொலைநோக்கி மூலம் நன்றாக பார்க்கும் சூழ்நிலையில் இருந்து எடுக்கப்பட்டது என வோல்ட்மர் குறிப்பிட்டார்.

விண்வெளி வீரர்கள் எங்கு இருக்கிறார்கள்
வோல்ட்மர் முதன்முதலில் ஜெர்மனியில் உள்ள உள்ளூர் பத்திரிகைகளுக்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டார். இவர் இதே படத்தை இணையதளத்தில் பகிர்ந்து விண்வெளி வீரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி பேசினார். இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து விண்வெளி நடைப்பயணம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு புகைப்பட கலைஞர் பிலிப் ஸ்மித் வோல்ட்மரை தொடர்பு கொண்டு பேசினார்.
நாசா லைவ் ஸ்ட்ரீமிங்
அதில் படத்தில் கண்டறியக்கூடியவர் சாரி என்பவர் என ஸ்மித் வோல்ட்மரிடம் குறிப்பிட்டதாக தனது பதிவில் கூறினார். ஸ்மித் "Canadarm2" என்ற ரோபோடிக் கையில் சாரியைக் கவனித்துள்ளார் தொடர்ந்து நாசா லைவ் ஸ்ட்ரீமிங்-ல் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து இரண்டையும் இணைத்து ஒரு படத்தை உருவாக்கினார். தொடர்ந்து வோல்ட்மர் டுவிட்டரில் இந்த இணைப்பு படத்தை வெளியிட்டார். இதில் இரண்டு விண்வெளி வீரர்களின் நிலைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே இரண்டு வீரர்கள் நடக்கும் முதல் படம் இதுவாக இருக்கலாம் என வோல்ட்மர் பதிவிட்டார்.

பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம்
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
Source: wionews.com


Click it and Unblock the Notifications








