Home
News

ஏன் 45 ஆண்டுகளாக நிலவிற்கு யாரும் போகவில்லை? பகீர் காரணங்கள்!

"சந்திரனில் ஒரு நிரந்தர மனித ஆராய்ச்சி நிலையம் அமைப்பது என்பது சாத்தியமான ஒரு நடவடிக்கையாகும், அது மூன்று நாட்கள் என்கிற தொலைவில் தான் உள்ளது.

சந்திரனில் 14 மனிதர்களை தரை இறக்கியது நாசாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று ஆகும். ஆனால், அது மட்டும் தான் நாசாவின் மிகப்பெரிய சாதனை என்று கூறிவிட முடியாது. அதனை தாண்டிய பல சாதனைகளை நாசா நிகழ்த்தியுள்ளது.

ஏன் 45 ஆண்டுகளாக நிலவிற்கு யாரும் போகவில்லை? பகீர் காரணங்கள்!

அப்போலோ 17 விண்கலத்தில் வழியாக, நிலவில் தரை இறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவு பாறைகளை சேகரித்தனர், புகைப்படங்கள் எடுத்தனர், சில பரிசோதனைகளை நடத்தினர், சில கொடிகளை நிலை நிறுத்தினர், பின் வீட்டிற்கு (பூமிக்கு) திரும்பினர். அந்த தரை இறங்கலுக்கு பின், கடந்த 45 ஆண்டுகளாக பூமியின் தூசி நிறைந்த இயற்கையான செயற்கைக்கோளுக்கு மனிதர்கள் திரும்பி செல்ல ஏராளமான காரணங்கள் இருந்தனர்.

யாருமே நிலவின் பக்கம் போகவில்லை. ஏன்?

யாருமே நிலவின் பக்கம் போகவில்லை. ஏன்?

உதாரணமாக, சந்திரனில் ஆய்வுகூடம் கட்டமைக்கலாம். அதனை பிற கிரங்களுக்கு செல்ல உதவும் எரிபொருள் மையமாக கூட பயன்படுத்திக் கொள்ளலாம், முன்னோடியில்லாத விண்வெளி தொலைநோக்கிகள் உருவாவதற்கு வழிவகுக்கலாம், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கையை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கலாம், எல்லாவற்றிக்கும் மேலாக, பூமி மற்றும் சந்திர உருவாக்கம் பற்றிய நீண்டகால விஞ்ஞான புதிர்களை தீர்க்கலாம். இப்படியெல்லாம் பல காரணங்கள் இருக்க யாருமே நிலவின் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கவில்லை, போகவில்லை. ஏன்?

யாரையும் கொல்லப்போவதும் இல்லை!

யாரையும் கொல்லப்போவதும் இல்லை!

"சந்திரனில் ஒரு நிரந்தர மனித ஆராய்ச்சி நிலையம் அமைப்பது என்பது சாத்தியமான ஒரு நடவடிக்கையாகும், அது மூன்று நாட்கள் என்கிற தொலைவில் தான் உள்ளது. இதில் தவறாக நடப்பதற்கு ஒன்றுமில்லை, நாம் யாரையும் கொல்லப்போவதும் இல்லை" என்கிறார் முன்னாள் விண்வெளி வீரர் கிறிஸ் ஹேட்ஃபீல்ட். இருந்தும் கூட ஏன் போகவில்லை என்பதற்கான பல காரணங்களை விண்வெளி வீரர்கலும் மற்றும் பிற விண்வெளி வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள். அவைகள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளதா? இல்லையா? என்கிற பொறுப்பை உங்கள் கைகளிலேயே விட்டு விடுகிறோம்.

காரணம் 01 - செங்குத்தான செலவு :

காரணம் 01 - செங்குத்தான செலவு :

கடந்த நான்குக்கும் மேலான தசாப்தங்களாக நிலவிற்கு போகாததற்கு - அதற்கான செலவு தான் என்கின்றனர் சிலர். எந்தவொரு விண்வெளி திட்டத்திற்கும் செலவு ஆகத்தான் செய்யும், இருந்தாலும் நிலவு அருகாமையில் இருக்கும் காரணத்தினால் நிலவிற்கு பயணம் மேற்கொள்ளும் போது, அதில் மனிதர்களையும் ஈடுபடுத்த வேண்டியதாக இருக்கும். இந்த இடத்தில தான் செலவு ஒரு பிரதான காரணமாக உருவெடுக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூலம் கையெழுத்திட்ட ஒரு சட்டமானது, நாசாவின் வருடாந்திர பட்ஜெட் ஆனது சுமார் 19.5 பில்லியன் டாலர்கள் என்கிறது, அது 2019 ஆம் ஆண்டில் 19.9 பில்லியன் டாலர்களாக உயருமாம்.

செலவு என்று கூறுவதெல்லாம் ஒரு நிஜமான காரணமா?

செலவு என்று கூறுவதெல்லாம் ஒரு நிஜமான காரணமா?

மறுகையில், நாசாவின் கடந்த கால வரவு செலவுடன் ஒப்பிடும் போது, இன்றைய வரவு செலவு திட்டமானது மிகவும் குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டிற்கு, கடந்த 2005 ஆம் ஆண்டின் நாசாவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது, சந்திரனுக்கு மீண்டும் போவதற்கான செலவு, சுமார் 104 பில்லியன் டாலர் (இன்றைய தேதிக்கு 33 பில்லியன் டாலர்கள்) ஆகும் என்கிறது. ஆனால் நாசாவின் கடந்த கால விண்வெளி ஆராய்ச்சியான அப்பல்லோ திட்டங்களுக்காக செய்யப்பட்ட செலவு என்ன தெரியுமா? இன்றைய தேத்திக்கு சுமார் 120 பில்லியன் டாலர்கள் ஆகும்.

காரணம் 02 - ஜனாதிபதிகளின் பிரச்சனை:

காரணம் 02 - ஜனாதிபதிகளின் பிரச்சனை:

டிரம்ப் நிர்வாகத்தின் "உடனடி குறிக்கோளின்" படி, வருகிற 2023 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இருப்பார்கள். அதாவது 2013 ஆம் ஆண்டு என்றால், டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரின் இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவு காலம் ஆகும். இந்த் இடத்தில் ஒரு முக்கிய பிரச்சனை உள்ளது - அதுதான் பாகுபாடற்ற அரசியல் பித்தலாட்டம்.

"இதெல்லாம் வெறும் பேச்சுதான்"..!

"எதிர்காலத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு (நாசா - அமெரிக்க அரசாங்கம்) இடையே நடக்கப்போகும் விஷயத்தை முன்னறிவிப்பாக கூறும் ஒரு ஜனாதிபதியை ஏன் நம்ப வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார், ஹாட்ஃபீல்ட். மேலும் "இது வெறும் பேச்சுதான்." என்றும் விமர்சித்து உள்ளார். மறுகையில், விண்வெளியில் ஒரு வருடம் கழித்த விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி (டிரம்ப் பதவிக்கு முன்னர்), "எங்களது நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அதை நாங்கள் நிறைவேற்ற உதவும் அளவிற்கான நிதியை அடுத்த ஜனாதிபதி அளிப்பார் என்று நம்புகிறேன்" என்று எழுதியுளார்.

அதிபர் ஆனாலும் அரசியல்வாதி தானே!

அதிபர் ஆனாலும் அரசியல்வாதி தானே!

ஆகமொத்தத்தில் எந்தவொரு அமெரிக்க அதிபரும் நாசாவிற்கு சரியான வழிகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அதாவது, புஷ் கொடுத்த வேலையை (ஓரியன்) செய்ய நாசா அதிக அவிலான பணத்தை செலவழிக்க அதை ஒதுக்கிவிட்டு ஸ்பேஸ் வெளியீட்டு அமைப்பு ராக்கெட் சார்ந்த பணியில் கையெழுத்திட்டார் பாராக் ஒபாமா. பின் பதவி ஏற்ற டிரம்ப் எஸ்எல்எஸ் திட்டத்தை அகற்றவில்லை. ஆனால் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஒபாமாவின் இலக்குகளை மாற்றினார்.

காரணம் 03 - அரசியலுக்கு அப்பாற்பட்ட சவால்கள்:

காரணம் 03 - அரசியலுக்கு அப்பாற்பட்ட சவால்கள்:

நாசாவின் விண்வெளி ஆர்வலர்கள் சந்திரனில் ஒரு தளத்தை உருவாக்கலாம் என்பதை நம்புகிறார்கள். அதே சமயம் சந்திர மேற்பரப்பு ஆனது மனிதர்களுக்கு செழிப்பு தரும் சூழ்நிலைகளை கொண்டு இடமாக இருக்காது என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். பூமிக்கான நிலவு சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் என்கிற வயதுடைய ஒரு மரணப் பொறியாகும். அதைக் குறைத்து மதிப்பிடுவது என்பது முட்டாள்தனமாகும். எல்லாவற்றிக்கும் மேலாக நிலவின் மீதான மற்றொரு கவலை என்னவென்றால் - அங்கு விண்கல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

பாதி நேரம் தகிக்கும், பாதி நேரம் உறைக்கும்!

பாதி நேரம் தகிக்கும், பாதி நேரம் உறைக்கும்!

மேலும் நிலவானது, சூரியனின் கடுமையான கதிர்களை நேரடியாக எதிர்கொள்கிறது. ஏனெனில் சந்திரனில் பாதுகாப்பு வளிமண்டலம் எதுவும் கிடையாது. அதனால் மாதத்தின் 14.75 நாட்களுக்கு நிலவானது, சூரியன் நேரடி சூட்டில் தகிக்கும் மற்றும் அடுத்த 14.75 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பு ஆனது பிரபஞ்சத்தில் மிக குளிர்ந்த இடங்களில் ஒன்றாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Astronauts explain why nobody has visited the moon in more than 45 years: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X